"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" சொல்பவர்கள் அதிமுக திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துகின்றனர் - இபிஎஸ்
அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட பாலூட்டும் தாய்மார்கள் அறைகளை உடனடியாக சீர்படுத்தி, மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அதிமுக திட்டங்களுக்கு மூடு விழா
அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பாலூட்டும் தாய்மார்களுக்கான அறைகளை மீண்டும் திறக்க வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்கள் போற்றும் தலைவியாக அம்மா அவர்கள் திகழ்ந்தார்கள். புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சிந்தனையில் உருவான சீர்மிகு திட்டங்கள்தான் தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையம், தாலிக்குத் தங்கம், பெண்களின் சுமைகளை குறைப்பதற்குக் கொண்டுவரப்பட்ட விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கும் திட்டம், உழைக்கும் மகளிருக்கு மானியத்துடன் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்,
திமுக நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களையும் புறக்கணிக்க கூறி மிரட்டு கின்றனர்- பிடிஆர் வேதனை
குழந்தைகளுக்குபாலூட்ட தனி அறைகள்
அந்த வகையில் கைக்குழந்தைகளுடன் பயணிக்கும் பெண்கள், வெளியூர்களுக்கு செல்வதற்கு பேருந்து நிலையம் வரும் போது, கைக்குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு ஏதுவாக மறைவிட வசதியினை பேருந்து நிலையங்களில் உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற தாய்மை உணர்வுடன், உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் உருவான திட்டம் தான் பேருந்து நிலையங்களில் தாய்மார்களுக்கென்று பாலூட்டும் தனி அறைகள் திட்டம்.2015-ஆம் ஆண்டில் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது இத்திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண்களுக்கென்று கொண்டுவரப்பட்ட இத்திட்டம் இந்த விடியா ஆட்சியில் கேட்பாரற்றுக் கிடக்கிறது.
வாயா போயானு பேசவே பயமாக உள்ளது..! ஸ்டாலின் அதிரடியால் அதிர்ந்து போன பொன்முடி
தமிழகமெங்கும் பேருந்து நிலையங்களில் உள்ள பாலூட்டும் தாய்மார்கள் அறை எந்தவித பராமரிப்பின்றியும், இருக்கைகள் சேதமடைந்த நிலையிலும், தூர்நாற்றம் வீசும் அவல நிலையிலும் மூடிக் கிடக்கிறது. மேலும், அப்பகுதிகள் அசுத்தமாகவும் காணப்படுகிறது. "மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னார்கள். நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் விரும்பியவர், விரும்பாதவர் என எண்ணாமல் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். பேரறிஞர் அண்ணாவின் வழியை கடைபிடிப்போம் என்று சொல்பவர்கள், நாங்கள் கொண்டுவந்த மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா காண்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். இதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
அறைகளை உடனடியாக சீர்செய்ய வேண்டும்
புரட்சித் தலைவர் அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும், தொடர்ந்து அம்மாவின் அரசும், மக்கள் நலன் பார்த்து பார்த்து திட்டங்களை அறிமுகப்படுத்தி, செயல்படுத்தினோம். தமிழக மக்களும் அத்திட்டங்களால் பயனடைந்தனர். அந்தத் திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கிப் போட்டுள்ளது. மக்கள் ஏற்றுக்கொண்ட திட்டங்களை முடக்கும் போது, அவர்களுடைய வேதனையின் வெளிப்பாட்டை உங்களுக்கு, தேர்தல் மூலம் விரைவில் திருப்பித் தருவார்கள். இது வெகு தொலைவில் இல்லை.தமிழகத்தில் பேருந்து நிலையங்களிலுள்ள சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் எவ்வித பயன்பாடுமின்றி பூட்டிக் கிடக்கும் அவல நிலை தொடர்கிறது. இந்நிலை மாற வேண்டும். தாய்மார்கள் போற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அறைகளை உடனடியாக சீர்செய்து, மீண்டும் தாய்மார்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்