Ajith Kumar Met an Car Accident at Italy GT4 Car Race : நடிகர் அஜித் குமாரின் கார் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

Ajith Kumar Met an Car Accident at Italy GT4 Car Race : இத்தாலியில் நடைபெற்று வரும் ஜிடி 4 கார் ரேஸ் போட்டியில் அஜித் குமார் சென்ற கார் நின்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் சினிமாவிலிருந்து ஒதுங்கி கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். பைக் மற்றும் கார் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட அஜித் கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் தொடரில் பங்கேற்றார். இதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக துபாயில் தங்கி பயிற்சியும் மேற்கொண்டார். 

கார் ரேஸ்க்காக தன்னுடைய் காரையும் வடிமைத்தார். துபாய் கார் ரேஸ் தொடங்குவதற்கு முன்னதாக அஜித் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பிரேக் ஃபெயிலியர் காரணமாக கார் விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விதமாக இந்த கார் விபத்தில் அஜித்திற்கு எதுவும் நடக்கவில்லை. இதைத் தொடர்ந்து இந்த கார் ரேஸிலிருந்து விலகுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்றார்.

இதில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தார். துபாய் கார் ரேஸ் சீரிஸைத் தொடர்ந்து போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்றார். இதில் எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியுள்ளார். பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் அஜித்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால், அவரது கார் மட்டுமே பயங்கரமாக சேதமடைந்துள்ளது.

இந்த நிலையில் இப்போது இத்தாலியில் நடைபெற்று வரும் ஜிடி 4 கார் ரேஸ் போட்டியின் 2 ஆவது நாளில் அஜித் குமார் சென்ற கார் டிராக்கில் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. அஜித் காருக்கு முன்னே சென்ற கார் திடீரென்று டிராக்கில் நின்றதால் அஜித் குமார் கார் நின்று கொண்டிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜித்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் அஜித் கார் சேதமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் குமார் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ ஆகிய படங்கள் வெளியான நிலையில் குட் பேட் அக்லீ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படங்களைத் தொடர்ந்து இதுவரையில் எந்த படத்திலும் அஜித் கமிட்டாகவில்லை. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் படத்தை இயக்க ஆர்வமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.