பூவையாரை தொடர்ந்து சொந்தமாக கார் வாங்கிய மற்றுமொரு விஜய் டிவி பிரபலம்... காரின் விலை இத்தனை லட்சமா?
விஜய் டிவி சீரியல் நடிகை ரவீனா தாஹா சொந்தமாக கார் ஒன்றை வாங்கி உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
விஜய் டிவி மூலம் பிரபலமாகும் நடிகர், நடிகைகளும், தொகுப்பாளினிகளும் அடுத்தடுத்து கார் வாங்கி வருகின்றனர். முன்னதாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான மணிமேகலை பி.எம்.டபிள்யூ கார் வாங்கினார். இதையடுத்து விஜய் டிவியில் காமெடியனாக வலம் வந்து தற்போது சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் புகழும் சொந்தமாக பி.எம்.டபிள்யூ கார் வாங்கினார்.
சமீபத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பேமஸ் ஆகி தற்போது சினிமாவில் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் பூவையார் கார் வாங்கி உள்ளதாக இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அவருக்கு ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு விஜய் டிவி பிரபலம் சொகுசு கார் ஒன்றை வாங்கி உள்ளார்.
இதையும் படியுங்கள்... தனலட்சுமி சொன்ன ‘அந்த’ ஒரு வார்த்தை... கலங்கி அழுத ஜிபி முத்து - தலைவரே கலங்காதீங்கனு ஆறுதல் கூறும் ஆர்மியினர்
அவர் மெளன ராகம் சீரியல் நடிகை ரவீனா தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மெளன ராகம் சீரியலில் சக்தி எனும் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆன ரவீனா, தற்போது MG ஹெக்டர் காரை வாங்கி உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அவர் வாங்கியுள்ள காரின் விலை ரூ.15 லட்சத்துக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. ரவீனா சீரியலில் நடிப்பது மட்டுமின்றி நடனத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் நடனமாடி இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ரீல்ஸ் வீடியோக்களுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ்களும் குவியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... ஸ்கூல் படிக்கும்போதே சொந்தமாக கார் வாங்கி கலக்கும் ‘சூப்பர் சிங்கர்’ பூவையார் - குவியும் வாழ்த்துக்கள்