Asianet News TamilAsianet News Tamil

பள்ளிக்கல்வித்துறையில் 2,849 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை.. முதலமைச்சர் இன்று வழங்கினார்..

பள்ளிக்கல்வித் துறையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக  தேர்வு செய்யப்பட்ட 2849 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் 
269 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
 

CM MK Stalin issued the appointment order to 2,849 people in the school education department today.
Author
First Published Oct 13, 2022, 2:44 PM IST

சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1  பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 2489 நபர்களில் 10 பேருக்கு பணி நியமன ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் படிக்க:திமுக நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் புறக்கணிக்க கூறி மிரட்டு கின்றனர்- பிடிஆர் வேதனை

மேலும் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 269 வாரிசுதாரர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கும், பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ், மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 


மேலும் படிக்க:பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்,முருங்கை மரத்தில்தான் குடித்தனம்!திமுகவிற்கு வாக்களித்து திணறும் மக்கள்-ஜெயக்குமார்

Follow Us:
Download App:
  • android
  • ios