Asianet News TamilAsianet News Tamil

திமுக நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் புறக்கணிக்க கூறி மிரட்டு கின்றனர்- பிடிஆர் வேதனை

திமுகாவில் சில நாட்களாக வரும்  தகவல் வேதனை தருகிறது. சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து மற்றவர்களையும் அழைத்து புறக்கணிக்க கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Minister PTR lamented that some people are ignoring DMK events
Author
First Published Oct 13, 2022, 2:30 PM IST

வளைகாப்பு அமைச்சர்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசியவர், கடந்த ஆண்டு லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றதற்கு என்னை வளைகாப்பு அமைச்சர் என விமர்சித்தார்கள்"
 "ஆம் நான் கர்ப்பிணிகளின் உடல்நலனில் அக்கறை கொண்ட அமைச்சர், இது போன்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன் என கூறினார்.

சமூகத்தில் ஏற்றத்தாழ்வை போக்க கல்வி மிக முக்கியமானது, அரசு திட்டங்கள் சரியான நேரங்களில் சரியான நபர்களுக்கு சென்று சேர தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். . நிதி மேலாண்மையில் திமுக அரசு சிறந்து விளங்கி வருவதாகவும் கூறினார்.  கொரனா உள்ளிட்ட பேரிடர் காலத்தில் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தனியார் பள்ளியில் இருந்து சுமார் 50,000 மாணவர்கள் அரசு பள்ளிக்கு வந்துள்ளதாக கூறினார். சிறந்த நிதி மேலாண்மை காரணமாக அக்டோபர் மாதத்திலேயே மாணவர்களுக்கு இலவச மிதிவண்டியை வழங்கி இருக்கிறோம்.  மேலும் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு விட 26% வருவாய் பற்றாக்குறை குறைத்து இருப்பதாகவும் தெரிவித்தார். 

பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்,முருங்கை மரத்தில்தான் குடித்தனம்!திமுகவிற்கு வாக்களித்து திணறும் மக்கள்-ஜெயக்குமார்

Minister PTR lamented that some people are ignoring DMK events

 திமுக நிகழ்ச்சி புறக்கணிப்பு

இனி வருங்காலங்களிலும் மேலும் படிப்படியாக  வருவாய் பற்றாக்குறையை குறைக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். நிதி மேலாண்மையை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைத்து ஆலோசனை மேற்கொண்டாலும் முதல்வரின் ஊக்கமும் ஆக்கமும் தான் எங்களுக்கு பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது. தினம் தினம் புது புது திட்டங்களை தீட்டி இதுவரை பலன் கிடைக்காத நபர்களுக்கு திட்டங்கள் சென்று சேர தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

திமுகாவில் சில நாட்களாக வரும்  தகவல் வேதனை தருகிறது. சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து மற்றவர்களை அழைத்து புறக்கணிக்க கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். நான் ஜால்ரா அடிப்பவன் இல்லை, நான் ஒரு தகவலை முதல்வரிடம் கூறினால் இதயத்தில் இருந்து கூறுவேன், அடிப்படையாக எனக்கு என கொள்ளையும் தத்துவம் உண்டு. எனக்கு எது உண்மை என்று தெரிகிறதோ அதனை நான் பின் பற்றுவன். தந்தை பெரியாரின் கருத்தை நான் பின்பற்றுகிறேன் என பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்ட 5 மாவட்ட நிர்வாகிகள்..! அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்

Follow Us:
Download App:
  • android
  • ios