MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: அரசு வேலை யோகம் தரும் கிரகங்கள்.! எந்த கிரகம் எந்த வீட்டில் இருந்தால் அரசு வேலை கிடைக்கும்?

Astrology: அரசு வேலை யோகம் தரும் கிரகங்கள்.! எந்த கிரகம் எந்த வீட்டில் இருந்தால் அரசு வேலை கிடைக்கும்?

Astrology: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதற்கு ஜாதகத்தில் சில வீடுகளின் பலமும், குறிப்பிட்ட கிரகங்களின் அனுக்கிரகமும் அவசியமாகும். அது குறித்து இங்கு காணலாம்.

4 Min read
Author : Ramprasath S
Published : Jul 31 2026, 11:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Government Job Astrology Predictions
Image Credit : ChatGPT

Government Job Astrology Predictions

படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை என்பது மிகப்பெரிய கனவாகும். சிலர் எவ்வளவு முயன்றாலும் அரசு வேலை கிடைப்பது சவாலான காரியமாக இருக்கிறது. ஆனால் சிலர் குறைந்த உழைப்பை நல்கி, அரசு வேலையை பெற்று விடுகின்றனர். இதற்கு காரணம் அவர்கள் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலையாகும். ஒருவருக்கு அரசு வேலை கிடைப்பதற்கு ஜாதகத்தில் குறிப்பிட்ட கிரகங்களின் அமர்வு முக்கியமாக கருதப்படுகிறது. அரசு வேலை யோகத்தை தரும் முக்கிய கிரகங்கள் மற்றும் அவை எந்தெந்த வீடுகளில் அமைந்தால் அரசு வேலை கிடைக்கும் என்பது குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் - பிறக்கும் போதே கஜகேசரி ராஜயோகத்துடன் பிறக்கும் ராசிகள் யார்? குருவின் சக்திவாய்ந்த பார்வை இவர்களுக்கு எப்போதும் இருக்குமாம்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
அரசு வேலை யோகம் தரும் முக்கிய கிரகங்கள்
Image Credit : Gemini AI

அரசு வேலை யோகம் தரும் முக்கிய கிரகங்கள்

  1. சூரியன்: அரசு வேலைக்கு முழு மற்றும் முக்கிய காரணம் சூரிய பகவான் தான். சூரிய பகவான் அதிகாரம், தலைமைப் பண்பு, நிர்வாகத் திறன், கௌரவம் ஆகியவற்றிற்கு அதிபதியாவார்.
  2. செவ்வாய்: சீருடைப் பணியாளர், காவல்துறை, தீயணைப்பு துறை, பொறியியல் மற்றும் நிர்வாகத் துறைகளில் வேலை கிடைப்பதற்கு செவ்வாய் பகவானின் பலம் அவசியம்.
  3. சனி: சனி பகவான் கர்ம காரகன் ஆவார். மக்களுக்காக பணியாற்றும் சேவை துறைகள், நீதித்துறை, நிலையான அரசு பணிகளுக்கு சனியின் சுப பார்வை தேவை.
  4. குரு: குரு பகவான் உயர்பதவி மற்றும் வழிகாட்டிகளுக்கு காரகராவார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஆசிரியர் பணி, நிதித்துறை, நீதித்துறை போன்ற பணிகளுக்கு குருவின் அனுக்கிரகம் தேவை.
  5. புதன்: கணக்கு வழக்குகள், வங்கித் துறை போன்ற துறைகளுக்கு புதன் பலமாக இருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள் - உங்க ஜாதகத்துல குரு பகவான் இந்த வீட்ல இருக்காரா? அப்போ நீங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.!

Related Articles

Related image1
Astrology: உங்க ஜாதகத்துல குரு பகவான் இந்த வீட்ல இருக்காரா? அப்போ நீங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.!
Related image2
Gajakesari Yoga: பிறக்கும் போதே கஜகேசரி ராஜயோகத்துடன் பிறக்கும் ராசிகள் யார்? குருவின் சக்திவாய்ந்த பார்வை இவர்களுக்கு எப்போதும் இருக்குமாம்.!
39
அரசு வேலைக்கு ஆராய வேண்டிய முக்கிய வீடுகள்
Image Credit : Asianet News

அரசு வேலைக்கு ஆராய வேண்டிய முக்கிய வீடுகள்

ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளில் அரசு வேலைக்கு முக்கியமாக பார்க்க வேண்டிய வீடுகள் 1,5,6,10 மற்றும் 11ஆம் தேதிகள் ஆகும்.

  • 1-ஆம் வீடு: இந்த வீடு லக்ன ஸ்தானம் எனப்படும். ஜாதகரின் பொதுவான யோகம், தைரியம் மற்றும் சுறுசுறுப்பு இங்கு கணிக்கப்படுகிறது.
  • 5-ஆம் வீடு: இந்த வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் எனப்படுகிறது. தேர்வுகள் மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற உதவும்.
  • 6-ஆம் வீடு: இந்த வீடு சத்ரு ஸ்தானம் எனப்படும். தொழிலில் இருக்கும் போட்டி, பொறாமைகள் எதிரிகள் சத்ருக்களை குறிக்கும் வீடாகும்.
  • 10-ஆம் வீடு: இந்த வீடு கர்ம ஸ்தானமாகும். இது வேலை, தொழில் மற்றும் சமூக அந்தஸ்தை தீர்மானிக்கும் முக்கிய வீடாகும்.
  • 11ஆம் வீடு: இந்த வீடு லாப ஸ்தானமாகும். வேலை மூலம் கிடைக்கும் நிலையான வருமானம், லாபம் மற்றும் பலன்களை குறிக்கும் இடமாகும்.

இதையும் படியுங்கள் -தனுசு ராசியில் பிறந்தவர்களின் பிறப்பின் தெய்வீக ரகசியம் என்ன தெரியுமா? பாம்பாட்டி சித்தர் கூறிய உண்மைகள்.!

49
சூரிய பகவான்
Image Credit : Asianet News

சூரிய பகவான்

சூரிய பகவான் பத்தாம் வீட்டில் தனித்தோ அல்லது சுப சேர்க்கையோ பெற்றிருந்தால் அரசு வேலை கிடைப்பது ஏறக்குறைய உறுதி. பத்தாம் வீடு சூரியன் திக்பலம் அடையும் வீடாகும். 1,5,6,9 ஆகிய வீடுகளில் சூரியன் இருந்தாலும் சொந்த வீடான சிம்மம் அல்லது உச்ச வீடான மேஷத்திலும் அமைவது மிக சிறப்பு.

இதையும் படியுங்கள் -பூச நட்சத்திரத்தில் அமரும் புதன் பகவான்.! 4 ராசிக்காரர்களுக்கு குபேர ஐஸ்வர்யத்துடன் அடிக்கும் ஜாக்பாட்.!

59
சனி பகவான்
Image Credit : Asianet News

சனி பகவான்

சனி ஆறாம் வீட்டில் இருப்பது எதிரிகளையும், போட்டிகளையும் வெல்லும் தைரியத்தைத் தரும். பத்தாம் வீட்டில் சனி பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்றால் நிலையான அரசுப் பணி அமையும். சூரிய பகவானும், சனி பகவானும் 6,10,11 ஆகிய வீடுகளோடு சுபமான முறையில் தொடர்பு கொண்டால் (பார்வை அல்லது சேர்க்கை) அரசு வேலை கிடைக்கும் யோகம் உண்டாகும்.

இதையும் படியுங்கள் -இந்த தேதிகளில் பிறந்தவர்களால் பேய், பிசாசு நடமாட்டத்தை உணர முடியும்.! அமானுஷ்ய விஷயங்கள் கண்ணுக்கு தெரியுமாம்.!

69
செவ்வாய் பகவான்
Image Credit : Asianet News

செவ்வாய் பகவான்

செவ்வாய் 6 அல்லது 10-ஆம் வீட்டில் இருப்பது அரசு வேலை உறுதி செய்யும். பத்தாம் வீட்டில் செவ்வாய் பகவான் திக் பலம் பெறுகிறார். மகரத்தில் உச்சம் பெற்று அல்லது மேஷம் அல்லது விருச்சிகம் போன்ற சொந்த வீடுகள், 3,6,10 ஆகிய வீடுகளில் அமர்ந்தால் ராணுவம், காவல் அல்லது தொழில்நுட்பம் சார்ந்த அரசு பணிகள் கிடைக்கும்.

இதையும் படியுங்கள் -உங்க கல்யாணம் சீக்கிரம் நடக்குமா? லேட்டா நடக்குமா? பிறந்த தேதியே வச்சே கண்டுபிடிக்கலாம் வாங்க.!

79
குரு பகவான்
Image Credit : Gemini AI

குரு பகவான்

குரு பகவான் பத்தாம் வீட்டில் அமர்ந்தாலோ அல்லது பத்தாம் வீட்டை தனது சுப பார்வையால் பார்த்தாலோ மிக உயர்ந்த பதவிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற வேலைகள் கிடைக்கும் அல்லது பச்சை மையால் கையெழுத்திடும் அளவிற்கு மிக உயர்ந்த அரசு பணிகளில் சேருவீர்கள்.

இதையும் படியுங்கள் -ஜாதகத்தில் சனி பகவான் எந்த வீட்டில் அமர்ந்து இருக்கிறார்னு பாருங்க.! உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்னு நாங்க சொல்றோம்.!

89
அரசு வேலையை உறுதி செய்யும் முக்கிய ஜாதக யோகங்கள்
Image Credit : AI Generated

அரசு வேலையை உறுதி செய்யும் முக்கிய ஜாதக யோகங்கள்

பத்தாம் வீட்டின் அதிபதியும் ஆறாம் வீட்டின் அதிபதியும் ஒன்று கூடினாலோ அல்லது பரிவர்த்தனை பெற்றாலோ அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மிக அதிகம். சூரியன் மற்றும் புதன் இணைவது புதாதித்ய யோகம் உருவாகும். இந்த யோகம் 1,6,10 ஆகிய வீடுகளில் அமைந்தால் அரசுத் தேர்வுகளில் மிகச்சிறந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைவர். அரசு வேலைக்கான தேர்வுகளை எழுதும் பொழுது ஜாதகருக்கு குரு, செவ்வாய், சூரியன் அல்லது 6,10-ஆம் வீட்டின் அதிபதிகளின் தசா புக்தி நடப்பது மிக மிக முக்கியமாகும்.

இதையும் படியுங்கள் -இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒழுக்கமாகவும், சுய கட்டுப்பாடோட இருப்பாங்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?

99
இறுதியாக
Image Credit : Getty

இறுதியாக

சுருக்கமாகச் சொன்னால் உங்கள் ஜாதகத்தில் சூரியனும், பத்தாம் வீடு அல்லது பத்தாம் வீட்டின் அதிபதியும் பலமாக இருந்து, ஆறாம் வீட்டில் சுப தொடர்பும் அமைந்தால் நிச்சயமாக அரசு வேலை கிடைப்பதற்கான யோகம் உண்டு. ஜோதிட சாஸ்திரங்கள் ஒரு வழிகாட்டி மட்டுமே. அரசு வேலை கிடைப்பதற்கு கிரகங்களின் நிலையோடு தொடர் உழைப்பும், கடுமையான முயற்சியும் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Monthly Money Horoscope: பணமழை பெய்யும் நேரமிது.! ஜூலையில் வானில் இருந்து கொட்டப்போகும் தங்க காசுகள்.! யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
Recommended image2
பிரச்சனைகளை குஜிலிமஸ்து செய்யப்போகும் குரு - செவ்வாய் சேர்க்கை... 45 நாட்களுக்கு குபேர அருள் பெறப்போகும் 5 ராசிகள்
Recommended image3
Today Horoscope: வெள்ளிக்கிழமை ராசிபலன்: இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமா? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்
Related Stories
Recommended image1
Astrology: உங்க ஜாதகத்துல குரு பகவான் இந்த வீட்ல இருக்காரா? அப்போ நீங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.!
Recommended image2
Gajakesari Yoga: பிறக்கும் போதே கஜகேசரி ராஜயோகத்துடன் பிறக்கும் ராசிகள் யார்? குருவின் சக்திவாய்ந்த பார்வை இவர்களுக்கு எப்போதும் இருக்குமாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved