MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Kolathur EVM: கொளத்தூரில் EVM மோசடி? மாறுமா ரிசல்ட்? அடுத்து நடக்கப்போவது என்ன?

Kolathur EVM: கொளத்தூரில் EVM மோசடி? மாறுமா ரிசல்ட்? அடுத்து நடக்கப்போவது என்ன?

Kolathur EVM: சென்னை கொளத்தூர் தொகுதியில் சரிபார்க்கப்பட்ட வாக்கு இயந்திரங்களில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக திமுக வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

4 Min read
Author : Ramprasath S
Published : Aug 01 2026, 03:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Kolathur EVM
Image Credit : X/SriramMadras

Kolathur EVM

வாக்கு இயந்திரங்கள் சரியாகத்தான் இயங்குகிறதா என்பதை சரிபார்க்க திமுக தரப்பில் அதன் தலைவர் மு.க ஸ்டாலின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கொளத்தூர், காஞ்சிபுரம், ராஜபாளையம் ஆகிய தொகுதிகளில் வாக்கு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்ட வருகின்றன. காஞ்சிபுரம் தொகுதியில் ஒரு வாக்கு இயந்திரத்தில் பழுதும், கொளத்தூர் தொகுதியில் இரண்டு விவிபாட் மிஷின்களில் பழுதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு இயந்திரத்தை சீல் வைத்ததில் குளறுபடி நடந்துள்ளதாகவும் திமுக வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதையும் படியுங்கள் -கோழி வயிற்றில் முட்டை எப்படி உருவாகுது தெரியுமா? ஒரு முட்டை உருவாக எவ்வளவு நேரம் ஆகும்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
ஈவிஎம் மிஷினின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் சோதனை
Image Credit : X/Theechatti

ஈவிஎம் மிஷினின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் சோதனை

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொளத்தூர் சட்டமன்ற தொகுதியின் ஈவிஎம் மிஷின்களை செக் அண்டு வெரிஃபிகேஷன் என்கிற நடைமுறைக்காக சிந்தாதிரிப்பேட்டை மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் 29ஆம் தேதியிலிருந்து மின்னணு எந்திரங்களை சரி பார்க்கும் பணி நடந்து வருகிறது. இது மறுவாக்கு எண்ணிக்கை அல்ல. விவிபாட்டில் பயன்படுத்தக்கூடிய எஸ்எல்யூ என்ற ஒரு கருவி அதாவது சிம்பிள் லோடிங் யூனிட் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்யும் வகையிலும், ஈவிஎம் மிஷினின் நம்பகத்தன்மையை சரிபார்க்கும் வகையிலும் நடக்கும் சோதனையாகும்.

இதையும் படியுங்கள் - ஆத்துல தண்ணி ஓடுனாலும் எப்படி பாலம் கட்டுறாங்க தெரியுமா? செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.!

Related Articles

Related image1
LPG Gas Cylinder: ஆகஸ்ட் 1 முதல் கேஸ் சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்.! இதோ 6 புதிய அப்டேட்ஸ்.!
Related image2
Lawyer: நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஏன் கருப்பு நிற அங்கி அணிகிறார்கள் தெரியுமா? 99% பேருக்கு தெரியாத தகவல்.!
37
சிம்பிள் லோடிங் யூனிட் சரியாக இயங்குகிறதா?
Image Credit : X

சிம்பிள் லோடிங் யூனிட் சரியாக இயங்குகிறதா?

சிம்பிள் லோடிங் யூனிட் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள தேர்தல் முடிவுகள் வெளிவந்த நாளிலிருந்து ஏழு நாட்களுக்குள் இரண்டாம் இடம் பெற்றவரோ அல்லது மூன்றாம் இடம் பெற்றவரோ ஈவிஎம் மிஷினின் நம்பகத்தன்மை சரிபார்க்கலாம் என்கிற உத்தரவு 2024ல் வெளியாகியிருந்தது. அந்த அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். 2021 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றிருந்தாலும் கூட ஈவிஎம் மிஷின்களில் உள்ள சந்தேகங்களை நீக்குவதற்காக அல்லது அது சரியாகத்தான் இயங்குகிறது என்பதை நிரூபிப்பதற்காக 2024 இல் ரிட் பெட்டிஷன் போட்டிருந்தோம்.

இதையும் படியுங்கள் - வெஸ்டர்ன் டாய்லெட் vs இந்தியன் டாய்லெட்.! ரெண்டுல எது நல்லது? மருத்துவர்கள் சொல்றது என்ன?

47
இது மறு வாக்கு எண்ணிக்கை அல்ல
Image Credit : X

இது மறு வாக்கு எண்ணிக்கை அல்ல

இந்த நிலையில் தமிழகத்தில் ஐந்து தொகுதிகளில் சரிபார்க்கும் முறை நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் கேட்டிருந்தோம். அதன்படி கொளத்தூர், காஞ்சிபுரம், ராஜபாளையம் தொகுதிகளில் சோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. முதலில் அந்த மிஷின்கள் ஒழுங்கான முறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதா என்பதை பார்க்க வேண்டும். இரண்டாவது அனைத்து மெஷின்களையும் கனெக்ட் செய்து அது சரியாக வேலை செய்கிறதா என்பதை பார்க்க வேண்டும். மூன்றாவது வாக்குப்பதிவு செலுத்த வேண்டும். அது BHEL இன்ஜினியர்ஸ் தலைமையில் நடக்கும். 500 வாக்குகளிலிருந்து 1400 வரை போட்டு பார்க்கலாம். இது மறு வாக்கு எண்ணிக்கை அல்ல. பரிசோதனைக்காக செய்யப்படுவது.

இதையும் படியுங்கள் -Shower Tips: பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?

57
இரண்டு இயந்திரங்களில் விவிபாட் வேலை செய்யவில்லை
Image Credit : Asianet News

இரண்டு இயந்திரங்களில் விவிபாட் வேலை செய்யவில்லை

கொளத்தூர் தொகுதியைப் பொறுத்தவரை 14 மிஷினை சோதனை செய்ய கேட்டு இருந்தோம். 29ஆம் தேதி இரண்டு மெஷின்கள் சோதனை செய்யப்பட்டது. அதில் அனைத்தும் சரியாக இருந்தது. 30-ஆம் தேதி ஒரு மிஷினில் விவிபாட் வேலை செய்யவில்லை. அதனால் அதை பாதியிலேயே நிறுத்திவிட்டோம். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின் பேரில் வேறு ஒரு வாக்குச்சாவடியிலிருந்து எடுத்து சோதனை செய்தார்கள். நேற்றைய தினம் மற்றொரு விவிபேட் ஒர்க் ஆகவில்லை. சோதனை செய்த ஆறு வாக்கு இயந்திரங்களில் இரண்டு இயந்திரங்களில் விவிபாட் வேலை செய்யவில்லை. இன்றைக்கு காலையில் அடுத்த இரண்டு வாக்கு இயந்திரங்களை சோதனை செய்ய வந்தோம்.

இதையும் படியுங்கள் - மழை எவ்வாறு அளக்கப்படுகிறது? மழைப்பொழிவை மி.மீ மற்றும் செ.மீ என அளப்பது ஏன் தெரியுமா?

67
அட்ரஸ் டேக்குகள் புதியதாக இருந்தன
Image Credit : X

அட்ரஸ் டேக்குகள் புதியதாக இருந்தன

அதில் கண்ட்ரோல் யூனிட், பேலட் யூனிட் ஆகியவற்றில் அட்ரஸ் டேக் இருக்க வேண்டும். அந்த டேக்குகள் புதியவையாக இருந்தன. ஏற்கனவே பயன்படுத்திய மாதிரி இல்லை. டேக்குகள் எதுவும் பூர்த்தி செய்யப்படாமல் புத்தம் புதியதாக இருந்தது. குறிப்பாக அதில் பின்புறம் அரக்கு சீல் வைப்பார்கள். ஆனால் இந்த அட்ரஸ் டேக்குகள் நிரப்பப்படவே இல்லை காலியாக இருக்கிறது. அரக்கு சீல் முன்பக்கமாக வைத்திருக்கிறார்கள். இது குறித்து எல்லாம் தேர்தல் அதிகாரிகளும் கேட்ட பொழுது அது ஹியூமன் எரர் என்கிறார்கள். பூத்தில் தெரியாமல் நிரப்பாமல் விட்டு விட்டார்கள் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. வாக்கு செலுத்தும் பேலட் யூனிட்டில் அட்ரஸ் டேக் இல்லை என்றால் அந்த பேலட் யூனிட்டை எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ள மாட்டார்கள். கண்ட்ரோல் யூனிட்டை தான் எடுத்துக் கொள்வார்கள்.

இதையும் படியுங்கள் - நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஏன் கருப்பு நிற அங்கி அணிகிறார்கள் தெரியுமா? 99% பேருக்கு தெரியாத தகவல்.!

