Asianet News TamilAsianet News Tamil

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்..

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3-யின் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மாதவரம் பால் பண்ணை மெட்ரோ நிலையத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ நிலையம் வரை  1.4 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியினை அவர் தொடங்கி வைத்தார். 
 

CM MK Stalin was inaugurated Chennai Metro Phase 2 work today.
Author
First Published Oct 13, 2022, 3:23 PM IST

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3-யின் சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். மாதவரம் பால் பண்ணை மெட்ரோ நிலையத்திலிருந்து மாதவரம் நெடுஞ்சாலை மெட்ரோ நிலையம் வரை  1.4 கி.மீ நீளத்திற்கு சுரங்கம் தோண்டும் பணியினை அவர் தொடங்கி வைத்தார். 
    
சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தில் 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.9 கி.மீ நீளத்திலான 3 வழித்தடங்கள் கொண்ட இரண்டாம் கட்ட பணிகளை செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசால் கொள்கையளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதல் மற்றும் நிதியுதவி பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க:"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" சொல்பவர்கள் அதிமுக திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துகின்றனர் - இபிஎஸ்

இத்திட்டத்திற்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை 52.01 கி.மீ வழித்தடப்பகுதிக்கும், ஆசிய மேம்பாட்டு வங்கி, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி ஆகியவை எஞ்சியுள்ள 66.89 கி.மீ வழித்தடப்பகுதிக்கும் நிதியுதவி வழங்குகின்றன.சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கு 24 கட்டுமான ஒப்பந்தங்களில், இதுவரை 15 ஒப்பந்தங்களுக்கு ஏற்பு கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை தவிர அமைப்புகளை நிறுவுவதற்கான (System Contacts) 36 ஒப்பந்தங்களில் இதுவரை 2 ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் வழித்தடம் 3 இல் மாதவரத்திலிருந்து தரமணி வரையிலான 26.7 கி.மீ நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கு பணி தமிழ்நாடு அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இதில் ஏற்கனவே இரண்டு சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.மாதவரம் பால் பண்ணையிலிருந்து கெல்லீஸ் வரையில் 9 கி.மீ நீளத்திற்கு சுரங்கப்பாதை தோண்டும் பணி மற்றும் சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களுக்கான தடுப்பு சுற்று சுவர்கள் (Diaphragm Wall)  அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 

மேலும் படிக்க:பள்ளிக்கல்வித்துறையில் 2,849 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை.. முதலமைச்சர் இன்று வழங்கினார்..

சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்களுக்கான சுற்றுத் தடுப்புச் சுவர்கள் அமைத்தல் மற்றும் சுரங்கப்பாதைக்கான கான்கீரிட் வார்ப்புகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தற்போது மாதவரம் பால்பண்ணையிலிருந்து சுரங்கம் தோண்டும் பணிகளை இன்று முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பெரியகருப்பன், சேகர்பாபு, மேயர் பிரியா, எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள்  மற்றும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios