- Home
- Cinema
- லட்சியத்திற்காக கல்யாணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழும் சினிமா வெறியன் எஸ் ஜே சூர்யா பர்த்டே ஸ்பெஷல்!
லட்சியத்திற்காக கல்யாணமே செய்யாமல் முரட்டு சிங்கிளாக வாழும் சினிமா வெறியன் எஸ் ஜே சூர்யா பர்த்டே ஸ்பெஷல்!
S J Suryah not Married Yet Reason Behind His Single Life : தனது லட்சித்திற்காக 50 வயதை கடந்தும் கூட இப்போது வரையில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் நடிகரும், இயக்குநருமான எஸ் ஜே சூர்யா இன்று தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

எஸ் ஜே சூர்யா பிறந்தநாள்
S J Suryah not Married Yet Reason Behind His Single Life : நடிகரும், இயக்குநருமான எஸ் ஜே சூர்யா இன்று தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 1968ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதி தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லுரில் பிறந்தார். சென்னை லயோலா கல்லூரியில் படித்த எஸ் ஜே சூர்யா இப்போது நடிப்பு அரக்கன் என்றும் அழைக்கப்படுகிறார்.
ஏன் இன்னும் எஸ் ஜே சூர்யா திருமணம் செய்து கொள்ளவில்லை
பாக்யராஜ், பாரதிராஜா, வசந்த் போன்ற இயக்குனர்களிடம் பணியாற்றிய எஸ்.ஜே. சூர்யாவுக்கு சிறு வேடங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பாண்டியராஜன், அமலா ஆகியோர் நடித்த நெத்தியடி படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். இந்தப் படத்தைப் போன்று கிழக்கு சீமையிலே, ஆசை, குஷி ஆகிய படங்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்தார். அதன் பிறகு திரைக்கு வந்த நியூ படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். 1999-ல் அஜித்தை வைத்து 'வாலி' படத்தை இயக்கி வெற்றி பெற்றார்.
எஸ் ஜே சூர்யா திருமணம் செய்யாததற்கு என்ன காரணம்
எஸ்.ஜே. சூர்யா, நடுத்தர குடும்பத்தில் பிறந்து, ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டே சினிமா படிப்பை முடித்தார். ஹீரோவாக ஆசைப்பட்டவர், நிதி நெருக்கடியால் உதவி இயக்குனரானார். குறைந்த சம்பளத்தில் 'வாலி'யில் பணியாற்றிய எஸ்.ஜே. சூர்யா, 'குஷி' படத்திற்கு லட்சங்களில் சம்பளம் பெற்றார். அட்வான்ஸ் தொகையை உதவி இயக்குனர்களுக்கு பைக் வாங்கிக் கொடுத்தார். அதில் ஏ.ஆர். முருகதாஸும் ஒருவர்.
எஸ் ஜே சூர்யா நடித்த படங்கள்
நடிகராக மாறிய எஸ்.ஜே. சூர்யா, 'நியூ' படத்தை இயக்கி, தயாரித்து, நடித்தார். ஹீரோவாக நடித்த படங்கள் வெற்றி பெறாததால், சிறப்புத் தோற்றங்களில் நடித்தார். 'இறைவி' படத்தில் அவரது நடிப்பு பேசப்பட்டது. 'ஸ்பைடர்', 'மெர்சல்' படங்களில் வில்லனாக நடித்தார். தற்போது ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடிக்கிறார். 'ராயன்', 'கேம் சேஞ்சர்' உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். வில்லனாக நடித்து வரும் இவருக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.
எஸ் ஜே சூர்யா வில்லன் ரோல்
'இறைவி' படத்திற்குப் பின் கோடிகளில் சம்பளம் வாங்கும் எஸ்.ஜே. சூர்யா, தற்போது ஒரு படத்திற்கு 5 முதல் 7 கோடி வரை சம்பளம் பெறுகிறார். சென்னை மற்றும் சொந்த ஊரில் சொத்துகள், சொகுசு கார்கள் வைத்திருக்கும் எஸ்.ஜே. சூர்யாவின் சொத்து மதிப்பு 150 கோடி எனக் கூறப்படுகிறது.
எஸ் ஜே சூர்யா முதல் படம் நெத்தியடி
இந்த நிலையில் தான் தனது லட்சத்திற்காக எஸ் ஜே சூர்யா இதுவரையில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். இது குறித்து அவரே ஒரு வீடியோவிலும் திருமணம் குறித்து பேசியிருந்தார். அதில், லட்சத்திற்காக அப்படியே ஓடிக் கொண்டிருந்தேன். அதனால், திருமணத்தைப் பற்றி யோசிக்கவில்லை என்றார். மேலும், சினிமாவில் இன்னும் தனது லட்சியத்தை அடையவில்லை என்றும் கூறியிருந்தார்.
எஸ் ஜே சூர்யாவின் குஷி படம்
சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோரைத் தொடர்ந்து சீனியர் நடிகர் யார் என்றால் அது எஸ் ஜே சூர்யாவாகத்தான் இருக்கும். அவருக்கு இன்று 57ஆவது வயதாகிறது. அவர் இன்று தனது 57ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பிறந்தநாளை முன்னிட்டு தான் இயக்கி நடித்து வரும் கில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.