MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • cleaning pooja items : பூஜை விளக்குகள் பளபளக்கணுமா? வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்!

cleaning pooja items : பூஜை விளக்குகள் பளபளக்கணுமா? வீட்டில் இருக்கும் இந்த பொருட்களே போதும்!

cleaning pooja items: பொலிவிழந்த பூஜை விளக்குகளை வீட்டில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தியே பளபளப்பாக்குவது எப்படி? சுத்தம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன ? என்பதை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Aug 30 2026, 04:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பூஜை பொருள்கள் சுத்தம் செய்வது எப்படி?
Image Credit : pinterest

பூஜை பொருள்கள் சுத்தம் செய்வது எப்படி?

வீட்டில் பூஜை அறையில் பயன்படுத்தப்படும் விளக்கு, குத்துவிளக்கு போன்ற சாமி பாத்திரங்கள் நாளடைவில் எண்ணெய் பிசுக்கு, கருமை, தூசி மற்றும் அழுக்கு படிந்து பொலிவை இழப்பது வழக்கம்தான். அவற்றை சுத்தம் செய்ய கடைகளில் விற்கப்படும் விலையுயர்ந்த கிளீனர்களை வாங்க வேண்டிய அவசியமில்லை. நம்முடைய சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்களைக் கொண்டே, விளக்குகளில் படிந்திருக்கும் அழுக்கையும், கருமையையும் எளிதாக அகற்றி, விளக்குகளை புதிதுபோல் பளபளப்பாக மாற்றலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
எளிய முறையில் சுத்தம் செய்ய சில வழிகள்
Image Credit : pinterest

எளிய முறையில் சுத்தம் செய்ய சில வழிகள்

  1. ஊறவைத்த புளியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து, அதை விளக்கின் மீது நன்றாகத் தேய்த்து சுத்தம் செய்தால், விளக்கில் படிந்துள்ள எண்ணெய் பிசுக்கு மற்றும் கருமை நீங்கி மீண்டும் பொலிவுடன் மாறும்.
  2. எலுமிச்சைப் பழத்தில் உப்பு சேர்த்து கருமை படிந்த இடங்களில் நன்றாகத் தேய்த்தால் அனைத்து கரைகளும் நீங்கி விளக்குகள் புதியது போன்று பளபளக்கும்.
  3. சிறிதளவு வெள்ளை வினிகரில் உப்பு சேர்த்து பேஸ்ட் போலக் கலந்து, விளக்கின் மீது தேய்த்தால் அழுக்கு கரைகள் நீங்கி பளிச்சென்று மாறும்.
35
பூஜை விளக்குகள் பளபளக்கணுமா?
Image Credit : magnific

பூஜை விளக்குகள் பளபளக்கணுமா?

4. பேக்கிங் சோடாவுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போலக் கலந்து விளக்கின் மீது தடவினால், சிறிது நேரத்தில் விளக்கில் உள்ள கருமை நீங்கி புதியது போன்று இருக்கும்.

5. கோதுமை மாவுடன் சிறிதளவு உப்பு மற்றும் வினிகர் சேர்த்து பேஸ்ட் போலக் கலந்து, நன்றாகத் தேய்த்தால் அதில் படிந்துள்ள அழுக்கு மற்றும் கறைகள் நீங்கி பாத்திரங்கள் பளபளவென்று மாறும்.

6. அதேபோல், அரிசி மாவுடன் சிறிதளவு வினிகர் கலந்து தேய்த்து சிறிது நேரம் ஊறவிட்டால், பிசுக்குகள் நீங்கி பாத்திரம் புதுசு போல மின்னும்.

7. ஆலிவ் ஆயிலுடன் சிறிதளவு வினிகர் சேர்த்து, பூஜை பாத்திரங்களின் மீது நன்றாகத் தடவி சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் மெதுவாகத் தேய்த்து தண்ணீரில் கழுவினால், படிந்துள்ள அழுக்கு மற்றும் கறைகள் நீங்கி பாத்திரங்கள் நல்ல பொலிவுடன் மாறும். இதனால், வார வாரம் கை வலிக்க சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

45
சுத்தம் செய்யும் முன் இதை கவனியுங்கள்
Image Credit : magnific

சுத்தம் செய்யும் முன் இதை கவனியுங்கள்

பூஜை பாத்திரங்களை சுத்தம் செய்யும்போது, கடினமான ஸ்க்ரப்பர்களைப் பயன்படுத்தி அழுத்தமாகத் தேய்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. அவ்வாறு செய்வதால் விளக்குகள் மற்றும் பாத்திரங்களின் மேற்பரப்பில் கீறல்கள் ஏற்பட்டு, அவற்றின் பொலிவு குறைய வாய்ப்புள்ளது. இதற்கு பதிலாக மென்மையான ஸ்பாஞ்ச் அல்லது துணியைப் பயன்படுத்தி மெதுவாக தேய்த்து சுத்தம் செய்வது சிறந்தது

விளக்கை சுத்தம் செய்வதற்கு முன்பு, அதில் படிந்திருக்கும் எண்ணெய் பிசுக்கை முதலில் அகற்றுவது அவசியம். இதற்கு வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிதளவு பாத்திரம் கழுவும் சோப்பை சேர்த்து தேய்த்தால் எண்ணெய் பிசுக்கு நீங்கி, சுத்தம் செய்ய ஈசியாக இருக்கும்.

55
நீண்ட நாட்கள் பொலிவுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?
Image Credit : magnific

நீண்ட நாட்கள் பொலிவுடன் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பாத்திரங்களை சுத்தம் செய்து தண்ணீரில் கழுவிய பிறகு, ஈரம் இல்லாமல் சுத்தமான உலர்ந்த துணியால் நன்றாகத் துடைக்க வேண்டும். தண்ணீர் ஈரப்பதம் அப்படியே இருந்தால் நீர்த்தழும்புகள் ஏற்படுவதுடன், சில உலோகப் பாத்திரங்களில் விரைவாக கருமை படியவும் வாய்ப்புள்ளது. எனவே, கழுவியவுடன் நன்றாக உலர்த்தி வைப்பது பாத்திரங்களின் பொலிவை நீண்ட நாட்களுக்கு பாதுகாக்க உதவும்.

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வாழ்க்கை முறை
சுத்தம் குறிப்புகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
குக்கரில் பருப்பு அடிக்கடி அடிபிடிக்குதா? தண்ணீர் ஊற்றியும் சரியாகலையா? இந்த 7 தவறுகள்தான் காரணம்!
Recommended image2
வீட்டுப் பனீர்தான் பாதுகாப்பானதா? பலரும் செய்யும் இந்தத் தவறு ஆபத்தை ஏற்படுத்தலாம்!
Recommended image3
100 கிராம் பனீர் vs சிக்கன்..! புரோட்டீன், கலோரி கணக்கில் யார் கிங்? எடை குறைக்க எது உதவும்?
Related Stories
Recommended image1
Pooja Flowers: சாமிக்கு போட்ட பூஜை பூவை தூக்கி எறியலாமா? தோஷம் வரக்கூடாதுனா இத தெரிஞ்சுக்கோங்க!
Recommended image2
Puja Mistakes: பூஜை விளக்கில் ஊதுபத்தி ஏற்றுகிறீர்களா? இந்த ஒரு தவறால் வீட்டில் தரித்திரம் வரும்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved