திருமணத்திற்கு நோ.. ஆனால் அந்த விஷயத்திற்கு ஓகே சொன்ன ஐஸ்வர்யா லட்சுமி
Aishwarya Lekshmi talk about Illicit Relationship: திருமணம் இல்லாமல் உறவில் இருப்பது குறித்து நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி பகிர்ந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

உறவில் இருப்பது குறித்து நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி பகிர்ந்த கருத்து
திருமணம் இல்லாமல் உறவில் இருப்பது குறித்து நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி பகிர்ந்த கருத்து சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது. அவரின் பார்வையில், உறவு என்பது இரண்டு மனிதர்களுக்கிடையேயான புரிதல், நம்பிக்கை மற்றும் மரியாதையை அடிப்படையாகக் கொண்டது.
அது சட்ட ரீதியான உறுதிப்படுத்தலால் மட்டுமே வலுப்பெறும் ஒன்றல்ல என்றும், சிலர் திருமணம் இல்லாமலேயே மகிழ்ச்சியாக வாழ முடியும். என் 34 ஆண்டுகள் வாழ்க்கையில் பல திருமணங்களையும், பல மனிதர்களையும் நான் பார்த்து இருக்கிறேன். ஆனால் அவர்கள் அனைவரும் உண்மையாக மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகள் குறைவு தான். சொல்ல போனால் கையில் விரல் விட்டு கூட எண்ணி சொல்லிவிடலாம் என்றும் அவர் கூறுகிறார்.
திருமணம் ஒரு தவறு அல்லது தேவையற்றது
இதே நேரத்தில், திருமணம் ஒரு தவறு அல்லது தேவையற்றது என்று அவர் கூறவில்லை. மாறாக, அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட தேர்வு என வலியுறுத்துகிறார். சிலருக்கு திருமணம் பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தையும் அளிக்கலாம்; மற்றவர்களுக்கு சுதந்திரமாக வாழும் உறவுகள் ஏற்றதாக இருக்கலாம். முக்கியமானது, எந்த உறவாக இருந்தாலும் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்பதே அவரது கருத்தின் மையம்.
அவரது இந்த கருத்து ஆதரவும் விமர்சனமும் பெற்றாலும், தற்போதைய இளைஞர்களின் உறவு பற்றிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் ஒரு விவாதமாக மாறியுள்ளது. சமூக மாற்றங்கள் மற்றும் தனிநபர் சுதந்திரம் குறித்து பேச வைக்கும் இந்த கருத்து, உறவுகளின் பொருளை மீண்டும் சிந்திக்க தூண்டுகிறது.
ஐஸ்வர்யா லக்ஷ்மி மலையாளம்
ஐஸ்வர்யா லக்ஷ்மி மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் தனது இயல்பான நடிப்பால் கவனம் பெற்றவர். ஆரம்பத்தில் மருத்துவராக படித்த அவர், பின்னர் மாடலிங் மற்றும் சினிமாவிற்கு வந்தார். Mayaanadhi, Varathan, Jagame Thandhiram போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார். கதாபாத்திரங்களை தேர்வு செய்வதில் அவர் காட்டும் கவனம் மற்றும் வித்தியாசமான கதைகளில் நடிக்க விருப்பம், அவரை புதிய தலைமுறை நடிகைகளில் முக்கியமானவராக உருவாக்கி உள்ளது.
மலையாளத்தில் அவர் நடித்த 'ஆஷா' திரைப்படம் ரிலீஸூக்கு தயாராக உள்ளது. இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்து உள்ளனர். ஜஃபர் சனல் இப்படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.