- Home
- Astrology
- குரு சூரியனின் இரட்டை சக்தி.! மார்ச் முதல் 5 ராசிகளுக்கு வங்கி இருப்பு இரட்டிப்பாகும்.!
குரு சூரியனின் இரட்டை சக்தி.! மார்ச் முதல் 5 ராசிகளுக்கு வங்கி இருப்பு இரட்டிப்பாகும்.!
Jupiter Sun Conjunction 2026 : மார்ச் 2026-ல் குரு பகவான் மீன ராசியில் சூரியனுடன் இணைகிறார். சூரியன் குரு சேர்க்கை 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். அது குறித்து இங்கு காணலாம்.

Jupiter Sun Conjunction 2026
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சிகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மார்ச் 2026-ல், குரு தனது சொந்த வீடான மீன ராசியில் இருப்பார். சூரிய பகவானும் மீன ராசியில் இணைவதால் குரு ஆதித்ய யோகம் உருவாகிறது. இது 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு குரு-ஆதித்ய யோகம் தொழிலில் முன்னேற்றத்தை தரும். வியாபாரத்தில் நல்ல நிதி வளர்ச்சியைக் காணலாம். ஊழியர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் உருவாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த சேர்க்கை அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும். வேலையில்லாமல் இருந்து வருபவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். நேர்காணல் முடித்து காத்திருப்பர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு குழந்தைகள் மற்றும் கல்வித் துறையில் நல்ல செய்திகள் வரும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் எதிர்பார்க்கலாம். கலை, எழுத்துத் துறையில் புகழ் அதிகரிக்கும்.
மீனம்
இந்த சேர்க்கை மீன ராசியிலேயே நடப்பதால், அதிகப்படியான பலன்கள் மீன ராசியினருக்கு கிடைக்கும். உங்கள் ஆளுமைத் திறன் மேம்படும். குரு-ஆதித்ய யோகம் மன அமைதியைத் தரும். ஆரோக்கியம் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

