MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • குண்டா இருக்குறவங்க இந்த கோயிலுக்கு போக முடியாது! அமலுக்கு வந்த தடை உத்தரவு!

குண்டா இருக்குறவங்க இந்த கோயிலுக்கு போக முடியாது! அமலுக்கு வந்த தடை உத்தரவு!

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள புகழ்பெற்ற 'இடுக்கு பிள்ளையார் கோயில்' குகை வாசலில் ஏற்பட்ட அடுத்தடுத்த அசம்பாவிதங்களைத் தொடர்ந்து, அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அதிரடி கட்டுப்பாடுகளையும் தடை உத்தரவுகளையும் அமல்படுத்தியுள்ளது.

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jul 28 2026, 11:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
இடுக்கு பிள்ளையார் கோயிலின் சிறப்பும் ஆபத்தும்
Image Credit : Chatgpt

இடுக்கு பிள்ளையார் கோயிலின் சிறப்பும் ஆபத்தும்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க தலங்களில் 7-வது லிங்கமான குபேர லிங்கம் அருகில் இடுக்கு பிள்ளையார் கோயில் அமைந்துள்ளது. அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் இக்கோயிலில், ஒரு குகை போன்ற மிகக் குறுகலான வாசல் அமைப்பு உள்ளது. பக்தர்கள் இந்த குகை போன்ற வாசலின் பின்புறம் வழியாக உள்ளே நுழைந்து, பக்கவாட்டில் அமர்ந்துள்ள விநாயகரை வழிபட்டு முன்பக்கம் வழியாக வெளியே வருவது வழக்கம். இந்த குறுகலான பாதையில் ஊர்ந்து செல்வது ஒரு ஆன்மிக வழிபாடாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க : Mobile Phone : பஸ்ல ஃபோன் பாப்பீங்களா? எச்சரிக்கை! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
அடுத்தடுத்த சோக சம்பவங்கள்
Image Credit : Chatgpt

அடுத்தடுத்த சோக சம்பவங்கள்

இந்நிலையில், கடந்த ஜூலை 24-ந்தேதி நள்ளிரவில் குடும்பத்தினருடன் கிரிவலம் வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மணிக்குமார் என்பவர் இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குள் வழிபாட்டிற்காகச் சென்றுள்ளார். குகை வாசலில் சிக்கிக்கொண்ட அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தத் துயரச் சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் கிரிவலம் வந்த ஆந்திராவைச் சேர்ந்த பெண் ஒருவர் இதே குகை வாசலில் மாட்டிக்கொண்டு அவதிப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. அடுத்தடுத்து நடந்த இந்த விபத்துகளால் சமூக ஆர்வலர்களும் பக்தர்களும் கடும் கவலை தெரிவித்ததுடன், உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையும் படிங்க : Chicken : ஜூலை 31 முதல் தமிழகத்தில் சிக்கன் கிடைக்காது! வெளியான அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?

Related Articles

Related image1
Mobile Phone : பஸ்ல ஃபோன் பாப்பீங்களா? எச்சரிக்கை! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Related image2
Chicken : ஜூலை 31 முதல் தமிழகத்தில் சிக்கன் கிடைக்காது! வெளியான அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?
33
அமலுக்கு வந்த புதிய தடை உத்தரவுகள்
Image Credit : Chatgpt

அமலுக்கு வந்த புதிய தடை உத்தரவுகள்

பொதுமக்களின் கோரிக்கைகளையும் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தற்போது பல அதிரடி கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

  1. உடல் பருமன் உள்ளவர்களுக்குத் தடை: இடுக்கு பிள்ளையார் கோயிலின் வாசல் மிகவும் குறுகலாக இருப்பதால், உடல் பருமன் உள்ளவர்கள் (குண்டாக இருப்பவர்கள்), உடல் நலக்குறைவு மற்றும் மூச்சுப் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் உள்ளே செல்லக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த எச்சரிக்கை பலகையும் கோயில் முன்பு வைக்கப்பட்டுள்ளது.
  2. இரும்புத் தடுப்புகள் அமைப்பு: பக்தர்கள் வரிசையில் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்புத் தடுப்புகளின் முகப்பு பகுதியில் இரண்டு கம்பிகள் வைத்து வெல்டிங் செய்யப்பட்டுள்ளது. அந்த இருகம்பிகளுக்கு இடையே உள்ள இடைவெளி வழியாகச் செல்ல முடிந்தவர்கள் மட்டுமே குகை வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
  3. நேரக் கட்டுப்பாடு: பவுர்ணமி நாட்களைத் தவிர்த்து, மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோயிலுக்குள் செல்ல அனுமதி உண்டு என கோயில் நிர்வாகம் முறைப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : Jnana Siddhi Yoga : அள்ளிக்கொடுக்கும் கேது! ஞான சித்தி யோகத்தால் டக்குனு டாப்புக்கு போகும் 5 ராசிகள்!

தொடர்ந்து விபத்துகள் அரங்கேறி வந்த சூழலில், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கோயில் நிர்வாகம் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைக் கிரிவலப் பாதையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
கோவில்
ஆன்மீகம்
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mobile Phone : பஸ்ல ஃபோன் பாப்பீங்களா? எச்சரிக்கை! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Recommended image2
Tasmac: 'குடி'மகன்களுக்கு குட்நியூஸ்! டாஸ்மாக் பார்களில் அதிரடி மாற்றம்! முழு விவரம்!
Recommended image3
Now Playing
சென்னையில் பாமகவின் 24-வது நிழல் வரவு செலவுத் திட்டம் வெளியீடு ! அன்புமணி ராமதாஸ் பேட்டி
Related Stories
Recommended image1
Mobile Phone : பஸ்ல ஃபோன் பாப்பீங்களா? எச்சரிக்கை! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
Recommended image2
Chicken : ஜூலை 31 முதல் தமிழகத்தில் சிக்கன் கிடைக்காது! வெளியான அதிரடி அறிவிப்பு! காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved