06:55 PM (IST) Mar 31

ஆட்டம் பாட்டத்துடன் தொடங்கிய ஐபிஎல் 2023

ஐபிஎல் 16வது சீசன் இன்று அகமதாபாத்தில் கோலாகலமாக தொடங்கியது. அரிஜித் சிங்கின் பாடல், தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடனம் என ஆட்டம்பாட்டத்துடன் ஐபிஎல் தொடங்கியது. அகமதாபாத்தில் நடக்கும் முதல் போட்டியில் 4 முறை சாம்பியன் சிஎஸ்கேவும், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸும் மோதுகின்றன.

05:06 PM (IST) Mar 31

சிம்புவின் கெரியரில் இதுதான் பெஸ்ட்... பத்து தல படத்தின் முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

பத்து தல படத்தின் முதல் நாள் வசூலை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.12.3 கோடி வசூலித்து உள்ளதாக குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். வார நாள் அதுமட்டுமின்றி அதிகாலை காட்சிகள் இன்றி இப்படம் இந்த அளவு வசூல் செய்துள்ளதாகவும், நடிகர் சிம்புவின் கெரியரிலேயே முதல் நாளில் அதிக கலெக்‌ஷன் கிடைத்தது இந்த படத்துக்கு தான் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க

04:29 PM (IST) Mar 31

ஹீரோவாக அவதாரம் எடுத்த மணிகண்டன் ராஜேஷ்! பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சி என்ட்ரிக்கு பின்னர், தொடர்ந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகளை தேடி வந்த மணிகண்டன் ராஜேஷின் முதல் ஹீரோ சப்ஜெட் வெப் சீரிஸ் குறித்த தகவல் தற்போது அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

03:39 PM (IST) Mar 31

ஜெய் உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பா? முதன்முறையாக உண்மையை போட்டுடைத்த நடிகை வாணி போஜன்

நடிகர் ஜெய்யும், நடிகை வாணி போஜனும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல்களுக்கு அவரே முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார். மேலும் படிக்க

03:33 PM (IST) Mar 31

காந்தாரா புகழ் பூத கோலா.. நடனம் ஆடிக்கொண்டே இறந்த நடனக்கலைஞர்.!!

கர்நாடகாவின் புகழ்பெற்ற பாரம்பரிய கலை பூத கோலா, அம்மாநில கடற்கரையோர பகுதிகளில் அமைந்துள்ள கிராமத்தில் பூத ஆராதனா செய்வார்கள்.

மேலும் படிக்க

02:31 PM (IST) Mar 31

ஷாக்கிங் நியூஸ்.. கொசுவர்த்தி புகையால் துடிதுடித்து உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர்..!

டெல்லியில் கொசுவர்த்தி புகையை சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க

02:08 PM (IST) Mar 31

திருமணம் ஆகி 3 மாசம் தான் ஆச்சு.. அதுக்குள்ள இப்படியா.? தலையில் அடித்து கதறும் பெற்றோர்கள்

காதல் திருமணம் செய்த ஜோடி 3 மாதத்தில் நடந்த விபரீத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

02:03 PM (IST) Mar 31

அயோத்தி முதல் பஹிரா வரை... இந்த வாரம் மட்டும் இத்தனை தமிழ் படங்கள் ஓடிடியில் ரிலீஸா..! முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் வார வாரம் ஓடிடியிலும் படங்கள் வெளியாகி வரும் நிலையில், இந்த வாரம் மார்ச் 31-ந் தேதி 4 தமிழ் படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி உள்ளன. மேலும் படிக்க

12:52 PM (IST) Mar 31

Swiggyல் 6 லட்சத்துக்கு இட்லி வாங்கிய நபர்.. சென்னையில் இட்லிக்கு பேமஸ் ஆன ஹோட்டல் எது தெரியுமா.?

வாடிக்கையாளர் ஒருவர் ஸ்விக்கி நிறுவனத்தில் கடந்த ஆண்டு 6 லட்சம் மதிப்புள்ள இட்லிகளை ஆர்டர் செய்த சம்பவம் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

12:41 PM (IST) Mar 31

அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கூட நடக்காத அட்டூழியம் இது.. ஆளுங்கட்சியை அலறவிடும் பாஜக..!

தெய்வத்தை வழிபட திராவிட மாடல் அரசு அனுமதி வழங்க வேண்டிய அவசியமில்லை என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஶ்ரீநிவாசன் கூறியுள்ளார். 

மேலும் படிக்க

12:40 PM (IST) Mar 31

என்னை நீக்கியது தவறு என்றால் அதன்பின் நடந்தது மட்டும் எப்படி சரியாகும்? பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்! காரசார வாதம்

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்ற தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு வழக்கின் போது நேரடியாக இறுதி விசாரணைக்கு தயார் என ஓ.பி.எஸ் - இ.பி.எஸ். என இரு தரப்பும் பதிலளித்துள்ளனர். இதனையடுத்து, இரு தரப்பும் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய கூறி வழக்கு விசாரணை ஏப்ரல் 3ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

12:17 PM (IST) Mar 31

60 பவுன் கிடையாது.. மொத்தம் 200 பவுன் காணோம்..! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழக்கில் புது ட்விஸ்ட்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் இருந்த 60 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க

11:56 AM (IST) Mar 31

ஆங்கிலேயரின் நிழலில் இருந்து வெளியே வாங்க.. ட்விட்டரில் காங்கிரஸ் Vs பாஜக மோதல் - பின்னணி என்ன?

ஒவ்வொரு சர்வாதிகாரியும் தனது காலத்திற்குப் பின்னர் ஒரு தொழில்நுட்பக் கலையை விட்டுச் செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். புதிய நாடாளுமன்ற கட்டிடம் முழுக்க முழுக்க பண விரயம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.

மேலும் படிக்க

10:45 AM (IST) Mar 31

ட்ரம்ப்புக்கு எதிராக புகார் கொடுத்த Porn Star ஸ்டோமி டேனியல்ஸ்.. விரைவில் கைதா.?

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

10:07 AM (IST) Mar 31

Gold Rate Today : வரலாற்றில் காணாத விலையை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. இது நகை வாங்குவோரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க

08:41 AM (IST) Mar 31

World Bank Chief : உலக வங்கியின் தலைவராகும் இந்தியர்.. யார் இந்த அஜய் பங்கா.?

உலக வங்கியின் தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜய் பங்கா தேர்வாக உள்ளார்.

மேலும் படிக்க

08:31 AM (IST) Mar 31

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! பேராசிரியர்கள் மீது நடவடிக்கை.? நள்ளிரவிலும் கலாஷேத்ராவில் தொடர்ந்த போராட்டம்

சென்னை கலாஷேத்ரா வளாகத்தில் மாணவ, மாணவிகள் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மீண்டும் காலையில் போராட்டத்தை தொடங்க உள்ளதாக மாணவிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க..

08:05 AM (IST) Mar 31

கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறதா பாஜக.? காங்கிரஸ் கதி.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?

விரைவில் நடைபெற உள்ள கர்நாடக தேர்தல்லில் பாஜக 110-120 இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

மேலும் படிக்க

07:54 AM (IST) Mar 31

ஜிம்மில் அதிக ஒர்க் அவுட் வேண்டாம்! டாக்டர் பரிந்துரையில்லாமல் ஸ்டீராய்டு மருத்துகளை எடுக்காதீங்க! மா.சு.!

உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஊட்டசத்து மருந்து, ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ள கூடாது. அளவுக்கு அதிகமாக பயிற்சி செய்வதும் விபரீதமான முடிவுகளை ஏற்படுத்தும். எனவே, மருந்து, மாத்திரையோ, உடற்பயிற்சியோ எதுவாக இருந்தாலும் மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க

07:44 AM (IST) Mar 31

ஆட்சி அதிகார திமிரில் திமுகவினர் வன்முறை..! கை கட்டி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு- சீறும் சீமான்

கோவையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய திமுகவினரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைபெபாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க..