கெனிஷாவை அழைத்துக் கொண்டு இலங்கை சென்ற ரவி மோகன்: என்ன காரணம் தெரியுமா? புதிய பிளான்!
Ravi Mohan and Kenisha Francis Meet Vijitha Herath : கெனிஷா உடன் ரவி மோகன் இலங்கை சென்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இலங்கை சென்ற ரவி மோகன் மற்றும் கெனிஷா பிரான்சிஸ்
சமீப காலமாக நடிகர் ரவி மோகன் தொடர்பான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தனது மனைவி ஆர்த்தியை ரவி மோகன் திடீரென்று விவாகரத்து செய்வதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு தொடர்பான விவாகரத்து தொடர்பான காரணங்களும் பலரையும் அதிர்ச்சியடைச் செய்தது.
கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன்
அதுமட்டுமின்றி பாடகியான கெனிஷா பிரான்சைஸ் உடனான தொடர்பு காரணமாக ரவி மோகன் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக சமூக வலைதளங்களில் பேச்சு அடிபட்டது. அதற்கேற்பவும் ரவி மோகன் மற்றும் கெனிஷா இருவரும் ஒன்றாக உலா வரும் காட்சிகள் வெளியானது. மேலும், இருவரும் ஒன்றாக கோயிலுக்கு செல்வது, திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது என்று ஜோடியாகவே சுற்றி வந்தனர். இருவரும் அருகருகில் அமர்வது, கையை பிடித்துக் கொண்டு சுற்றுவது என்று எல்லாமே நடந்தது.
ரவி மோகன் மற்றும் கெனிஷா
மேலும், இருவரும் தங்களது உறவு குறித்து தனித்தனியாகவும் பேட்டி கொடுத்தனர். ரவி மோகன் குறித்து ஆர்த்தி பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இப்படி ரவி மோகனச் சுற்றிலும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பல சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில் ரவி மோகன் இப்போது இலங்கை சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
ரவி மோகன் படங்கள்
ஆனால், இலங்கைக்கு அவர் மட்டும் தனியாக செல்லவில்லை. அவருடன் இணைந்து கெனிஷாவும் சென்றுள்ளார். இருவரும் இலங்கை சென்ற நிலையில் இலங்கை வெளியுறவுத் துறை விஜித் ஹெராத்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு இலங்கையில் இசைக் கச்சேரி நடத்துவது தொடர்பாக நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெனிஷா ஏராளமான ஆல்பம் பாடல்களில் பாடியிருக்கிறார்.
Had an incredible meeting with renowned Indian actor/producer @iam_RaviMohan and sensational singer Keneesha Francis to discuss groundbreaking projects in film production and musical concerts. These initiatives are set to boost Sri Lanka’s film tourism, promote our rich cultural… pic.twitter.com/TTunwQ2xLG
— Vijitha Herath (@HMVijithaHerath) July 19, 2025
ரவி மோகன் நடிக்கும் படங்கள்
மேலும் பல இசை நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று பாடியிருக்கிறார். இந்த நிலையில் தான் இப்போது ரவி மோகனின் அறிவுரை மற்றும் ஆலோசனையின் பெயரில் இருவரும் இப்போது இலங்கை சென்று அங்கு இசைக் கச்சேரி நடத்துவது குறித்து பேசியிருக்கின்றனர். விரைவில் இலங்கையில் இசை நிகழ்ச்சி நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ரவி மோகன் நடிப்பில் கராத்தே பாபு, பராசக்தி, ஜெனீ, தனி ஒருவன் 2 ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும், சமீப காலமாக ரவி மோகன் நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன. ஹிட் கொடுக்க வேண்டிய நிலையில் ரவி மோகன் தனது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.