- Home
- Lifestyle
- Jasmine: மல்லிகை பூ சீக்கிரம் வாடிப் போகுதா? இந்த ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஒரு வாரம் ஆனாலும் அப்படியே இருக்கும்!
Jasmine: மல்லிகை பூ சீக்கிரம் வாடிப் போகுதா? இந்த ட்ரிக் மட்டும் பண்ணுங்க.! ஒரு வாரம் ஆனாலும் அப்படியே இருக்கும்!
Jasmine: மல்லிகைப் பூ வாடாமலும், நறுமணம் மாறாமலும் ஒரு வாரம் வரை புதிதாக வைத்திருக்க சில எளிய ட்ரிக்ஸ் மற்றும் பயனுள்ள வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

Jasmine
பூக்கள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. குறிப்பாக மல்லிகை பூவின் நறுமணம் அனைவரையும் புத்துணர்ச்சியாக வைத்திருக்க உதவும். ஆனால் பூக்களை சேமிப்பது என்பது பெண்களுக்கு சவாலான காரியமாக உள்ளது. சரியாக பராமரிக்காவிட்டால் வாங்கிய ஒரு நாளிலேயே பூக்கள் வாடி பழுப்பு நிறத்தில் மாறிவிடும். ஆனால் சில எளிய முறைகளை பின்பற்றினால் மல்லிகை பூவை வாடாமல் சுமார் ஒரு வாரம் வரை ஃப்ரஷ்ஷாக வைத்திருக்க முடியும். அது குறித்த சில டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் -30 வருடங்களுக்குப் பின் மேஷ ராசியில் சனி பெயர்ச்சி.! 4 ராசிகளுக்கு கொட்டி கொடுக்கப்போகும் சனி பகவான்.!
டிஷ்யூ பேப்பரை பரப்பி வைக்கவும்
பொதுவாக மல்லிகை பூவை பலரும் பிளாஸ்டிக் அல்லது எவர்சில்வர் டப்பாவில் போட்டு வைப்பது வழக்கம். ஆனால் நேரடியாக போடாமல் அதன் அடியில் ஒரு உலர்ந்த டிஷ்யூ பேப்பரை பரப்பி வைக்கவும். அதன் மேல் மல்லிகைப் பூக்களை வைத்து, பூக்களின் மேல் மற்றொரு டிஷ்யூ பேப்பரை வைத்து மூடி ஃபிரிட்ஜில் வைக்கவும். டிஷ்யூ பேப்பர் அதிகப்படியான ஈரப்பதத்தை உறிஞ்சி, பூக்கள் அழுகாமல் தடுத்து ஒரு வாரம் வரை ஃபிரஷ்ஷாக வைத்திருக்க உதவும்.
இதையும் படியுங்கள் - பச்சைத் தண்ணி குளியலா, வெந்நீர் குளியலா? எது பெஸ்ட்? சயின்ஸ் என்ன சொல்லுது?
அதிகப்படியான தண்ணீரை தெளிக்க கூடாது
மல்லிகை பூவை வாங்கியவுடன் அதன் மீது லேசாக தண்ணீர் தெளித்து (அதிகப்படியான தண்ணீரை தெளிக்க கூடாது, ஈரப்பதம் அதிகமாக இருந்தால் பூக்கள் விரைவில் அழுகி துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்) ஒரு மெல்லிய பருத்தி துணியை நீரில் நனைத்து பிழிந்து பூவை சுற்றி வைக்க வேண்டும். சுற்றிய பூவை ஒரு காற்று புகாத பிளாஸ்டிக் டப்பா அல்லது ஜிப்லாக் பையில் வைத்து ஃபிரிட்ஜில் வைத்து விட வேண்டும். பூவை பயன்படுத்தும் அரை மணி நேரத்திற்கு முன்னர் வெளியில் எடுத்து பயன்படுத்தினால் இப்போதுதான் செடியில் இருந்து பறித்தது போல பூ மிகவும் ஃபிரஷ்ஷாக இருக்கும்.
இதையும் படியுங்கள் - ஒரு வந்தே பாரத் ரயில் செய்ய எத்தனை கோடி செலவாகும் தெரியுமா? கேட்டா ஷாக் ஆகிடுவீங்க.!
வாடிய பூக்களை தனியாக எடுத்து விட வேண்டும்
டப்பாவில் வைப்பதற்கு முன்பாகவே ஏற்கனவே பழுப்பு நிறமாக மாறிய பூக்கள் அல்லது வாடிய பூக்களை தனியாக எடுத்து விட வேண்டும். இல்லையெனில் அவை மற்ற பூக்களையும் சீக்கிரம் பாழ்படுத்திவிடும். பூவை டப்பாவில் வைக்கும் பொழுது பூவின் மேல் அதிக அளவு நீர் இருக்கக்கூடாது. நீர் சொட்ட சொட்ட இருக்க கூடாது. லேசான ஈரப்பதம் மட்டுமே இருக்க வேண்டும். பூவை பிளாஸ்டிக் கவரில் நேரடியாக வைத்தால் காஸ் உருவாகி பூக்கள் சீக்கிரம் பறித்து விடும். எனவே காற்று புகாத டப்பாக்களையே பயன்படுத்த வேண்டும்.
இதையும் படியுங்கள் - குரு சந்திரன் கூட்டணியால் உபயசாரி யோகம் - 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமும் பண மழையும் கொட்டப்போகுது.!
செய்தித்தாள்களில் சுற்றி வைக்கக் கூடாது
பூக்களை செய்தித்தாள்களில் சுற்றி வைக்கக் கூடாது. செய்தித்தாளில் உள்ள மை பூக்களின் வெள்ளை நிறத்தில் ஒட்டக்கூடும். இதனால் பூக்கள் கருமை அல்லது மங்கலான நிறத்திற்கு மாறிவிடும். எனவே வெள்ளை டிஷ்யூ பேப்பர் அல்லது மை இல்லாத வெள்ளை காகிதம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பூக்களை வாங்கி வந்த உடனேயே ஃபிரிட்ஜில் வைக்க கூடாது. அதை காற்றோட்டமாக இடத்தில் வைத்து நன்கு உலர்ந்த பின்னரே பேப்பரில் சுற்ற வேண்டும். பேப்பரில் சுற்றிய பூக்களை ஒரு பிளாஸ்டிக் கண்டெய்னரில் வைக்க வேண்டும். இல்லை என்றால் பூக்களின் வாசம் ஃபிரிட்ஜில் உள்ள பிற உணவுகளின் மீதும் கலந்து விடும்.
இதையும் படியுங்கள் -ரயில் ‘சந்திப்பு’ vs ‘முனையம்’.! ரெண்டும் ஒன்னு கிடையாதா? இவ்வளவு வித்தியாசம் இருக்கா? 90% பேருக்கு தெரியாது.!
ஃபிரீசர் பகுதியில் வைக்கக் கூடாது
மல்லிகை பூவை ஃபிரீசர் பகுதியில் வைக்கக் கூடாது. இங்கு அதிக குளிர் இருப்பதால் அவை உறைந்து போகக்கூடும். வெளியே எடுத்தவுடன் உடனடியாக கருகிவிடும். ஃபிரீசரில் வைப்பதற்குப் பதிலாக நடுத்தர ஷெல்ப் அல்லது காய்கறி வைக்கும் இடத்தில் வைக்கலாம். முழுவதுமாக பூத்த மலர்களை விட பாதி அல்லது விரியாத மொட்டுக்களை வாங்கினால் அவை மெதுவாக மலர்ந்து நீண்ட நாட்கள் பசுமையாக இருக்கும். வீட்டில் விசேஷங்கள், விழாக்கள் போன்ற சமயங்களில் முன்கூட்டியே வாங்கி வைக்கும் சூழலில் இந்த முறை மிகவும் உதவியாக இருக்கும்.
இதையும் படியுங்கள் -Tiffin vs Breakfast: டிபன், பிரேக்ஃபாஸ்ட் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? பலருக்கும் தெரியாத தகவல்.!
பூக்களை அடிக்கடி ஃபிரிட்ஜில் இருந்து வெளியே எடுக்கக் கூடாது
பூக்களின் பச்சை காம்புகளை சிறிதளவு நறுக்கி விட்டால் அதில் தேங்கும் ஈரப்பதம் குறைந்து பூக்கள் பழுப்பு நிறமாக மாறும் வேகம் குறையும். ஆனால் பூவை சேதப்படுத்தும் அளவிற்கு அதிகப்படியாக வெட்டக்கூடாது. குறைந்த அளவு மட்டுமே வெட்டி வைக்க வேண்டும். பூக்களை அடிக்கடி ஃபிரிட்ஜில் இருந்து வெளியே எடுத்து மீண்டும் உள்ளே வைப்பதை தவிர்க்க வேண்டும். வெப்பநிலை அடிக்கடி மாறும் பொழுது பூக்களின் ஆயுள் குறைந்துவிடும். தேவையான அளவு வெளியே எடுத்து விட்டு மீதமுள்ளவற்றை மீண்டும் ஃபிரிட்ஜில் வைத்து விட வேண்டும்.
பழங்கள், வெங்காயம், பூண்டு போன்ற அதிக வாசனை கொண்ட பொருட்களுடன் சேர்த்து வைக்கக்கூடாது. அவற்றின் வாசனையை பூக்கள் உறிஞ்சக்கூடும். தனி டப்பாவில் வைப்பது மல்லிகைப்பூவின் இயற்கையான நறுமணம் நீண்ட நேரம் மாறாமல் இருப்பதற்கு உதவும்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

