நெருக்கமாக பழகி வந்த ஆசிரியர்.. தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவன்.. செல்போனில் சிக்கிய புகைப்படம்..

சென்னையில் தன்னுடன் நெருங்கமாக பழகி வந்த ஆசிரியர், தன்னுடன் பேசுவதை நிறுத்திக்கொண்டதால் மனமுடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த வழக்கில் தற்கொலைக்கு தூண்டுதல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவில் வழக்கு பதிவு செய்து ஆசிரியரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
 

Student hanged herself - teacher arrest under POCSO act

சென்னையை சேர்ந்த அந்த இளைஞர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி வீட்டில் தனது அறையில் துக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுக்குறித்து அவரது தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அம்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

தற்கொலை செய்துக்கொண்ட மாணவன், இந்தாண்டு 12 ஆம் வகுப்பு முடித்து, கலை கல்லூரியில் மேற்படிப்பு போட்டுள்ளார். இந்நிலையில் இவரது செல்போனில் ஆய்வு செய்த போலீசார், அவரது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஒருவரிடம் நெருங்கி பழகி வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க:ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்பட்ட 5 மாவட்ட நிர்வாகிகள்..! அதிரடியாக அதிமுகவில் இருந்து நீக்கிய இபிஎஸ்

அதுமட்டுமின்றி ஆசிரியரும் மாணவனிடம் தொடர்ந்து பேசி வந்துள்ளார். இருவரும் சேர்ந்த எடுத்த புகைப்படங்களும் செல்போனில் இருந்துள்ளது. இதனையடுத்து இதுக்குறித்து பள்ளியில் சக மாணவர்கள் மற்றும் நண்பர்களிடம் காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.

அதில் ஆசிரியர் ஷர்மிளா அதே பள்ளி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார். மேலும் வீட்டில் டியூஷன் நடத்தி வருவதால், அதில் இந்த மாணவருக்கும் ஆசிரியருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறி, பாலியல் ரீதியாக இருவரும் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க:பேய்க்கு வாழ்க்கைப்பட்டால்,முருங்கை மரத்தில்தான் குடித்தனம்!திமுகவிற்கு வாக்களித்து திணறும் மக்கள்-ஜெயக்குமார்

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆசிரியர் சர்மிளாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன் பிறகு அவர் மாணவனிடம் பேசுவதை நிறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் பலமுறை ஆசிரியரிடம் பேச முயன்ற போது அவர் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது.

இதனால் மன அழுத்தத்தில் இருந்த மாணவன், வீட்டில் தனியாக இருந்த போது தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதனையடுத்து ஆசிரியர் ஷர்மிளாவை போக்சோ சட்டத்தில் அம்பத்தூர் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர் மீது சிறுவனை தற்கொலைக்கு தூண்டுதல், பாலியல் ரீதியாக துன்புறுத்துவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios