- Home
- Astrology
- Zodiac Signs: சனி பகவான் உருவாக்கும் கேந்திர திரிகோண யோகம்.. 2 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்
Zodiac Signs: சனி பகவான் உருவாக்கும் கேந்திர திரிகோண யோகம்.. 2 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்
ஜோதிட சாஸ்திரத்தின் படி கேந்திர திரிகோண யோகம் என்பது மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த யோகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

2025-ல் சனி பகவான் கேந்திர திரிகோண ராஜயோகம்
ஜோதிட சாஸ்திரங்களின்படி சில யோகங்கள் மற்றும் ஸ்தானங்கள் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் அள்ளி வழங்குகின்றன. அந்த வரிசையில் பல அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும் யோகமாக கேந்திர திரிகோண யோகம் அமைந்துள்ளது. ஒருவரின் ஜாதகத்தில் இந்த யோகம் அமையப்பெற்றால் அது அவருக்கு அபரிமிதமான அதிர்ஷ்டம், புகழ், செல்வம், அதிகாரம் மற்றும் மன நிறைவைத் தரும் என நம்பப்படுகிறது. ஜாதகத்தில் கேந்திர ஸ்தானங்களுக்கு (1, 4, 7, 10) உரிய கிரகங்களும், திரிகோண ஸ்தானங்களுக்கு (1, 5, 9) உரிய கிரகங்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்ளும் பொழுது கேந்திர திரிகோண யோகம் உருவாகிறது. கேந்திர திரிகோண யோகம் உருவாவதால் ஏற்படும் அதிர்ஷ்டம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சனி பகவனானின் மீன ராசி பெயர்ச்சியால் உருவாகும் யோகம்
12 ராசிகளில் சனி பகவான் முக்கிய ராசியாக விளங்கி வருகிறார். அவரது சஞ்சாரங்கள் அனைத்து ராசிகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஜோதிடத்தின் படி தற்போது சனிபகவான் உருவாக்கிய கேந்திர திரிகோண ராஜயோகம் ஜோதிடத்தில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரவுள்ளது. இந்த யோகமானது கிரகங்களால் ஏற்படும் தீமைகளை எதிர்த்து போராடவும், நல்ல பலன்களை வழங்கவும் உள்ளது. தற்போது சனிபகவான் மீன ராசியில் இருந்து வருகிறார் ஜூலை 13 ஆம் தேதி முதல் அவர் வக்கிர நிலைக்கு நகர்ந்துள்ளார். இது சில ராசிகளில் திரிகோண ராஜ யோகத்தை உருவாக்கியுள்ளது. சனி பகவான் உருவாக்கிய இந்த கேந்திர திரிகோண ராஜயோகத்தால் இரண்டு ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர்.
ரிஷபம் மற்றும் மகரம்
சனிபகவான் மிக மெதுவாக பயணிக்க கூடிய கிரகம் என்பதால் அவர் உருவாக்கும் யோகங்கள் நீண்ட காலத்திற்கு பலனளிப்பதாக கூறப்படுகிறது. 2025 ஆம் ஆண்டில் சனிபகவான் மீன ராசியில் இருப்பதால் சில ராசிகளுக்கு அவர் கேந்திர திரிகோணத்தை யோகத்தை உருவாக்கி சிறப்பான பலன்களை அள்ளித் தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனிபகவான் மீன ராசியில் இருப்பதாலும் அதன் பார்வை மற்றும் அமைப்பு காரணமாகவும் ரிஷப ராசிகளுக்கு இந்த யோகம் சாதகமாக அமையும் என்று கூறுகின்றனர். ரிஷப ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் சனிபகவான் பார்வை விழுவதால் எதிர்பாராத அதிர்ஷ்டமும், பணவரவும், தொழில் முன்னேற்றமும் ஏற்படும் என கூறப்படுகிறது. மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியின் படியில் இருந்து விலகுவதால் அவர்களுக்கு நல்ல பலன்களையும், பண வரவுகளையும் சனிபகவான் அள்ளி தரவுள்ளார்.
விருச்சிக ராசிக்காரர்கள்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஐந்தாம் வீட்டில் சனிபகவான் கேந்திர திரிகோண யோகத்தை உருவாக்கித் தருகிறார். இதன் காரணமாக போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கவுள்ளது. ஐந்தாம் வீடு என்பது குழந்தைகள், கல்வி, அன்பு ஆகியவற்றை குறிக்கிறது. திரிகோண ராஜ யோகம் உருவாவதால் விருச்சிக ராசி காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் உருவாக உள்ளது. திருமணமானவர்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி மேலும் இரட்டிப்பாக உள்ளது. குடும்ப பொருளாதாரம், நிதி நிலைமையும் மேம்பட உள்ளது. அவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியான காலகட்டத்தை அனுபவிக்க உள்ளனர். திருமணமாகாதவர்களுக்கு பொருத்தமான துணை கிடைக்க உள்ளது. குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். காதல் கைகூடும். புது சொத்துக்கள் வாங்குவதற்கு சிறந்த காலம். நீண்ட கால நோயிலிருந்து விடுபடவுள்ளனர். கேந்திர திரிகோண யோகத்தால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக சூழல் அமைய உள்ளது.
தனுசு ராசிக்காரர்கள்
தனுசு ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண யோகம் பல நேர்மறையான மாற்றங்களை அளிக்க உள்ளது. சனிபகவானின் வக்ர இயக்கத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிட்ட உள்ளது. அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சியும் வெற்றி பெறும். வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் காண உள்ளனர். தொழில் செய்ய விரும்புபவர்களுக்கு இது சிறந்த நேரமாகும். புதிய ஒப்பந்தங்கள், புதிய தொழில்கள் மூலம் அவர்கள் மிகப்பெரும் லாபத்தை ஈட்டலாம். இதுவரை நிலவி வந்த ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் அவர்களுக்கு விலக உள்ளது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைவார்கள். கடின உழைப்பிற்காக அவர்கள் இரட்டிப்பு பலனைப் பெறுவார்கள். குடும்பத்தின் ஆரோக்கியம் மேம்படும். திருமணம் செய்ய நினைப்பவர்களுக்கு இது சாதகமான நேரம் ஆகும். சொந்த வீடு கட்ட நினைப்பவர்களுக்கு காரியம் கைகூடும். முதலீடுகளில் லாபம், நிதி நிலைமை பொருளாதாரம் ஆகிய அனைத்தும் மேம்படும்.
முக்கியமாக கவனிக்க வேண்டியவை
மேற்குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்களின் கணிப்பு மற்றும் இணையத்தில் கிடைக்கும் பொதுவான தகவல்களின் அடிப்படையிலானது. இது பொதுப் பலன்கள் மற்றும் பொதுவான வழிகாட்டுதல்கள் மட்டுமே. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதக அமைப்பை பொறுத்து இந்த பலன்கள் மாறுபடலாம். தசா புத்தி, கிரகங்களின் நிலை, யோகத்தின் வலு ஆகியவற்றைப் பொறுத்து பலன்கள் அமையும். உங்கள் ஜாதகத்தில் கேந்திர திரிகோண யோகத்தின் தாக்கத்தை தெரிந்து கொள்ள அனுபவமிக்க ஜோதிடரை அணுகி விரிவான ஆலோசனையைப் பெற வேண்டியது அவசியம். 2025 ஆம் ஆண்டு சனிபகவான் உருவாக்கும் இந்த கேந்திர திரிகோண யோகம் உழைப்பு மற்றும் நேர்மை உள்ளவர்களுக்கு நிச்சயம் நல்ல பலன்களையும், ராஜயோக வாழ்க்கையையும் அமைத்து கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.