- Home
- Cinema
- சமந்தாவுக்கு பதில் இவரா...? புஷ்பா 2-வில் அல்லு அர்ஜுன் உடன் ஐட்டம் டான்ஸ் ஆடப்போகும் விஜய், அஜித் பட நடிகை..!
சமந்தாவுக்கு பதில் இவரா...? புஷ்பா 2-வில் அல்லு அர்ஜுன் உடன் ஐட்டம் டான்ஸ் ஆடப்போகும் விஜய், அஜித் பட நடிகை..!
தமிழில் அஜித், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகையை புஷ்பா 2 படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆட ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் ரிலீசான படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படம் செம்மரக்கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. இதில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகாவும், வில்லனாக மலையாள நடிகர் பகத் பாசிலும் நடித்திருந்தனர். பான் இந்தியா படமாக வெளியாகி 5 மொழிகளிலும் சக்கைப்போடு போட்ட இப்படம் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்தது.
புஷ்பா படத்தின் வெற்றிக்கு அப்படத்தில் இடம்பெற்ற ஐட்டம் சாங்கும் ஒரு முக்கிய காரணம். அதில் சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியதால், இப்பாடலுக்காகவே படத்தை பார்த்தவர்கள் ஏராளம். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்... ரன்னிங் டைம் உடன் பிரின்ஸ் படத்தின் சென்சார் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
முதல் பாகத்தை விட மிகவும் பிரம்மாண்டமாக இப்படத்தை எடுத்து வருகிறார்கள். முதல்பாகத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஐட்டம் சாங்கைப் போல் இரண்டாம் பாகத்திலும் ஒரு ஐட்டம் சாங் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதில் சமந்தா ஆட மறுத்துவிட்டதால், பின்னர் பாலிவுட் நடிகை மலைகா அரோரா ஆட உள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது புது வரவாக அந்த லிஸ்டில் சேர்ந்திருப்பவர் நடிகை தமன்னா. ஏற்கனவே பல்வேறு படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ள தமன்னாவை இப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக ஆடவைக்க திட்டமிட்டு, படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். தற்போது பட வாய்ப்புகள் சரிவர இல்லாததால் இந்த வாய்ப்பை தவறவிடாமல் தமன்னா ஏற்றுக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் பாலிவுட்டை மிஞ்சிய கோலிவுட்... 2022-ல் வசூலை வாரிக்குவித்த டாப் 5 படங்களின் லிஸ்ட் இதோ
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.