- Home
- Tamil Nadu News
- Top 5 Fastest Trains: சென்னை டூ மதுரை! 120 கி.மீ வேகம்! வெறும் 5.30 மணி நேரம்! தமிழகத்தில் அசுர வேகத்தில் செல்லும் டாப் 5 ரயில்கள்!
Top 5 Fastest Trains: சென்னை டூ மதுரை! 120 கி.மீ வேகம்! வெறும் 5.30 மணி நேரம்! தமிழகத்தில் அசுர வேகத்தில் செல்லும் டாப் 5 ரயில்கள்!
இந்தியா முழுவதும் பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் வந்தே பாரத் சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில் பயணத்தில் ஆர்வம் காட்டும் பயணிகள்
நாடு முழுவதும் ரயில் பயணம் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக பாதுகாப்பான பயணம், களைப்பின்றி தூக்கிக்கொண்டு பயணம் செய்வது, டாய்லெட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளதால் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர். இந்தியா முழுவதும் பல்வேறு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதில் வந்தே பாரத் சொகுசு ரயில்கள், அதிவேக விரைவு ரயில்கள், விரைவு ரயில்கள், சாதாரண முன்பதிவில்லாத ரயில்கள், மெமு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதிவேக விரைவு ரயில்கள்
குறிப்பாக தேஜாஸ், சதாப்தி, தூரந்தோ, ராஜ்தானி உள்ளிட்ட பல்வேறு அதிவேக விரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண ரயில்களை விட அதிவேகமாக செல்லும் ரயில்களுக்கு எப்போதும் தனி மசுவு உண்டு. தமிழ்நாட்டில் அதிவேகமாக செல்லும் ரயில்களை பற்றி இப்போது பார்க்கலாம்.
வந்தே பாரத் ரயில்
இந்த பட்டியலில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முதல் இடத்தில் உள்ளன. தமிழகத்தில் சென்னை-மைசூரு, சென்னை-திருநெல்வேலி, சென்னை-கோவை இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள் மணிக்கு 120 கி.மீ. வரையிலான வேகத்தில் செல்லக்கூடியது. ஆனால் மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னை மதுரை இடையேயான 462 கி.மீ. தூரத்தை கடந்து செல்ல 7 முதல் 8 மணி வரை எடுத்து கொள்கின்றன. ஆனால் வந்தே பாரத் ரயில் 5 மணி நேரம் 38 நிமிடங்களில் கடந்து விடுகிறது.
தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்
தமிழ்நாட்டில் அதிவேகமாக செல்லும் 2வது எது என்று பார்த்தால் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில். சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் இந்த ரயில் 6 மணி 15 நிமிடங்களில் 462 கிமீ தூரத்தை கடந்து விடுகிறது. வந்தே பாரத் போன்று முற்றிலும் ஏசி வசதி கொண்ட தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மணிக்கு 110 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.
வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்
தமிழ்நாட்டில் அதிவேகமாக செல்லும் 3வது வைகை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில். மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் 7 மணி நேரம் 15 நிமிடங்களில் பயண தூரத்தை கடந்து விடுகிறது. கடந்த 2022ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி வைகை எக்ஸ்பிரஸ் வெறும் 6 மணி நேரம் 34 நிமிடங்களில் சென்னையில் இருந்து மதுரை சென்று வேகத்தில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ்
சென்னையில் இருந்து மதுரை, தென்காசி வழியாக கொல்லம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் இந்த பட்டியலில் இணைந்துள்ளது. இந்த ரயில் சென்னையில் இருந்து மதுரைக்கு 7 மணி நேரம் 10 நிமிடங்களில் வந்து விடுகிறது. இத்தனைக்கும் இந்த ரயில் எக்ஸ்பிரஸ் தான். சூப்பர் பாஸ்ட் இல்லை. சென்னை-கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 80 கி.மீ. முதல் 90 கி.மீ. வேகம் வரை இயக்கப்படுகிறது.
பாண்டியன் சூப்பர் பாஸ்ட்
சென்னை-மதுரை இடையே இயக்கப்படும் பாண்டியன் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை-மதுரை இடையேயான தொலைவை 7 மணி நேரம் 20 நிமிடங்களில் கடந்து விடுகிறது. மணிக்கு 110 கிமீ வேகத்தில் இயக்கப்படும். இந்த ரயிலுக்கு என்று தனி ரசிகர் பட்டாளே உள்ளது.

