- Home
- Tamil Nadu News
- குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி... மார்ச் 31ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
குடிமகன்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி... மார்ச் 31ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
TASMAC: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் 4800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதனை அரசு எடுத்து நடத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 100 கோடிக்கு அளவுக்கு மது விற்பனையாகிறது. அதுவும் வார விடுமுறை மற்றும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற தினங்களில் வருமானங்கள் இரட்டிப்பாகும்.
அந்த வகையில கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 850 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் 4800க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. இதனை அரசு எடுத்து நடத்தி வருகிறது. டாஸ்மாக் கடைகளில் நாள் ஒன்றுக்கு 100 கோடிக்கு அளவுக்கு மது விற்பனையாகிறது. அதுவும் வார விடுமுறை மற்றும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற தினங்களில் வருமானங்கள் இரட்டிப்பாகும். அந்த வகையில கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சுமார் 850 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு ரூ.140 கோடிக்கு மது விற்பனை கூடுதலாக நடைபெற்றது.
இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மார்ச் 31ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் (டாஸ்மாக்) நடத்தப்படும் அனைத்து மதுபானக் கடைகளும் (FL1 உரிமங்கள்) மற்றும் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்களும் (பார்கள்) மூடப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், தங்கும் விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வரும் FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL11 உரிமம் பெற்ற அனைத்து மதுக்கூடங்களும் அன்றைய தினம் முழுமையாக மூடப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. விதியை மீறி யாரேனும் மதுபானங்களை விற்பனை செய்ய முயன்றால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மகாவீர் ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைகளுக்கான விடுமுறை தமிழகம் முழுவதும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