77
எட்டு மிஷினில் மூன்று மிஷினில் சரியாக வேலை செய்யவில்லை
Image Credit : Asianet News

எட்டு மிஷினில் மூன்று மிஷினில் சரியாக வேலை செய்யவில்லை

அப்படி என்றால் கண்ட்ரோல் யூனிட் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு தடவை திறந்து இருக்க வேண்டும். திரும்பவும் சீல் பண்ணி இருக்கணும். அப்ப இரண்டு அரக்கு சீல் இருக்கணும். ஆனால் அதுவும் இல்லை. அந்த வாக்கு எந்திரம் இரண்டு சீல்கள் இல்லை. புதிய அட்ரஸ் டேக் இருக்கிறது. எனவே இந்த மொத்த தேர்தலுமே முறையான தேர்தல் இல்லை என்பதை எங்களால் அறிவியல் பூர்வமாகவும், சட்ட ரீதியாகவும் தெரிந்து கொள்ள முடிகிறது. மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் 30ஆம் தேதி ஒரு கடிதம் கொடுத்திருக்கிறோம். BHEL-ல் இருந்து வந்திருக்கக்கூடிய இன்ஜினியர்கள் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயாரிக்க கூடிய இன்ஜினியர்களிடம் 19 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கேட்டுள்ளோம்.

29, 30, 31 மற்றும் இந்த இன்றைய தேதி வரை இது அனைத்தும் முழுமையாக ரெக்கார்டிங் செய்யப்பட்டிருக்கிறது. அந்த முழு வீடியோ ரெக்கார்டிங்கையும் சர்டிபிகேட் ஆக கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளோம். இன்றைக்கு அட்ரஸ் டேக் இல்லாமல் இருந்த வாக்குச் சாவடி 157 உடைய மெஷினை பாதுகாக்க வைக்க வேண்டும் என கேட்டுள்ளோம். நாங்கள் நீதிமன்றத்தை அணுகும்போது இதெல்லாம் ஆதாரமாக தேவைப்படும். இன்னமும் 6 வாக்கு இயந்திரங்கள் சோதனை செய்ய வேண்டி உள்ளது. ஆனால் மொத்தம் எட்டு மிஷினில் மூன்று மிஷினில் சரியாக வேலை செய்யவில்லை. அது ஏறக்குறைய 30 சதவீதம். இதுவரை கிடைத்திருக்கிற சாட்சியே போதுமானது. இதன் பின்னர் இந்த சோதனையில் பங்கெடுப்பது தேவையற்றது.

இதை வைத்து இந்த தேர்தல் சரியான முறையில் நடைபெறவில்லை என்பது உறுதியாகிறது. இதை சரியான முறையில் நிரூபிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் செர்டிஃபைடு காப்பி கேட்டிருக்கிறோம். அந்த காபி வந்த உடனேயே திமுகவின் தலைவருடைய அனுமதியுடன் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தின் நாடி சரியான தீர்வை பெறுவோம்” என அவர் கூறியுள்ளார். கொளத்தூர் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எட்டு வாக்கு இயந்திரங்களில் மூன்று வாக்கு இயந்திரங்கள் பழுதாக இருப்பதாக திமுக எம்.பியும், வழக்கறிஞருமான என்.ஆர் இளங்கோ கூறியுள்ளது தமிழக அரசியலில் மட்டுமில்லாமல், இந்திய அரசியலிலும் புதிய பரபரப்பையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
மு. க. ஸ்டாலின்
தேர்தல் முடிவு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ரான்னியில் மிதக்கும் வீடுகள்...வெள்ளத்தில் தவிக்கும் மக்கள் : படகுகளை அனுப்பி மீட்பு பணி தீவிரம் !
Recommended image2
Now Playing
கேரளாவில் கனமழையால் தொடரும் வெள்ளப் பெருக்கு ! வீட்டிற்குள் சிக்கித் தவிக்கும் குடும்பத்தினர்!
Recommended image3
திடீரென உயரும் மின்சாரக் கட்டணம்..! உங்க EB பில்லில் இந்த தப்பு நடக்குதா? கண்டிப்பா செக் பண்ணுங்க!
Related Stories
Recommended image1
LPG Gas Cylinder: ஆகஸ்ட் 1 முதல் கேஸ் சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்.! இதோ 6 புதிய அப்டேட்ஸ்.!
Recommended image2
Lawyer: நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஏன் கருப்பு நிற அங்கி அணிகிறார்கள் தெரியுமா? 99% பேருக்கு தெரியாத தகவல்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved