MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • LPG Gas Cylinder: ஆகஸ்ட் 1 முதல் கேஸ் சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்.! இதோ 6 புதிய அப்டேட்ஸ்.!

LPG Gas Cylinder: ஆகஸ்ட் 1 முதல் கேஸ் சிலிண்டர் விதிகளில் அதிரடி மாற்றம்.! இதோ 6 புதிய அப்டேட்ஸ்.!

Gas Cylinder Rules: ஆகஸ்ட் 1 முதல் எல்பிஜி கேஸ் சிலிண்டர் விதிகளில் சில முக்கிய மாற்றங்கள் வரப்போகின்றன. மானியம் குறைப்பு, ஸ்விக்கி டெலிவரி, விலை மாற்றம் என சாமானிய மக்களை பாதிக்கக்கூடிய இந்த புதிய அப்டேட்கள் பற்றி முழுமையாக இங்கே பார்க்கலாம்.

3 Min read
Author : Ramprasath S
Published : Jul 31 2026, 02:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Gas Cylinder New Rules From August 1
Image Credit : ChatGPT

Gas Cylinder New Rules From August 1

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில், எண்ணெய் நிறுவனங்களும் மத்திய அரசும் கேஸ் சிலிண்டர் தொடர்பாக புதிய வழிகாட்டுதல்களையும், விலை மாற்றங்களையும் அறிவிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை ஆகஸ்ட் மாதம் வரும் மாற்றங்கள், சாமானிய மக்கள், குறிப்பாக இல்லத்தரசிகள், சிறு வியாபாரிகள், மாணவர்கள் வாழ்க்கையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தப்போகின்றன. சமையல் கேஸ் (LPG) தொடங்கி, பைப்லைன் கேஸ் (PNG) வரை மொத்தம் 6 முக்கிய மாற்றங்கள் வந்துள்ளன.

Western Toilet: வெஸ்டர்ன் டாய்லெட் vs இந்தியன் டாய்லெட்.! ரெண்டுல எது நல்லது? மருத்துவர்கள் சொல்றது என்ன?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
நிமிடங்களில் கேஸ் இணைப்பு.. ஸ்விக்கி மூலம் டெலிவரி.
Image Credit : Gemini AI

நிமிடங்களில் கேஸ் இணைப்பு.. ஸ்விக்கி மூலம் டெலிவரி.

இதுவரை புதிய கேஸ் இணைப்பு வாங்க வேண்டுமென்றால், ஏஜென்சிகளுக்கு அலைந்து பல நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், பாரத் பெட்ரோலியம் (BPCL) 'பாரத் லைட் ஜிப்' என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தாமதமின்றி உடனடியாக புதிய இணைப்பு பெறலாம். மும்பையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேவை, ஆகஸ்ட் 15-க்குள் நாட்டில்  24 மாநிலங்களில் உள்ள 100 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட உள்ளது. 

மறுபுறம், ஹெச்பிசிஎல் (HPCL) நிறுவனம் ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் (Swiggy Instamart) உடன் இணைந்துள்ளது. இதன் மூலம் மளிகைப் பொருட்களை ஆர்டர் செய்வது போல, சில நிமிடங்களில் கேஸ் சிலிண்டரை வீட்டிற்கு வரவழைக்கலாம். பேச்சிலர்கள், சிறு குடும்பங்கள், மாணவர்களைக் கருத்தில் கொண்டு 10 கிலோ 'ஹெச்பி நவ்யா' காம்பாக்ட் சிலிண்டர்கள் மற்றும் 5 கிலோ மினி சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சேவை தற்போது பெங்களூருவில் தொடங்கப்பட்டுள்ளது, விரைவில் மற்ற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். 

கோழி வயிற்றில் முட்டை எப்படி உருவாகுது தெரியுமா? ஒரு முட்டை உருவாக எவ்வளவு நேரம் ஆகும்?

Related Articles

Related image1
Western Toilet: வெஸ்டர்ன் டாய்லெட் vs இந்தியன் டாய்லெட்.! ரெண்டுல எது நல்லது? மருத்துவர்கள் சொல்றது என்ன?
Related image2
Egg Formation: கோழி வயிற்றில் முட்டை எப்படி உருவாகுது தெரியுமா? ஒரு முட்டை உருவாக எவ்வளவு நேரம் ஆகும்?
36
உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சி
Image Credit : Asianet News

உஜ்வாலா யோஜனா பயனாளிகளுக்குப் பெரும் அதிர்ச்சி

ஏழை மக்களுக்காக மத்திய அரசு கொண்டு வந்த 'பிரதான் மந்திரி உஜ்வலா யோஜனா' (PMUY) மானிய விதிகளில் அரசு ஒரு முக்கிய மாற்றத்தைச் செய்துள்ளது. அரசுக்கு மானியச் சுமை அதிகரிப்பதால் இந்தக் கடுமையான முடிவை எடுத்துள்ளனர். முன்பு, உஜ்வலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 9 சிலிண்டர்கள் வரை மானியம் வழங்கப்பட்டது. ஆனால் புதிய விதிகளின்படி, இனி ஆண்டுக்கு 4 சிலிண்டர்களுக்கு மட்டுமே மானியம் பொருந்தும். அந்த வரம்பை மீறினால், சாதாரண விலை கொடுத்துதான் சிலிண்டர்களை வாங்க வேண்டும்.

ஆத்துல தண்ணி ஓடுனாலும் எப்படி பாலம் கட்டுறாங்க தெரியுமா? செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.!

46
எரிவாயு விலையில் ஏற்படும் மாற்றங்கள்
Image Credit : ANI

எரிவாயு விலையில் ஏற்படும் மாற்றங்கள்

ஜூலை மாதத்தில், வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சாதாரண கேஸ் சிலிண்டர் விலையை மத்திய அரசு உயர்த்தாமல், பழைய விலையிலேயே தொடர அனுமதித்தது மக்களுக்குச் சற்று ஆறுதல் அளித்தது. ஆனால், ஹோட்டல்கள், உணவகங்கள் மற்றும் ஃபாஸ்ட் ஃபுட் சென்டர்கள் நடத்தும் வணிகர்களுக்கு அரசு ஒரு நல்ல செய்தியைச் சொல்லியுள்ளது. கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வந்த 19 கிலோ கமர்ஷியல் கேஸ் சிலிண்டர் விலையை இம்முறை குறைத்துள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைப் பொறுத்து, கமர்ஷியல் சிலிண்டர் மீது சுமார் ரூ. 170 முதல் ரூ. 182 வரை குறைக்கப்பட்டுள்ளது. இது சிறு வர்த்தகர்களுக்கு நிவாரணம் அளிக்கும். ஆகஸ்ட் மாதத்தில் மீண்டும் விலை மாற வாய்ப்புள்ளது.

Shower Tips: பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?

56
PNG இணைப்பைப் பயன்படுத்தினால் பழைய சிலிண்டர் விதிகள்
Image Credit : stockPhoto

PNG இணைப்பைப் பயன்படுத்தினால் பழைய சிலிண்டர் விதிகள்

நீங்கள் தற்போது வீட்டில் பைப்லைன் கேஸ் (PNG) இணைப்பு வைத்திருக்கிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கை. PNG இணைப்பு பெற்ற 30 நாட்களுக்குள், உங்கள் பழைய எல்பிஜி சிலிண்டர் இணைப்பை (அது இண்டேன், பாரத் அல்லது ஹெச்பி எதுவாக இருந்தாலும்) ரத்து செய்ய வேண்டும் அல்லது சரண்டர் செய்ய வேண்டும். ஒருவேளை, எதிர்காலத்தில் நீங்கள் PNG வசதி இல்லாத வேறு பகுதிக்கு மாற நேர்ந்தால், பழைய எல்பிஜி இணைப்பை மீண்டும் எளிதாக செயல்படுத்த 'டிரான்ஸ்ஃபர் வவுச்சர்' பெற்றுக்கொள்ளலாம் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Astrology: அரசு வேலை யோகம் தரும் கிரகங்கள்.! எந்த கிரகம் எந்த வீட்டில் இருந்தால் அரசு வேலை கிடைக்கும்?

66
டிஜிட்டல் முன்பதிவு, OTP விநியோகம், ஒப்பந்தக் கால விவரங்கள்
Image Credit : Chatgpt

டிஜிட்டல் முன்பதிவு, OTP விநியோகம், ஒப்பந்தக் கால விவரங்கள்

சிலிண்டர் புக்கிங் மற்றும் டெலிவரியில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்க, எண்ணெய் நிறுவனங்கள் சில கடுமையான விதிகளை அமல்படுத்துகின்றன. 

  • டிஜிட்டல் புக்கிங் மட்டுமே: இனி கேஸ் ஏஜென்சி அலுவலகங்களுக்கு அலையத் தேவையில்லை. முற்றிலும் ஆன்லைன், டிஜிட்டல் முறையிலேயே புக் செய்ய வேண்டும். 
  • ஓடிபி கட்டாயம்: டெலிவரி பாய் உங்கள் வீட்டிற்கு சிலிண்டரைக் கொண்டு வரும்போது, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் செக்யூரிட்டி கோடைச் சொன்னால் மட்டுமே டெலிவரி செய்வார்கள். ஓடிபி சொல்லாவிட்டால், டெலிவரியைத் திருப்பி எடுத்துச் செல்வார்கள். 
  • லாக்-இன் பீரியட்: ஒரு சிலிண்டர் வாங்கிய உடனேயே அடுத்த சிலிண்டரை புக் செய்ய முடியாது. நகரங்களில் வசிப்பவர்கள் 25 நாட்களும், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் 45 நாட்களும் இடைவெளி கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்.

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வணிகம்
எரிவாயு உருளை
வாயு உருளை
Latest Videos
Recommended Stories
Recommended image1
கல்யாண செலவை குறைக்க புதிய வழி... செலவுக்கு சூப்பர் ஐடியா! இந்தியாவில் வேகமெடுக்கும் 'Wedding Tourism'!
Recommended image2
எம்.எல்.ஏ பதவிகளைத் துறந்த அதிமுக விஐபிகள்.! தவெக-வில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்?
Recommended image3
Magalir Urimai Thogai Scheme: எல்லோருக்கும் ரூ.2,500! பட்ஜெட்டுக்கு முன்பே வெளியாகும் சர்ப்ரைஸ்! மாஸ் காட்டப்போகும் சுதந்திரதின அறிவிப்பு.!
Related Stories
Recommended image1
Western Toilet: வெஸ்டர்ன் டாய்லெட் vs இந்தியன் டாய்லெட்.! ரெண்டுல எது நல்லது? மருத்துவர்கள் சொல்றது என்ன?
Recommended image2
Egg Formation: கோழி வயிற்றில் முட்டை எப்படி உருவாகுது தெரியுமா? ஒரு முட்டை உருவாக எவ்வளவு நேரம் ஆகும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved