- Home
- Astrology
- Mercury Transit: பூச நட்சத்திரத்தில் அமரும் புதன் பகவான்.! 4 ராசிக்காரர்களுக்கு குபேர ஐஸ்வர்யத்துடன் அடிக்கும் ஜாக்பாட்.!
Mercury Transit: பூச நட்சத்திரத்தில் அமரும் புதன் பகவான்.! 4 ராசிக்காரர்களுக்கு குபேர ஐஸ்வர்யத்துடன் அடிக்கும் ஜாக்பாட்.!
Mercury Transit 2026 in Poosa Nakshatra: ஆகஸ்ட் 8-ம் தேதி புதன் கிரகம் பூச நட்சத்திரத்திற்குள் நுழைகிறார். இதனால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் ஜாக்பாட் அடிக்கப் போகிறது. அந்த ராசிகள் பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

Mercury Transit 2026 in Poosa Nakshatra
ஜோதிடத்தின்படி, ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், அவர்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள். ஆகஸ்ட் 8, 2026 அன்று, புதன் கிரகம் புனர்பூசம் நட்சத்திரத்திலிருந்து பூசம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறது. இந்த மாற்றத்தால் சில ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என திருக்கணித பஞ்சாங்கம் கூறுகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் பற்றி இங்கு காணலாம்.
இதையும் படியுங்கள் - 30 வருடங்களுக்குப் பின் மேஷ ராசியில் சனி பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு கொட்டி கொடுக்கப்போகும் சனி பகவான்.!
மிதுன ராசி
மிதுன ராசியின் அதிபதி புதன் என்பதால், இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் முடிவெடுக்கும் திறன் சிறப்பாகும். பாதியில் நின்ற வேலைகள் வேகம் பிடிக்கும். மார்க்கெட்டிங், மீடியா, ஐடி துறையினருக்கு இது ஒரு பொன்னான காலம். புதிய வருமான வழிகள் உருவாகி உங்கள் வாழ்க்கை முறையை மாற்றும். பழைய நண்பர் ஒருவருடன் மீண்டும் தொடர்பு ஏற்படும்.
இதையும் படியுங்கள் - Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்களால் பேய், பிசாசு நடமாட்டத்தை உணர முடியும்.!
கன்னி ராசி
பூசம் நட்சத்திரத்தில் புதனின் சஞ்சாரம் கன்னி ராசிக்கு புதிய கதவுகளைத் திறக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த அரசு வேலைகள் முன்னேறும். வேலை மாற நினைப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். பழைய முதலீடுகள் லாபம் தரும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் தொடங்கும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான சூழல் உருவாகும்.
இதையும் படியுங்கள் -ஜாதகத்தில் சனி பகவான் எந்த வீட்டில் அமர்ந்து இருக்கிறார்னு பாருங்க.! உங்களுக்கு என்ன பலன் கிடைக்கும்னு நாங்க சொல்றோம்.!
துலாம் ராசி
இந்த புதன் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களின் செல்வாக்கை அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கும். வெளிநாடு தொடர்பான வேலைகளில் நல்ல முன்னேற்றம் காணலாம். நிதிப் பிரச்சனை தீரும். உங்கள் வாழ்க்கைத்துணையின் ஆதரவு உங்கள் முடிவுகளை எளிதாக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு உயரும்.
இதையும் படியுங்கள் - இந்த தேதிகளில் பிறந்தவர்கள் ஒழுக்கமாகவும், சுய கட்டுப்பாடோட இருப்பாங்களாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
மகர ராசி
மகர ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கையும், முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். பார்ட்னர்ஷிப் தொழிலில் நம்பிக்கை வளரும். வருமானம் மற்றும் சேமிப்பை அதிகரிக்கும் திட்டங்கள் வெற்றி பெறும். சொத்து அல்லது வாகனம் வாங்குவது குறித்த முடிவுகள் சாதகமாக அமையும். குடும்ப கவலைகள் குறையும். சட்ட விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.
இதையும் படியுங்கள் -Chanakya Niti: கோடி ரூபாய் கொடுத்தாலும், இவர்களை மட்டும் திருமணம் செய்யாதீர்கள்.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

