முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்துவின் மறைவுக்குப் பின், அவரது வீட்டுப் பணிப்பெண் அளித்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. 

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் மூத்த மகன் ஆன மு.க முத்து நேற்று காலமானார். அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பிறகு தகனம் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது வீட்டு பணிப்பெண் கொடுத்த பேட்டி வைரலாகி வருகிறது. தனியார் சேனலுக்கு கொடுத்த பேட்டியில், "கூட இருந்தேனே நான்தான என் மேலத உயிர் போச்சு. நான் வந்ததுல இருந்து ஐயாவை நல்லா பாத்துக்கறேன். ஏன் கூட போறந்த பொறப்பு மாதிரி நான் அவரை பார்த்துக்கிட்டேன்.

மு.க முத்து மறைவு

நிக்கும்போது டைபர மாட்டுனாரு. டைபர மாட்டும்போது எனக்கு மயக்கமாகுதுப்பா அப்படின்னாரு. அவரை தூக்கி கட்டல் மேல உட்கார வைக்கும் போது அவரு கழுத்து எல்லாம் இப்படி போயிடுச்சு. கஞ்சி எடுத்து நான் மூணு வாய் ஊட்டுனேன். மூணு வாய் ஊட்டி நாலாவது வாய்க்கும் நின்னு போச்சு. நான் வந்து ரெண்டு வருஷத்துக்கு முன்ன அங்க வேலை செய்தேன். அதுக்கப்புறம் நின்னுட்டேன். அப்புறமா திரும்பி கூப்பிட்டாங்க வந்தேன். நான் வந்ததுல இருந்து ஐயாவை நல்லா பாத்துக்கறேன். ஏன் கூட போறந்த பொறப்பு மாதிரி நான் அவரை செய்தேன். நல்லாதான்பா இருந்தாரு நல்லா இருந்தாரு நாலு ஆப்பயால் சாப்பிடுவாரு நான்தான் போட்டு கொடுப்பேன். கஞ்சி குடிப்பாரு. மதியானத்துக்கு மேல சாப்பிடுவாரு. நைட்டுக்கு அதுமாதிரி டிபன் சாப்பிடுவாரு.

மு.க முத்து வீட்டு பணிப்பெண் பேட்டி

இப்ப ஒரு வாரமாதான் அவரு ரொம்ப சீரியஸ் ஆயிட்டாரு. ரொம்ப சீரியஸ் ஆயிட்டாருனா சாப்பிட முடியல. அவருக்கு தொண்டை முழுங்க முடியாம சாப்பிட முடியாம ஆயிடுச்சு. அவங்களோட பொண்ணு வருவாங்க. இந்த மாதிரி வாசக்கால புடிச்சுக்க நின்னாரு. நிக்கும்போது டைபர மாட்டுனாரு. டைபர மாட்டும்போது என்ன சொன்னாரு எனக்கு மயக்கமா இருக்குதுப்பா அப்படின்னாரு. இவரு டக்குன்னு தூக்கிட்டாரு தூக்கி கட்டில் மேல உடாந்து இருக்கும் போது அவரு கழுத்துல்லாம் இப்படி போயிடுச்சு. இவரு உடனே என்ன கூப்பிட்டாரு நான் ஓடுனேன் மேல ஓடுனேன். நான் ஓடி இப்படி என் மேல இப்படி சாத்திக்கனேன். இவரு ஒரு மூணு மூன்று கஞ்சி ஊட்டுனாரு. அது அந்த கஞ்ச குடிச்சிட்டாரு.

அந்த கஞ்சி எடுத்து நான் மூணு வாய் ஊட்டுனேன். மூணு வா ஊட்டி நாலாவது வாய்க்கும் நின்னு போச்சு. அப்புறமா ஓடி வந்து நான் அம்மா கிட்ட சொன்னேன். நம்ம அம்மா ஐயாக்கு என்னன்னு தெரியலமா எனக்கு படுபடுன்னு வருது ஓடமா அப்படின்னு சொன்னேன். என்னன்னு தெரியலமா ஐயா ஒரு மாதிரி இருக்கறாரு. விரச்சு இருக்குது கை கால் எல்லாம் அப்படின்னு சொல்லும்போது அவங்க நம்பல, நீங்க வந்து பாருங்க அப்படின்னே. உடனே சொல்லிட்டு திரும்பி நான் ஓடுனேன் மேல. திரும்பி ஓடி நாங்க ரெண்டு பேரும் அவருக்கு சட்டைல்லாம் சட்டை போடுவேன்.

எல்லாரும் வந்தாங்க

சட்டை போடணும்னு இவரு தூக்கி சொல்லி இவரு சட்டை மாட்டிவிட்டாரு. நான் ஒரு பக்கம் மாட்டிவிட்டு சட்டை போட்டேன். அவங்க மருமகன் அவங்க பொண்ணு அப்புறம் வேற யாரோ நிறைய பேர் வந்துட்டாங்க அவங்க போன் அடிச்சு அடிச்சு பாத்தாங்க யாரும் போன் எடுக்கல அதுக்கு மேல எல்லாருக்கும் மெசேஜ் அனுப்புனாங்க பாத்துட்டு எல்லாரும் வந்துட்டாங்க. பொண்ணு வந்துச்சு, எல்லாமே வந்துட்டாங்கப்பா. ஐயாவுக்கு நான்தான் எல்லாம் பாத்துட்டு இருந்தேன். பாத்ரூம் போறதுல இருந்து டேப்லெட் கொடுக்கறதுல இருந்து எல்லாமே நான்தான் செஞ்சிட்டு இருந்தேன். கஞ்சி கொடுக்கறதுல இருந்து எல்லாமே செஞ்சிட்டு இருந்தேன். 

இன்னைக்குதான் ரொம்ப மோசமா நிலைமை ரொம்ப மோசமா போச்சு. காலையில வந்து காலைல கதவு ஓபன் பண்ணி விட்டேன். ஓபன் பண்ணி விட்ட உடனே பசிக்குதுன்ட்டாரு. செத்த எரிங்கப்பா குளிச்சிட்டு சாப்பிடலாம்னு சொன்னேன். கொண்டு போய் பாத்ரூம் பாத்ரூம கூட்டிட்டு போனேன். உட்கார வச்சு பாத்ரூம் போவிட்டு பல்லு வளக்கிட்டு பேம்பர்ச மாத்திவிட்டு இருக்கும் போது மயக்கம் வந்துருச்சு. அதோட கொஞ்ச கட்டில உட்கார வச்சேன். நடந்துருக்கு மயக்க ஏற்கனவே ஏஞ்சுச்சு உட்கார்ந்து கொஞ்ச நேரம் கட்டில உட்கார்ந்திருப்பாரு.

பெண்மணி வைரல் வீடியோ

அஞ்சு நிமிஷம் 10 நிமிஷம் உட்காந்துருப்பாரு. அதுக்கப்புறம் கொஞ்சம் இதான நிந்தானம் வந்த பிறகுதான் கூட்டிட்டு போ சொல்லுவாரு. கூட்டு போயிட்டு எல்லாம் பாத்ரூம் கிளீன் பண்ணிட்டு பல்லு எல்லாம் விளக்கி விட்டு எல்லாம் கிளியர் பண்ணிட்டு அதுக்கப்புறம்தான் பெட் கூடு வருவோம். சாப்பாடு நான் போய் காலைல கொண்டு போய் டிபன் கல வச்சிட்டு வருவேன். மறுபடியும் புட் ஆர்டர் பண்றாங்கல்ல அவங்க வண்டில இங்க வந்து இறங்கிடுவேன். கொண்டு வச்சு சாப்பாடு விட்டு கொடுத்துட்டு டேப்லெட் கொடுத்துட்டு படுக்க வச்சிட்டு வருவேன். ஈவினிங் நாலர மணிக்கு பால் கொடுப்பேன். 

ஒரு மில்க் ஒன்னு இருக்கு பவுடர் அது வாட்டர்ல கலந்துவிட்டு கொடுப்பேன் நாலர மணிக்கு. குடிச்சிட்டு படுப்பாரு அதோட நைட் வந்து 7 மணிக்கு கஞ்சி கொடுப்பேன். அவரு கேப்பாரு பயமா இல்லையா, ஒன்னும் இல்லையான்னு கேப்பாரு. அழகா படுக்க வச்சிட்டு போர்வ போட்டு போட்டுவிட்டு நான் வந்து என் ரூமக்கு போவேன். பக்கத்துலயே என் ரூம். நேத்து நைட்லாம் ஒன்னும் நடக்கல. அவர் சாப்பிட்டாரு, மாத்திரை கொடுத்தேன் சாப்பிட்டாரு. ஃபர்ஸ்ட் நான்தான் பாத்தேன். காலைல 6:00 மணிக்குதான் கதவ துறப்பேன். இங்க வந்து லைட்ட ஆஃப் பண்ணிட்டு டோர திறந்து விட்டுட்டு அவரு ரூம் திறந்து விடுவேன்” என்று அப்பெண்மணி கூறியுள்ளார்.