MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மதுப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை!

மதுப்பிரியர்களுக்கு பேரதிர்ச்சி.. டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை!

ஏப்ரல் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதியும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்காது.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 28 2026, 10:25 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : Asianet News

தமிழ்நாட்டில் மொத்தம் 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி தேதியுடன் நிறைவு பெறுகிறது. ஏப்ரல் 23ம் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

25
Image Credit : Asianet News

அதாவது ஏப்ரல் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான மே 4ம் தேதியும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்காது என இந்திய தேர்தல் ஆணைய உத்தரவை மேற்கோள்காட்டி ஆயத்தீர்வை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் மதுபானங்களை பதுக்குவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி... மார்ச் 31ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
Related image2
மது பிரியர்களின் தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்! புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
35
Image Credit : our own

டாஸ்மாக் கடைகள், பார்கள் இணைந்த கடைகள் என உரிமம் பெற்ற அனைத்து பார்கள் ஆகியவை வரும் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4ம் தேதியும் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

45
Image Credit : our own

குறிப்பாக ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் செயல்படும் அனைத்து வகையான மதுக்கூடங்களும் மூடப்பட வேண்டும். அதேபோல் மது தயாரிப்பு நிறுவனங்கள் மதுபானங்களை வாகனத்தில் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அன்றைய தினமும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக பார்த்தால் டாஸ்மாக் கடைகளுக்கு 5 நாட்கள் விடுமுறை வருவதால் குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

55
Image Credit : our own

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் மது விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு நாளொன்றுக்கு 12 பீர் பாட்டில்கள் அல்லது 7.8 லிட்டர் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மேலும் உள்நாட்டில் தயாரிக்கப்படும் மது வகைகளை தனிநபருக்கு நாளொன்றுக்கு 4.5 லிட்டர் அளவு தான் விற்பனை செய்ய வேண்டும். அதேபோல் வெளிநாட்டு மது வகைகளையும் தனிநபருக்கு நாளொன்றுக்கு 4.5 லிட்டர் அளவு தான் விற்பனை செய்ய வேண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக் கடை
டாஸ்மாக்
தமிழ்நாடு
சென்னை
விடுமுறை
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
Latest Videos
Recommended Stories
Recommended image1
கோடை விடுமுறை 45 நாட்கள் இல்லை! பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
Recommended image2
Now Playing
விரும்பிய தொகுதிகள் கிடைத்துள்ளன..! கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை.. திருமாவளவன் விளக்கம்
Recommended image3
47 வயது சுபாஷினி 21 வயது சுந்தர்.. இருவரும் செய்த வேலை.. சுத்துப்போட்ட போலீஸ்.. நடந்தது என்ன?
Related Stories
Recommended image1
குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி... மார்ச் 31ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
Recommended image2
மது பிரியர்களின் தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்! புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved