MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை.. 'குடி'மகன்கள் ஷாக்!

தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை.. 'குடி'மகன்கள் ஷாக்!

ஏற்கெனவே தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 12 பீர் பாட்டில்கள் அல்லது 7.8 லிட்டர் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டு இருந்தது.

2 Min read
Author : Rayar r
Published : Apr 13 2026, 06:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
டாஸ்மாக் கடைகள்
Image Credit : Asianet News

டாஸ்மாக் கடைகள்

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் அதிகரித்து வரும் நிலையில், மது குடிப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மது விற்பனை கொடிகட்டி பறக்கிறது. 

இந்த பண்டிகை காலங்களில் வெளியாகும் ரஜினி, விஜய், அஜித் திரைப்படங்களில் வசூலை விட டாஸ்மாக் வசூல் அதிகமாக உள்ளது. அரசு வருமானத்தை ஈட்டித் தருவதில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிப்பது என்று சொன்னால் அது மிகையாகாது.

24
டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை
Image Credit : Asianet News

டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை

இந்த நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது மதுபிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவையொட்டி தமிழகத்தில் தொடர்ந்து 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை விடப்படுகிறது.

Related Articles

Related image1
மதுப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை!
Related image2
2026ல் இனி எப்பொதெல்லாம் டாஸ்மாக் விடுமுறை.. முழு பட்டியல் இதோ.. 'குடி'மகன்களே நோட் பண்ணுங்க!
34
எந்தெந்த நாள் டாஸ்மாக் விடுமுறை?
Image Credit : Asianet News

எந்தெந்த நாள் டாஸ்மாக் விடுமுறை?

அதாவது ஏப்ரல் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில், 'தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஏப்.21 முதல் ஏப்.23 இரவு வரை மூடப்பட வேண்டும். 

புதுச்சேரி எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் இது பொருந்தும். அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற வளாகங்களை சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.21 காலை 10 மணி முதல் ஏப்.23ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தற்காலிகமாக மூட வேண்டும். இந்த உத்தரவை மீறுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என கூறப்பட்டுள்ளது.

44
மது விற்பனைக்கு கட்டுப்பாடு
Image Credit : our own

மது விற்பனைக்கு கட்டுப்பாடு

ஏற்கெனவே தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 12 பீர் பாட்டில்கள் அல்லது 7.8 லிட்டர் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக உத்தரவிட்டு இருந்தது. மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மது வகைகளை தனிநபருக்கு நாளொன்றுக்கு 4.5 லிட்டர் அளவு தான் விற்பனை செய்ய வேண்டும். 

இதேபோல் வெளிநாட்டு மது வகைகளையும் தனிநபருக்கு நாளொன்றுக்கு 4.5 லிட்டர் அளவு தான் விற்பனை செய்ய வேண்டும். இதற்கான விற்பனை ரசீதை அவர்களிடம் கொடுக்க வேண்டும் என அனைத்து டாஸ்மாக் கடைகளின் மேலாளர்கள், விற்பனையாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
விடுமுறை

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் செய்யக்கூடிய கூட்டணி அதிமுக கூட்டணி ! கனிமொழி அனல் பறக்கும் பேச்சு
Recommended image2
Now Playing
வாக்குச்சாவடிகளில் கலவரம் செய்யப்போறாங்க... திமுகவின் பகீர் பிளானை லீக் பண்ணிய
Recommended image3
வாக்குச்சாவடிகளில் கலவரம் செய்யப்போறாங்க... திமுகவின் பகீர் பிளானை லீக் பண்ணிய அண்ணாமலை
Related Stories
Recommended image1
மதுப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை!
Recommended image2
2026ல் இனி எப்பொதெல்லாம் டாஸ்மாக் விடுமுறை.. முழு பட்டியல் இதோ.. 'குடி'மகன்களே நோட் பண்ணுங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved