- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG Test: இந்திய அணிக்கு மிகப்பெரும் சிக்கல்! மேட்ச் வின்னிங் பவுலர் காயம்!
IND vs ENG Test: இந்திய அணிக்கு மிகப்பெரும் சிக்கல்! மேட்ச் வின்னிங் பவுலர் காயம்!
இந்திய அணி வீரர் ஆகாஷ் தீப்புக்கு காயம் ஏற்பட்டதால் அவர் 4வது டெஸ்ட்டில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது.

IND vs ENG Test: Akash Deep Injured
இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. லார்ட்ஸில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இரு அணிகள் இடையிலான 4வது டெஸ்ட் போட்டி ஜூலை 23 ஆம் தேதி இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டு மைதானத்தில் தொடங்கவுள்ளது.
பும்ரா விளையாடுவாரா?
இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் நிலையில், 4வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இங்கிலாந்து தொடருக்கு முன்னரே, பும்ராவின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவர் ஐந்து டெஸ்டுகளில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அணியின் தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
ஆகாஷ் தீப்புக்கு காயம்
ஜஸ்பிரித் பும்ரா விளையாடிய முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட்களில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதே வேளையில் அவர் விளையாடாத இல்லாத இரண்டாவது டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.2வது டெஸ்ட்டில் பும்ரா இல்லாத இடத்தில் ஆகாஷ் தீப் சிறப்பாக விளையாடி 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
இது இந்தியாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. ஆனால், மூன்றாவது டெஸ்டில் அவருக்கு சோர்வு ஏற்பட்டதுடன், சிறிய முதுகுவலி காரணமாக களத்தை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவித்தன. இதனால் 4வது டெஸ்ட்டில் ஆகாஷ் தீப் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் கூறுகின்றன.
பும்ராவின் அனுபவம் கைகொடுக்கும்
இதனால் 4வது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவது உறுதியாகி உள்ளது. பும்ராவின் அனுபவமும், விக்கெட் வீழ்த்தும் திறனும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அணிக்குத் தேவைப்படும். உதவிப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்ஷேட், "கடைசி இரண்டு டெஸ்டுகளில் ஒரு போட்டிக்கு பும்ரா இருப்பார் என்பது தெரியும். தொடர் மான்செஸ்டரில் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது என்பதால், அவரை விளையாட வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று கூறியுள்ளார்.