பாக்ஸ் ஆபிஸில் பாலிவுட்டை மிஞ்சிய கோலிவுட்... 2022-ல் வசூலை வாரிக்குவித்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ
இந்திய அளவில் இந்த ஆண்டு ரிலீசான படங்களில் பாக்ஸ் ஆபிஸில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களின் லிஸ்ட்டை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
இந்திய பாக்ஸ் ஆபிஸை பொறுத்தவரை எப்போது பாலிவுட் படங்கள் தான் ஆதிக்கம் செலுத்தும். ஆனால் இந்த ஆண்டு நிலைமை அப்படியே தலைகீழாக மாறி உள்ளது. பாலிவுட் படங்களெல்லாம் வரிசையாக பிளாப் ஆகி வருவதால் இந்திய பாக்ஸ் ஆபிஸில் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் தான் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. அதன் டாப் 5 லிஸ்ட்டை இந்த தொகுப்பில் பர்க்கலாம்.
1. கே.ஜி.எஃப். 2
இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்துள்ள படம் கே.ஜி.எஃப் 2. பிரசாந்த் நீல் இயக்கியிருந்த இப்படத்தில் நடிகர் யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்தியிலும் சக்கைப்போடு போட்ட இப்படம் உலகளவில் ரூ.1230 கோடி வசூலித்து கம்பீரமாக முதலிடத்தில் நீடிக்கிறது.
2. ஆர்.ஆர்.ஆர்
ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்த லிஸ்டில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்த இப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் வசூலை வாரிக்குவித்தது. இப்படம் உலகளவில் ரூ.1144 கோடி வசூலித்திருந்தது.
3. விக்ரம்
கமல்ஹாசனின் கம்பேக் திரைப்படமான விக்ரம் இந்த லிஸ்டில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.190 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. உலகளவில் மொத்தமாக ரூ.426 கோடி வசூலை அள்ளியது விக்ரம்.
இதையும் படியுங்கள்... உழைப்பிற்கேற்ற ஊதியம் கொடுத்தால் போதும்...முன்னணி ஹீரோக்களை மறைமுகமாக தாக்கும் கார்த்தி
4. பிரம்மாஸ்திரா
அயன் முகர்ஜி இயக்கிய பிரம்மாஸ்திரா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 4-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த டாப் 5 லிஸ்டில் இடம்பெற்றுள்ள ஒரே ஒரு இந்தி படமும் இதுதான். ரன்பீர் கபூரும், ஆலியா பட்டும் நடித்திருந்த இப்படம் மொத்தமாக ரூ.423.16 கோடி வசூலித்து இருந்தது. விரைவில் பொன்னியின் செல்வன் இந்த சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5. பொன்னியின் செல்வன் - 1
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் ரிலீசான பொன்னியின் செல்வன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து வருகிறது. இப்படம் 12 நட்களில் ரூ.416 கோடி வசூலித்து 5-ம் இடத்தில் உள்ளது. இனி வரும் நாட்களில் மேலும் வசூல் குவிய வாய்ப்புள்ளதால், இப்படம் மூன்றாவது இடத்தை பிடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... சின்னப்பம்பட்டியில் இருந்து சிட்னி வரை கலக்கிய கிரிக்கெட்டர் நடராஜன் வாழ்க்கை படமாகிறது - நடிக்கப்போவது யார்?