MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு.. தமிழக அரசு கொடுத்த முக்கிய அப்டேட்!

ரேஷன் அட்டை வைத்திருப்போர் கவனத்திற்கு.. தமிழக அரசு கொடுத்த முக்கிய அப்டேட்!

Ration Card: ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர், முகவரி திருத்தம், நீக்கம் உள்ளிட்ட குறைபாடுகளை சரி செய்ய மாதந்தோறும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

1 Min read
Author : vinoth kumar
Published : Mar 27 2026, 12:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Image Credit : our own

தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் மொத்தமாக 35,083 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றனர். இந்த கடைகளில் 2 கோடியே 25 லட்சத்தி 24 ஆயிரத்து 784 குடும்ப அட்டைகள் உள்ளன. இதன் மூலம் 7 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அரிசி, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட மானிய விலையில் உணவு பொருட்களை வாங்கி வருகிறார்கள். குறிப்பாக அரசின் எந்த திட்டங்ளாக இருந்தாலும் ரேஷன் கார்டு இல்லாமல் பெற முடியாது.

25
Image Credit : our own

இந்நிலையில் ரேஷன் கார்டில் உள்ள நபர்களின் பெயர், முகவரி திருத்தம், நீக்கம் உள்ளிட்ட குறைபாடுகளை சரி செய்ய மாதந்தோறும் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கலாம்.

Related Articles

Related image1
மக்களுக்கு நிம்மதி.. பெட்ரோல், டீசல் குறையப்போகுதா? கலால் வரி ரூ.10 குறைத்த மத்திய அரசு!
Related image2
Top 5 Fastest Trains: சென்னை டூ மதுரை! 120 கி.மீ வேகம்! வெறும் 5.30 மணி நேரம்! தமிழகத்தில் அசுர வேகத்தில் செல்லும் டாப் 5 ரயில்கள்!
35
Image Credit : x/ ai image

மேலும், தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வீடு தேடி வருவதற்கு மனு கொடுக்கலாம். அதேபோல் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகத்தில் குறைபாடு இருந்தாலும் இந்த குறைத்தீர்ப்பு முகாம்களில் புகார் அளிக்கலாம். இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு ஒரு சில மணி நேரத்தில் தீர்ப்பு எட்டப்படுகிறது.

45
Image Credit : Google

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆகையால் பொது விநியோக திட்ட குறைத்தீர்ப்பு முகாம்கள் நடத்தப்படாது என மாவட்ட ஆட்சியர்கள் அந்த மாவட்ட மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். மேலும், வாரந்தோறும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நடக்கும் குறைத்தீர்ப்பு முகாம்களும் நடத்தப்படாது.

55
Image Credit : our own

எனவே, மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து பட்டா, சிட்டா, உதவித்தொகை கேட்டல், தொழில் கடன் கேட்டு மனு அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் இருந்தால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் வரை இதை செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் யாரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு நேரில் சென்று அலைய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுக்குப் பிறகு எந்தெந்த தேதிகளில் குறைத்தீர்ப்பு முகாம்கள் நடத்தப்படும் என அறிவிப்புகள் வெளியாகும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குடும்ப அட்டை
ரேஷன் கடை
தமிழ்நாடு
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தமிழ்நாடு அரசு
Latest Videos
Recommended Stories
Recommended image1
டிடிவி தினகரனின் வலதுகரத்தை தட்டித்தூக்கிய முதல்வர் ஸ்டாலின்.. யார் இந்த ரெங்கசாமி?
Recommended image2
Top 5 Fastest Trains: சென்னை டூ மதுரை! 120 கி.மீ வேகம்! வெறும் 5.30 மணி நேரம்! தமிழகத்தில் அசுர வேகத்தில் செல்லும் டாப் 5 ரயில்கள்!
Recommended image3
Now Playing
திருமாவுக்கு தொகுதிகளை இறுதி செய்வதில் இழுபறி..? மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தும் திமுக..!
Related Stories
Recommended image1
மக்களுக்கு நிம்மதி.. பெட்ரோல், டீசல் குறையப்போகுதா? கலால் வரி ரூ.10 குறைத்த மத்திய அரசு!
Recommended image2
Top 5 Fastest Trains: சென்னை டூ மதுரை! 120 கி.மீ வேகம்! வெறும் 5.30 மணி நேரம்! தமிழகத்தில் அசுர வேகத்தில் செல்லும் டாப் 5 ரயில்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved