MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மது பிரியர்களின் தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்! புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்

மது பிரியர்களின் தலையில் இடியை இறக்கிய தேர்தல் ஆணையம்! புலம்பும் டாஸ்மாக் ஊழியர்கள்

TASMAC: தமிழகத்தில் 4800க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளும் தங்களது தினசரி விற்பனை மற்றும் இருப்பு குறித்த முழுமையான அறிக்கையை தினமும் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Mar 23 2026, 12:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழக சட்டமன்ற தேர்தல்
Image Credit : Asianet News

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. எப்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதோ அந்த நிமிடம் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமான வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அரசியல் கட்சி தலைவர்களை விட எந்த அவசர தேவைக்கும் பணம் கொண்டு போக முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

25
தேர்தல் ஆணையம்
Image Credit : our own

தேர்தல் ஆணையம்

இந்நிலையில் வாக்காளர்களுக்கு மது விநியோகிப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் முக்கியமான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள 4,800க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளும் தங்களது தினசரி விற்பனை மற்றும் இருப்பு குறித்த முழுமையான அறிக்கையை தினமும் தேர்தல் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகளின் தினசரி விற்பனை மற்றும் இருப்பு உள்ளிட்ட விபரங்களை தேர்தல் ஆணையம் எளிதாக கண்காணிக்க முடியும்.

Related Articles

Related image1
தமிழகத்தின் டாப் 5 ஸ்டார் தொகுதிகள்.. மகுடம் சூடப்போவது யார்? முழு அலசல்!
Related image2
வளைகுடா நாடுகளில் ரவுண்ட் கட்டி அடிக்கும் ஈரான்.! சவுதி, துபாய் நாடுகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
35
 டாஸ்மாக் கடைகள்
Image Credit : our own

டாஸ்மாக் கடைகள்

ஏதேனும் ஒரு டாஸ்மாக்கில் திடீரென 30 சதவீதத்திற்கு அதிகமாக விற்பனை அதிகரித்தால் அந்த கடையில் தீவிரமான சோதனைகள் நடத்தப்படும் என்று எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் மொத்தமாக மதுவை வாங்கி பதுக்குவதை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் 50 சதவீதத்திற்கு அதிகமாக மதுபானங்களை இருப்பில் வைக்க கூடாது தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

45
பதுக்கி வைத்தால் நடவடிக்கை
Image Credit : our own

பதுக்கி வைத்தால் நடவடிக்கை

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரங்களின் போதும், வாக்குப்பதிவுக்கு முந்தைய நாட்களிலும் அரசியல் கட்சிகளின் சார்பில் தொண்டர்களுக்கும் வாக்காளர்களுக்கும் மதுபானம் விநியோகிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். சட்டப்படி இது குற்றம் என்றாலும், மறைமுகமாக இது போன்ற நடவடிக்கைகள் நீண்ட ஆண்டுகளாக இருந்து வருகின்றன. இந்த முறையை ஒழிப்பதற்காக தேர்தல் ஆணையம் தீவிரமான கண்காணிப்பில் இறங்கியுள்ளது.

55
டிஜிட்டல் பில்லிங் முறை
Image Credit : our own

டிஜிட்டல் பில்லிங் முறை

டிஜிட்டல் பில்லிங் முறை அனைத்து கடைகளிலும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு கடைகளிலும் தினசரி எவ்வளவு மதுபானங்கள் விற்கப்படுகின்றன, இருப்புகள் எவ்வளவு உள்ளன என்பதை உடனடியாக அதிகாரிகளால் கண்காணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2026
தேர்தல்
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
விடியா ஆட்சியா..? விபரீத ஆட்சியா..? திமுகவின் முகத்திரையைக் கிழித்தெறிந்த எடப்பாடி பழனிசாமி..!
Recommended image2
Now Playing
டி.வி.கே ஒழிக புஸ்ஸி ஆனந்த் ஒழிக என கோஷமிட்ட தவெக வினரால் பரபரப்பு...! பரபரப்பு காட்சிகள்
Recommended image3
தமிழகத்தின் டாப் 5 ஸ்டார் தொகுதிகள்.. மகுடம் சூடப்போவது யார்? முழு அலசல்!
Related Stories
Recommended image1
தமிழகத்தின் டாப் 5 ஸ்டார் தொகுதிகள்.. மகுடம் சூடப்போவது யார்? முழு அலசல்!
Recommended image2
வளைகுடா நாடுகளில் ரவுண்ட் கட்டி அடிக்கும் ஈரான்.! சவுதி, துபாய் நாடுகளுக்கு தமிழ்நாடு வெதர்மேன் எச்சரிக்கை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved