MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Special
  • Facts: மழை எவ்வாறு அளக்கப்படுகிறது? மழைப்பொழிவை மி.மீ மற்றும் செ.மீ என அளப்பது ஏன் தெரியுமா?

Facts: மழை எவ்வாறு அளக்கப்படுகிறது? மழைப்பொழிவை மி.மீ மற்றும் செ.மீ என அளப்பது ஏன் தெரியுமா?

Interesting Facts: வானிலை ஆய்வு மையம் மழையை எப்படி அளக்குது? இத்தனை மில்லிமீட்டர், அத்தனை சென்டிமீட்டர் மழை பெய்திருக்குனு சொல்றாங்களே, அதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா? இந்த பதிவில் தெரிஞ்சிக்கலாம் வாங்க.

3 Min read
Author : Ramprasath S
Published : Jul 30 2026, 12:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மழை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்
Image Credit : Gemini AI

மழை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

நம்ம டெய்லி லைஃப்ல 'இத்தனை மில்லிமீட்டர் மழை பதிவாகியிருக்கு'னு நியூஸ்ல கேட்குறோம். இந்த மில்லிமீட்டர், சென்டிமீட்டர் கணக்கு நிறைய பேருக்குப் புரியறதில்ல. 1 மி.மீ மழைனா எவ்வளவு தண்ணி? மிதமான மழை, கனமழைனு எப்படி பிரிக்கிறாங்க? இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மழையை எப்படி அளக்குதுனு இங்க பார்க்கலாம்.

Interesting Facts: ஆத்துல தண்ணி ஓடுனாலும் எப்படி பாலம் கட்டுறாங்க தெரியுமா? செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மழைப்பொழிவை எப்படி அளக்கிறார்கள்?
Image Credit : ChatGPT

மழைப்பொழிவை எப்படி அளக்கிறார்கள்?

வானிலை அதிகாரிகள் மழையை அளக்க சில ஸ்பெஷல் கருவிகளைப் பயன்படுத்துறாங்க. இதுல முக்கியமானது 'ரெயின் கேஜ்' (Rain Gauge) அல்லது மழைமானி. இந்திய வானிலை ஆய்வு மையம் நாடு முழுக்க பல இடங்கள்ல இந்த மழைமானிகளை வெச்சு தகவல்களைச் சேகரிக்குது. 

  1. சைமன்ஸ் ரெயின் கேஜ் (Symons Rain Gauge): இது ஒரு பாரம்பரிய கருவி. ஒரு புனல் வழியா மழை நீர் உள்ளே இருக்கிற பாட்டிலுக்குள்ள சேரும். தினமும் காலை 8:30 மணிக்கு இந்தத் தண்ணியை அளந்து கணக்கெடுப்பாங்க. 
  2. தானியங்கி வானிலை நிலையங்கள் (AWS): இதுல 'டிப்பிங் பக்கெட்' (Tipping Bucket) ரெயின் கேஜ்களைப் பயன்படுத்துறாங்க. ஒவ்வொரு 0.2 மி.மீ மழை நீர் நிறைஞ்சதும், பக்கெட் கவிழ்ந்து தண்ணியைக் கொட்டிடும். இது டிஜிட்டல் சிக்னலா மாறி, டேட்டா நேரடியா IMD சர்வருக்குப் போயிடும். 
  3. டாப்ளர் வெதர் ரேடார் (Doppler Weather Radar): இது வானத்துல மேகங்களோட அடர்த்தி, பரவல், மழையோட தீவிரத்தை உடனுக்குடன் துல்லியமா கணிக்க உதவுது. இதுதான் லேட்டஸ்ட் டெக்னாலஜி.

US Jobs: அமெரிக்காவில் இந்தியர்களுக்கு லட்சங்களில் சம்பளம் தரும் டாப் வேலைகள் பட்டியல் இதோ.!

Related Articles

Related image1
Shower Tips: பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?
Related image2
Interesting Facts: ஆத்துல தண்ணி ஓடுனாலும் எப்படி பாலம் கட்டுறாங்க தெரியுமா? செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.!
35
மில்லிமீட்டர் (mm) அல்லது சென்டிமீட்டர் (cm) மழை என்றால் எவ்வளவு?
Image Credit : ANI

மில்லிமீட்டர் (mm) அல்லது சென்டிமீட்டர் (cm) மழை என்றால் எவ்வளவு?

பொதுவா '1 மில்லிமீட்டர் மழை' அல்லது '1 சென்டிமீட்டர் மழை'னா எவ்வளவு தண்ணினு கற்பனை பண்றது கொஞ்சம் கஷ்டம். இதை ஈஸியா புரிஞ்சுக்க ஒரு சின்ன உதாரணம் பார்க்கலாம். 

மில்லிமீட்டர் (mm) மழை: தட்டையான, தண்ணி கீழேயும் போகாம, ஆவியாகவும் ஆகாம, பக்கத்துலயும் வழியாம இருக்கிற ஒரு சதுர மீட்டர் இடத்தை கற்பனை பண்ணிக்கோங்க. இந்த ஒரு சதுர மீட்டர் இடத்துல 1 மில்லிமீட்டர் உயரத்துக்குத் தண்ணி நின்னா, அதுதான் 1 மி.மீ மழைப்பொழிவு. அதேமாதிரி, 10 மில்லிமீட்டர் உயரத்துக்குத் தண்ணி நின்னா, அது 1 சென்டிமீட்டர்.

மல்லிகை பூ சீக்கிரம் வாடிப் போகுதா? இந்த ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஒரு வாரம் ஆனாலும் அப்படியே இருக்கும்!

45
மழைப்பொழிவு தீவிரத்தின் வகைப்பாடு
Image Credit : ANI

மழைப்பொழிவு தீவிரத்தின் வகைப்பாடு

இந்திய வானிலை ஆய்வு மையம், 24 மணி நேரத்துல (காலை 8:30 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 8:30 மணி வரை) பெய்யுற மழையோட அளவை வெச்சு, அதோட தீவிரத்தைப் பிரிக்குது. இதை வெச்சுதான் லேசான மழை, கனமழைனு அறிவிக்கிறாங்க. 

  • மிக லேசான மழை: 2.4 மி.மீ-க்குக் குறைவா பெய்தா 
  • லேசான மழை: 2.5 மி.மீ முதல் 15.5 மி.மீ வரை 
  • மிதமான மழை: 15.6 மி.மீ முதல் 64.4 மி.மீ வரை 
  • கனமழை: 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ வரை (ரோட்ல தண்ணி தேங்குற அளவுக்கு மழை)
  • மிக கனமழை: 115.6 மி.மீ முதல் 204.4 மி.மீ வரை (ஓடைகள், வாய்க்கால்கள் நிரம்பி வழியும் அளவுக்கு மழை) 
  • தீவிர கனமழை: 204.5 மி.மீ அல்லது அதுக்கு அதிகமா பெய்தா (கடுமையான வெள்ளப்பெருக்குக்கு வழிவகுக்கும்) 
  • மேக வெடிப்பு (Cloudburst) என்றால் என்ன? நிறைய பேர் மேக வெடிப்புனா, ரொம்ப அதிகமா பெய்யுற மழைனு நினைக்கிறாங்க. ஆனா IMD படி, ஒரு சின்ன பகுதியில (சுமார் 20-30 சதுர கி.மீ), ஒரே ஒரு மணி நேரத்துல 100 மில்லிமீட்டர் (10 செ.மீ) அல்லது அதுக்கு மேல மழை பெய்தா, அதுக்கு பேருதான் 'மேக வெடிப்பு'. இது நிலச்சரிவு, திடீர் வெள்ளத்துக்கு (Flash Floods) காரணமாயிடும்.

Shower Tips: பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?

55
மழைப்பொழிவை அளவிடுவதால் என்ன பயன்கள்?
Image Credit : ANI

மழைப்பொழிவை அளவிடுவதால் என்ன பயன்கள்?

மழைப்பொழிவு டேட்டா வெறும் தினசரி வானிலை செய்திகளுக்கு மட்டும் இல்ல. பல துறைகள்ல இது முக்கிய பங்கு வகிக்குது. 

  • விவசாயம்: என்ன பயிர் செய்யலாம், எப்போ விதைக்கலாம், எப்படி நீர் மேலாண்மை செய்யலாம்னு முடிவு செய்ய விவசாயிகளுக்கு இந்த டேட்டா தேவை. 
  • பேரிடர் மேலாண்மை: கனமழை எச்சரிக்கைகள் மூலமா, தாழ்வான பகுதிகளில் இருக்குற மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாத்தி, உயிர், பொருள் சேதத்தைத் தடுக்கலாம். 
  • நகரத் திட்டமிடல் (Urban Planning): நகரங்கள்ல வடிகால் அமைப்புகள், பாலங்கள் கட்டுறதுக்கு பழைய மழைப்பொழிவு பதிவுகள்தான் ஆதாரம்.
  • நீர் மேலாண்மை: அணைகளுக்கு வர்ற நீர்வரத்தை (Inflow) கணிச்சு, எப்போ மதகுகளைத் திறக்கலாம், நீரை எப்படி சேமிக்கலாம்னு முடிவு செய்ய இந்த கணக்குகள் அவசியம். 

மழைப்பொழிவுங்குறது வானத்துல இருந்து வர்ற வெறும் நீர்த்துளிகள் மட்டும் இல்ல, அது நம்ம சுற்றுச்சூழல் சுழற்சிக்கும், நீர் ஆதாரத்துக்கும் உயிர்நாடி. மில்லிமீட்டர், சென்டிமீட்டர்ல மழையை அளக்குறது, வானிலை நிலவரத்தை அறிவியல் பூர்வமா புரிஞ்சுக்க உதவுது. IMD கொடுக்கிற இந்த வகைப்பாடுகளைப் புரிஞ்சுக்கிட்டா, ஒவ்வொருத்தரும் வானிலை மாற்றங்கள், இயற்கை சீற்றங்கள் பத்தி முன்னெச்சரிக்கையா இருக்கலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வாழ்க்கை முறை
மழை செய்திகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Euclid Telescope: விஞ்ஞானிகளே மிரண்டுட்டாங்க! 6 கோடி நட்சத்திரங்கள்! மில்கி வேயின் ரகசியத்தை உடைத்த புகைப்படம்!
Recommended image2
Snakes: பாம்புகளுக்கு பெத்த பாசம் கிடையாதா? முட்டையிட்ட உடன் குட்டிகளை பிரிவது ஏன்? அறிவியல் உண்மை!
Recommended image3
Simple Kitchen Hacks: இனி வெங்காயம் வெட்டும் போது கண்ணீர் வராது.! யாருமே சொல்லாத ரகசியம்.!
Related Stories
Recommended image1
Shower Tips: பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?
Recommended image2
Interesting Facts: ஆத்துல தண்ணி ஓடுனாலும் எப்படி பாலம் கட்டுறாங்க தெரியுமா? செம்ம இன்ஜினியரிங் ட்ரிக்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved