Tamil News live: மெட்ரோ ரயில் 2ம் கட்ட சுரங்கப்பாதை பணிகளை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்!

Tamil News live updates today on October 13 2022

சென்னையில் மெட்ரோ ரயில் 2 ஆம் கட்ட சுரங்கப்பாதை பணிகளை முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். சென்னை, மாதவரம் பால் பண்ணை அருகில், சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் வழித்தடம்-3 இன் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளில், மாதவரம் பால் பண்ணை மெட்ரோ நிலையத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ நிலையம் வரை 1.4 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

3:24 PM IST

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்..

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3-யின் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மாதவரம் பால் பண்ணை மெட்ரோ நிலையத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ நிலையம் வரை  1.4 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியினை அவர் தொடங்கி வைத்தார். மேலும் படிக்க

3:20 PM IST

இந்து மத பிரச்சனையால்... பொன்னியின் செல்வன் ரூ.500 கோடி வசூலிக்கப்போகுது - கொளுத்திப்போட்ட பார்த்திபன்

சின்ன பழுவேட்டரையராக நடித்திருந்த நடிகர் பார்த்திபன், இந்து மத சர்ச்சையால் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் மேலும் ரூ.100 கோடி வசூலிக்கும் என டுவிட்டரில் சூசகமாக தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

2:46 PM IST

பள்ளிக்கல்வித்துறையில் 2,849 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை.. முதலமைச்சர் இன்று வழங்கினார்..

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1  பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2489 நபர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.மேலும் படிக்க

2:40 PM IST

சமந்தாவுக்கு பதில் இவரா...? புஷ்பா 2-வில் அல்லு அர்ஜுன் உடன் ஐட்டம் டான்ஸ் ஆடப்போகும் விஜய், அஜித் பட நடிகை..!

தமிழில் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகையை புஷ்பா 2 படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

2:32 PM IST

திமுக நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் புறக்கணிக்க கூறி மிரட்டு கின்றனர்- பிடிஆர் வேதனை

திமுகாவில் சில நாட்களாக வரும்  தகவல் வேதனை தருகிறது. சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து மற்றவர்களையும் அழைத்து புறக்கணிக்க கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

2:15 PM IST

இன்று 15 மாவட்டங்களில் கனமழை.. இந்தெந்த பகுதிகளில் இடைவிடாது மழை.. வானிலை அப்டேட்..

தமிழகத்தில் இன்று டெல்டா, தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

2:15 PM IST

ரன்னிங் டைம் உடன் பிரின்ஸ் படத்தின் சென்சார் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு

பிரின்ஸ் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. அதேபோல் இப்படம் 2 மணிநேரம் 23 நிமிடங்கல் ரன்னிங் டைம்மையும் கொண்டுள்ளதாக படக்குழு அந்த அப்டேட்டில் குறிப்பிட்டுள்ளது. மேலும் படிக்க

1:25 PM IST

பாக்ஸ் ஆபிஸில் பாலிவுட்டை மிஞ்சிய கோலிவுட்... 2022-ல் வசூலை வாரிக்குவித்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ

இந்திய பாக்ஸ் ஆபிஸை பொறுத்தவரை எப்போது பாலிவுட் படங்கள் தான் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் இந்த ஆண்டு நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. பாலிவுட் படங்களெல்லாம் வரிசையாக பிளாப் ஆகி வருவதால் இந்திய பாக்ஸ் ஆபிஸில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் தான் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. அதன் டாப் 5 லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பர்க்கலாம்.

1:09 PM IST

நெருக்கமாக பழகி வந்த ஆசிரியர்.. தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவன்.. செல்போனில் சிக்கிய புகைப்படம்..

சென்னையை சேர்ந்த அந்த இளைஞர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வீட்டில் தனது அறையில் துக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுக்குறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் படிக்க

1:03 PM IST

ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்ட 5 மாவட்ட நிர்வாகிகள்..! அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்

ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட வேலூர் மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, ஈரோடு மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் படிக்க..

12:28 PM IST

சின்னப்பம்பட்டியில் இருந்து சிட்னி வரை கலக்கிய கிரிக்கெட்டர் நடராஜன் வாழ்க்கை படமாகிறது - நடிக்கப்போவது யார்?

கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக எடுக்க உள்ளதாகவும், அதில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் இந்த படத்தை இயக்கப்போவது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. மேலும் படிக்க

12:11 PM IST

சென்னை அருகே சோகம்.. விசிலை விழுங்கிய ஒரு வயது சிறுமி.. மூச்சுதிணறி பரிதாப சாவு..

காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆனந்த ராஜ் என்பவருக்கு 3 வயதில் தர்சன் என்ற மகனும் ஒரு வயதில் கயல்விழி என்ற மகளும் உள்ளனர். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்த மகள் கயல்விழி, கையில் வைத்திருந்த விசிலை விழுங்கியுள்ளார்.மேலும் படிக்க

11:31 AM IST

பரோட்டாவுக்கு 18% ஜிஎஸ்டி வரி: சப்பாத்தி வேறு ரகமாம் !: குஜராத் ஏஏஏஆர் உறுதி

பரோட்டோவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்த மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விவகாரங்களை கவனிக்கும் தீர்ப்பாயமான, அட்வான்ஸ் அத்தாரிட்டி ஆஃப் ரூலிங்(ஏஏஆர்) தீர்ப்பு செல்லுபடியாகும் என்று குஜராத்தின் ஏஏஏஆர் உறுதி செய்துள்ளது.விரிவான செய்திகளுக்கு

11:30 AM IST

கர்நாடக ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு: உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு வேறுபட்ட தீர்ப்பு

கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்ய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர் விரிவான செய்திகளுக்கு

11:16 AM IST

வாடகை தாய் மூலம் விக்கி - நயன் ஜோடி குழந்தை பெற்ற விவகாரம்... விசாரணைக் குழு அமைப்பு - மா.சுப்ரமணியன் தகவல்

வாடகைத் தாய் விவகாரம் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத் துறை இணை இயக்குனர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

11:04 AM IST

”No!! No !!” வெளிநாட்டு வேலை.. இந்த தவறை மறந்தும் கூட பண்ணாதீங்க.. எச்சரிக்கை விடுத்து டிஜிபி வீடியோ பதிவு

வெளிநாடுகளில்‌ அதிக ஊதியத்தில்‌ வேலை தருகிறோம்‌ என்று அழைத்தால்‌ அந்த நிறுவனத்தின்‌ உண்மைத்‌ தன்மை அறியாமல்‌, யாரும்‌ வெளிநாடு செல்ல வேண்டாமென்றும் சுற்றுலா பயண விசாவில்‌ 6 மாதம்‌ வேலை செய்ய, வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாமென்றும் டிஜிபி சைலேந்திரா பாபு அறிவுறுத்துள்ளார்.மேலும் படிக்க

10:48 AM IST

கேரளா நரபலி கொடூரம்..! கொலையாளிகள் போலீசில் சிக்கியது எப்படி..? மேலும் 12 பெண்களில் நிலை என்ன..?

கேரளாவில் பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில மாதங்களில் 12 பெண்கள் காணாமல் போனது கேரள போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அந்த பெண்களும் நரபலிக்கு கொடுக்கப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க..

10:21 AM IST

பொன்னியின் செல்வனில் வாய்ப்பளிக்க மறுத்துவிட்டு..நெக்ஸ்ட் ரஜினியை வைத்து மாஸ் படம் எடுக்க தயாராகும் மணிரத்னம்?

பொன்னியின் செல்வனில் மிஸ் ஆன கூட்டணி தற்போது மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் ரஜினிக்கு ஒரு மாஸான கதை ஒன்றை சொல்லி உள்ளதாகவும், அது சூப்பர்ஸ்டாருக்கும் பிடித்துப் போனதால் அவரும் நடிக்க சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணையும் படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க

10:16 AM IST

காவலர்கள் மீது கார் மோதிய விபத்தில் தலைமை காவலர் பலி.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி..

தென்காசி மாவட்டம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது திடீரென்று வேகமாக வந்த கார் மோதிய விபத்தில், தலைமை காவலர் சுந்தரய்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க

9:19 AM IST

பூவையாரை தொடர்ந்து சொந்தமாக கார் வாங்கிய மற்றுமொரு விஜய் டிவி பிரபலம்... காரின் விலை இத்தனை லட்சமா?

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆகி தற்போது சினிமாவில் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் பூவையார் சமீபத்தில் கார் வாங்கி உள்ளதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அவருக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம் சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். மேலும் படிக்க

9:16 AM IST

தமிழகத்தில் அக்.16 ஆம் தேதி வரை கனமழை தொடரும்.. சென்னையில் 2 நாட்களுக்கு மழை..

தமிழகத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

9:16 AM IST

டெல்லிக்கு அவசரமாக புறப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ..! உள்துறை அமைச்சரை சந்திக்கிறாரா.?

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவசர பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க..

9:14 AM IST

வாயா போயானு பேசவே பயமாக உள்ளது..! ஸ்டாலின் அதிரடியால் அதிர்ந்து போன பொன்முடி

வாயா போயா என்ற வார்த்தையை சொல்லவே தற்போது பயமாக இருப்பதாக தெரிவித்த பொன்முடி, மு.க.ஸ்டாலின் தன்னை பார்த்து அப்படி பேசாதீர்கள் என சொல்லி விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க..

8:47 AM IST

"சேலை தான் Modern Style"ஆளுநர் தமிழிசையின் கருத்துக்கு எம்.பி கனிமொழி பதிலடி.. என்ன சொன்னார் தெரியுமா..?

பெண்கள் சேலை கட்டுவதை மார்ட்ன் ஸ்டைலாக உணர வேண்டும் என்று ஆடைக் கட்டுபாடு குறித்து ஆளுநர் தமிழிசை தெரிவித்த கருத்திற்கு” ஆடை என்பது அவரவர் விருப்பம்” என்று எம்.பி கனிமொழி பதிலடிக் கொடுத்துள்ளார். மேலும் படிக்க

8:44 AM IST

ஆகாயத்தை பார்த்து எச்சில் துப்ப ஆசைப்படாதீங்க அண்ணாமலை, அது உங்கள் முகத்தில் தான் விழும் - சினேகன் பதிலடி

கமல்ஹாசன் அரசியலும் செய்கிறார், தொழிலையும் பார்க்கிறார். காரணம், அரசியல் கட்சி நடத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது. மேலிருந்தும், கீழிருந்தும்.. கருப்பாகவும், வெள்ளையாகவும் கொட்டிக்கொடுக்க எங்களுக்கு யாரும் இல்லை. அப்படி கொடுத்தாலும் நாங்கள் வாங்குபவர்கள் அல்ல. இதனால் தான் தொழிலையும் பார்க்கிறோம், அரசியலும் செய்கிறோம். இனியாவது ஒருவரை விமர்சனம் செய்வதற்கு முன்பு, பகுத்து ஆய்ந்து பேசுங்கள், அதுதான் படித்தவர்களுக்கு நல்லது. ஆகாயத்தை பார்த்து எச்சில் துப்ப ஆசைப்படாதீர்கள் அது உங்கள் முகத்தில் தான் விழும் என கூறியுள்ளார் சினேகன். மேலும் படிக்க

8:04 AM IST

தேவர் குருபூஜை.. பசும்பொன் செல்கிறார் முதலமைச்சர்.. பிரதமர் வருகை குறித்து பாஜக விளக்கம்..

முத்துராமலிங்கர் தேவரின் 115 வது குருபூஜையை முன்னிட்டு, வரும் அக்டோபர் 30 ஆம் தேதி அவரது நினைவிடத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துகிறார். பிரதமர் மோடி வருவது குறித்து அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.மேலும் படிக்க

3:24 PM IST:

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3-யின் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மாதவரம் பால் பண்ணை மெட்ரோ நிலையத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ நிலையம் வரை  1.4 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியினை அவர் தொடங்கி வைத்தார். மேலும் படிக்க

3:20 PM IST:

சின்ன பழுவேட்டரையராக நடித்திருந்த நடிகர் பார்த்திபன், இந்து மத சர்ச்சையால் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் மேலும் ரூ.100 கோடி வசூலிக்கும் என டுவிட்டரில் சூசகமாக தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

2:46 PM IST:

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1  பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2489 நபர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.மேலும் படிக்க

2:40 PM IST:

தமிழில் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகையை புஷ்பா 2 படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க

2:32 PM IST:

திமுகாவில் சில நாட்களாக வரும்  தகவல் வேதனை தருகிறது. சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து மற்றவர்களையும் அழைத்து புறக்கணிக்க கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க..

2:15 PM IST:

தமிழகத்தில் இன்று டெல்டா, தென்தமிழக மாவட்டங்கள் மற்றும் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க

2:15 PM IST:

பிரின்ஸ் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளது. அதேபோல் இப்படம் 2 மணிநேரம் 23 நிமிடங்கல் ரன்னிங் டைம்மையும் கொண்டுள்ளதாக படக்குழு அந்த அப்டேட்டில் குறிப்பிட்டுள்ளது. மேலும் படிக்க

1:25 PM IST:

இந்திய பாக்ஸ் ஆபிஸை பொறுத்தவரை எப்போது பாலிவுட் படங்கள் தான் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் இந்த ஆண்டு நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. பாலிவுட் படங்களெல்லாம் வரிசையாக பிளாப் ஆகி வருவதால் இந்திய பாக்ஸ் ஆபிஸில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் தான் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. அதன் டாப் 5 லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பர்க்கலாம்.

1:09 PM IST:

சென்னையை சேர்ந்த அந்த இளைஞர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வீட்டில் தனது அறையில் துக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுக்குறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும் படிக்க

1:03 PM IST:

ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட வேலூர் மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, ஈரோடு மாநகர், மதுரை புறநகர் கிழக்கு, திருநெல்வேலி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் படிக்க..

12:28 PM IST:

கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கைக் கதையை திரைப்படமாக எடுக்க உள்ளதாகவும், அதில் நடிகர் சிவகார்த்திகேயன் தான் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஆனால் இந்த படத்தை இயக்கப்போவது யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. மேலும் படிக்க

12:11 PM IST:

காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆனந்த ராஜ் என்பவருக்கு 3 வயதில் தர்சன் என்ற மகனும் ஒரு வயதில் கயல்விழி என்ற மகளும் உள்ளனர். இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் வீட்டில் வழக்கம் போல் விளையாடிக் கொண்டிருந்த மகள் கயல்விழி, கையில் வைத்திருந்த விசிலை விழுங்கியுள்ளார்.மேலும் படிக்க

11:31 AM IST:

பரோட்டோவுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதித்த மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி விவகாரங்களை கவனிக்கும் தீர்ப்பாயமான, அட்வான்ஸ் அத்தாரிட்டி ஆஃப் ரூலிங்(ஏஏஆர்) தீர்ப்பு செல்லுபடியாகும் என்று குஜராத்தின் ஏஏஏஆர் உறுதி செய்துள்ளது.விரிவான செய்திகளுக்கு

11:30 AM IST:

கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்ய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இரு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர் விரிவான செய்திகளுக்கு

11:16 AM IST:

வாடகைத் தாய் விவகாரம் குறித்து விசாரணை நடத்த சுகாதாரத் துறை இணை இயக்குனர் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க

11:04 AM IST:

வெளிநாடுகளில்‌ அதிக ஊதியத்தில்‌ வேலை தருகிறோம்‌ என்று அழைத்தால்‌ அந்த நிறுவனத்தின்‌ உண்மைத்‌ தன்மை அறியாமல்‌, யாரும்‌ வெளிநாடு செல்ல வேண்டாமென்றும் சுற்றுலா பயண விசாவில்‌ 6 மாதம்‌ வேலை செய்ய, வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாமென்றும் டிஜிபி சைலேந்திரா பாபு அறிவுறுத்துள்ளார்.மேலும் படிக்க

10:48 AM IST:

கேரளாவில் பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில மாதங்களில் 12 பெண்கள் காணாமல் போனது கேரள போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அந்த பெண்களும் நரபலிக்கு கொடுக்கப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க..

10:21 AM IST:

பொன்னியின் செல்வனில் மிஸ் ஆன கூட்டணி தற்போது மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிரத்னம் ரஜினிக்கு ஒரு மாஸான கதை ஒன்றை சொல்லி உள்ளதாகவும், அது சூப்பர்ஸ்டாருக்கும் பிடித்துப் போனதால் அவரும் நடிக்க சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் இணையும் படத்தை லைகா நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படிக்க

10:16 AM IST:

தென்காசி மாவட்டம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மீது திடீரென்று வேகமாக வந்த கார் மோதிய விபத்தில், தலைமை காவலர் சுந்தரய்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் படிக்க

9:19 AM IST:

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆகி தற்போது சினிமாவில் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் பூவையார் சமீபத்தில் கார் வாங்கி உள்ளதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அவருக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம் சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார். மேலும் படிக்க

9:16 AM IST:

தமிழகத்தில் அக்டோபர் 16 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் சென்னையில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும் படிக்க

9:16 AM IST:

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவசர பயணமாக இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார். தமிழக அரசியல் நிகழ்வுகள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க..

9:14 AM IST:

வாயா போயா என்ற வார்த்தையை சொல்லவே தற்போது பயமாக இருப்பதாக தெரிவித்த பொன்முடி, மு.க.ஸ்டாலின் தன்னை பார்த்து அப்படி பேசாதீர்கள் என சொல்லி விட்டதாக கூறியுள்ளார்.

மேலும் படிக்க..

8:47 AM IST:

பெண்கள் சேலை கட்டுவதை மார்ட்ன் ஸ்டைலாக உணர வேண்டும் என்று ஆடைக் கட்டுபாடு குறித்து ஆளுநர் தமிழிசை தெரிவித்த கருத்திற்கு” ஆடை என்பது அவரவர் விருப்பம்” என்று எம்.பி கனிமொழி பதிலடிக் கொடுத்துள்ளார். மேலும் படிக்க

8:44 AM IST:

கமல்ஹாசன் அரசியலும் செய்கிறார், தொழிலையும் பார்க்கிறார். காரணம், அரசியல் கட்சி நடத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது. மேலிருந்தும், கீழிருந்தும்.. கருப்பாகவும், வெள்ளையாகவும் கொட்டிக்கொடுக்க எங்களுக்கு யாரும் இல்லை. அப்படி கொடுத்தாலும் நாங்கள் வாங்குபவர்கள் அல்ல. இதனால் தான் தொழிலையும் பார்க்கிறோம், அரசியலும் செய்கிறோம். இனியாவது ஒருவரை விமர்சனம் செய்வதற்கு முன்பு, பகுத்து ஆய்ந்து பேசுங்கள், அதுதான் படித்தவர்களுக்கு நல்லது. ஆகாயத்தை பார்த்து எச்சில் துப்ப ஆசைப்படாதீர்கள் அது உங்கள் முகத்தில் தான் விழும் என கூறியுள்ளார் சினேகன். மேலும் படிக்க

8:04 AM IST: