MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • திடீரென உயரும் மின்சாரக் கட்டணம்..! உங்க EB பில்லில் இந்த தப்பு நடக்குதா? கண்டிப்பா செக் பண்ணுங்க!

திடீரென உயரும் மின்சாரக் கட்டணம்..! உங்க EB பில்லில் இந்த தப்பு நடக்குதா? கண்டிப்பா செக் பண்ணுங்க!

திடீரென மின்சாரக் கட்டணம் அதிகரிப்பதற்கு 'ஸ்லாப்' மாற்றம், ASD கட்டணம், ஃபேன்டம் லோட் போன்ற பல காரணங்கள் இருக்கலாம். உங்கள் வீட்டில்  தவறு நடந்தால் மின்சார வாரியத்தில் எப்படிப் புகார் அளிப்பது என்பதையும் இந்த கட்டுரை விளக்குகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 01 2026, 08:21 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
திடீரென எகிறும் கரண்ட் பில்.!
Image Credit : Gemini AI

திடீரென எகிறும் கரண்ட் பில்.!

மாதக் கடைசியில் மின்சாரக் கட்டண பில் கையில் கிடைக்கும் போது, பலருக்கு இதயத் துடிப்பே நின்றுவிடும் போலிருக்கும். "போன மாசம் வரைக்கும் கரெக்ட்டாதானே வந்துச்சு... இந்த மாசம் எப்படி திடீர்னு இரு மடங்கு ஆச்சு? நாங்க வழக்கம்போலத்தானே கரண்ட் யூஸ் பண்ணினோம்!" என்று புலம்புவது உங்கள் வீட்டில் நடக்கும் கதைதானா?

அப்படியென்றால், உங்கள் EB பில்லில் நீங்கள் கவனிக்காமல் விட்ட ஏதோ ஒரு தவறு அல்லது மாற்றம் நடந்திருக்கிறது என்றுதான் அர்த்தம்! அப்படி என்னென்ன தவறுகள் நடப்பதற்கு வாய்ப்பிருக்கிறது? உங்க பில்லில் உடனே எதைச் சரிபார்க்க வேண்டும்? விரிவாகப் பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
'ஸ்லாப்' ஆப்பத்தில் மாட்டிக்கொண்டீர்களா? (Tariff Slab Change)
Image Credit : our own

'ஸ்லாப்' ஆப்பத்தில் மாட்டிக்கொண்டீர்களா? (Tariff Slab Change)

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TANGEDCO) கட்டண முறையில் உள்ள மிகப்பெரிய ரகசியமே இந்த 'ஸ்லாப் ரேட்' தான்! நீங்கள் பயன்படுத்தும் யூனிட்டுகள் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடக்கும் போது, யூனிட்டுக்கான கட்டணம் உயர்த்தப்படும்.

உதாரணத்தை செக் பண்ணுங்க: நீங்கள் 500 யூனிட் வரை பயன்படுத்தும்போது இருக்கும் கட்டண விகிதத்தை விட, 501-வது யூனிட்டைத் தொடும்போது மொத்தக் கணக்கீட்டு முறையே மாறிவிடும். அந்த ஒரே ஒரு கூடுதல் யூனிட்டினால், உங்கள் பில் தொகையில் ஆயிரக்கணக்கில் வித்தியாசம் வரலாம்!

Related Articles

Related image1
Business: மாதம் ரூ.30,000 வருமானத்தை தரும் சுண்டல் விற்பனை.! தெரிந்த தொழில் தெரியாத சீக்ரெட்.!
Related image2
Business Idea: மாசம் 1 லட்சம் சம்பாதிக்கலாம்! இந்த டிரெண்டிங் பிசினஸ் ஐடியா பற்றி தெரியுமா?
37
பில்லில் 'ASD' கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளதா?
Image Credit : Google

பில்லில் 'ASD' கட்டணம் சேர்க்கப்பட்டுள்ளதா?

திடீரென பில் தொகை அதிகமாக இருந்தால், பில்லை நன்றாகத் திருப்பிப் பாருங்கள். அதில் ASD (Additional Security Deposit) அதாவது கூடுதல் காப்பு வைப்புத்தொகை என்ற பிரிவு இருக்கிறதா என்று செக் பண்ணுங்க! மின்சார வாரிய விதிமுறைகளின்படி, நுகர்வோரின் கடந்த கால பயன்பாட்டிற்கு ஏற்ப ஆண்டிற்கு ஒருமுறை இந்த வைப்புத்தொகை பில்லில் சேர்க்கப்படும். இது வழக்கமான மின் பயன்பாட்டுக் கட்டணம் அல்ல.

47
ஆஃப் பண்ணியும் ஓடும் 'ஃபேன்டம் லோட்' திருட்டு!
Image Credit : our own

ஆஃப் பண்ணியும் ஓடும் 'ஃபேன்டம் லோட்' திருட்டு!

சுவிட்ச் போர்டில் சுவிட்சை ஆஃப் செய்யாமல், ரிமோட்டில் மட்டும் டிவி, ஏசியை ஆஃப் செய்து வைக்கிறீர்களா? மடிக்கணினி, மொபைல் சார்ஜர்களை பிளக்கிலேயே போட்டு வைத்திருக்கிறீர்களா? இதைத்தான் 'ஃபேன்டம் லோட்' (Phantom Load) என்பார்கள். சாதனங்கள் இயங்காவிட்டாலும், சுவிட்ச் ஆன்-இல் இருக்கும் போது மறைமுகமாக மின்சாரத்தை உறிஞ்சிக்கொண்டே இருக்கும். இதுவும் உங்கள் பில்லை உயர்த்தும் ஒரு மறைமுகத் தவறாகும்!

57
பழைய சாதனங்கள் செய்யும் சதி!
Image Credit : our own

பழைய சாதனங்கள் செய்யும் சதி!

உங்கள் வீட்டில் பல வருடங்களாகப் பயன்படுத்தப்படும் பழைய ஏசி, பிரிட்ஜ் அல்லது வாஷிங் மெஷின் இருக்கிறதா? வெளிப்பார்வைக்கு அவை சரியாக ஓடுவது போலத் தெரிந்தாலும், அவற்றின் அமுக்கி (Compressor) மற்றும் மோட்டார்கள் பழசாகிவிட்டதால் இயல்பை விட 2 முதல் 3 மடங்கு அதிக மின்சாரத்தை இழுக்கத் தொடங்கும். இது உங்கள் பாக்கெட்டை ரகசியமாகக் காலி செய்யும்!

வயரிங் கசிவு (Current Leakage) இருக்கிறதா? 

வீட்டின் சுவர்களில் உள்ள வயரிங் பழசாகி பழுடைந்திருந்தாலோ அல்லது ஈரப்பதம் காரணமாகச் சிறிய மின் கசிவு ஏற்பட்டிருந்தாலோ, நீங்கள் பயன்படுத்தாத மின்சாரமும் பூமிக்குச் சென்று விரயமாகும். இதுவும் மீட்டர் வேகமாக ஓடக் காரணமாகிவிடும்.

67
பயன்பாட்டையும் தாண்டி பில் அதிகமா வந்தா... உங்க மீட்டர் மேல சந்தேகமா?
Image Credit : Asianet News

பயன்பாட்டையும் தாண்டி பில் அதிகமா வந்தா... உங்க மீட்டர் மேல சந்தேகமா?

மேலே சொன்ன எந்தத் தவறும் உங்கள் பக்கத்தில் இல்லை; ஆனால் பயன்பாட்டை விடப் பில் அதிகமாக வந்திருக்கிறது என்றால், இந்த 2 விஷயங்கள் நடந்திருக்கலாம்:

  • EB மீட்டர் கோளாறு: உங்கள் வீட்டில் உள்ள மின் மீட்டர் பழுதடைந்து, தவறான வேகத்தில் ஓடத் தொடங்கியிருக்கலாம்.
  • ரீடிங் எடுப்பதில் குளறுபடி: மின்வாரிய ஊழியர் யூனிட்களைக் கணக்கிட்டுப் பதிவிடும் போது, தவறுதலாக அதிக எண்களைப் பதிவிட்டிருக்கலாம்.
77
தவறு நடந்திருந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?
Image Credit : our own

தவறு நடந்திருந்தால் உடனே என்ன செய்ய வேண்டும்?

உங்கள் பில்லில் தவறு இருப்பதாக உணர்ந்தால், சிறிதும் தாமதிக்காமல் கீழே உள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்:

  • நேரில் சென்று புகார் அளிக்க: உங்கள் பகுதிக்கான மின்வாரிய உதவிப் பொறியாளர் (AE) அலுவலகத்திற்கு நேரில் செல்லவும். தற்போதைய மீட்டர் ரீடிங்கைப் படமெடுத்துக் கொண்டு, முந்தைய கட்டண பில்களுடன் சென்று எழுத்துப்பூர்வமாகப் புகார் மனு அளியுங்கள்.
  • கட்டணமில்லா எண்களுக்கு அழைக்க: மின்சார வாரியத்தின் 24 மணி நேர சேவை எண்களான 1912 அல்லது 94987 94987 என்ற எண்களைத் தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண்ணைக் (Consumer Number) கூறிப் புகாரைப் பதிவு செய்யலாம்.
  • நினைவில் வையுங்கள்: மின்சாரத்தை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவதும், பில் வந்தவுடன் அதில் உள்ள யூனிட்களைச் சரிபார்ப்பதும் மட்டுமே நம் பணத்தை வீணாகாமல் தடுக்கும் சிறந்த வழிகளாகும்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
வணிக யோசனை
வணிகம்
வணிக உரிமையாளர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
ITR ரீஃபண்ட் வேண்டுமா? PAN-ல் உள்ள இந்த தவறுகளை உடனே சரிசெய்யுங்கள்.!
Recommended image2
LPG Price Cut: அதிகாலையிலேயே குட்நியூஸ்.. அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை.. எவ்ளோ தெரியுமா?
Recommended image3
Gold Demand: அச்சச்சோ.! தங்கத்தை மக்கள் வாங்குறதை கம்மி பண்ணிட்டாங்க.. காரணம் இதுவா.?
Related Stories
Recommended image1
Business: மாதம் ரூ.30,000 வருமானத்தை தரும் சுண்டல் விற்பனை.! தெரிந்த தொழில் தெரியாத சீக்ரெட்.!
Recommended image2
Business Idea: மாசம் 1 லட்சம் சம்பாதிக்கலாம்! இந்த டிரெண்டிங் பிசினஸ் ஐடியா பற்றி தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved