அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கூட நடக்காத அட்டூழியம் இது.. ஆளுங்கட்சியை அலறவிடும் பாஜக..!
புதிய வேலை வாய்ப்புகளை ஆயிரக்கணக்கில் உருவாக்கும். பொருளாதாரம் உயரும், மக்கள் கைகளில் பணம் புரளும் இத்தகைய மகத்தான திட்டத்தை அறிவித்த பிரதமருக்கு நன்றி சொல்லி சாத்தூரில் இருந்து இருக்கன்குடி அம்மன் கோவில் வரை எனது தலைமையில் அம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை நடைபெற உள்ளது.
தெய்வத்தை வழிபட திராவிட மாடல் அரசு அனுமதி வழங்க வேண்டிய அவசியமில்லை என பாஜக மாநில பொதுச்செயலாளர் ராம ஶ்ரீநிவாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் இராம ஶ்ரீநிவாசன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- விருதுநகர் மாவட்டத்திற்கு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மிகப்பெரிய ஜவுளி பூங்கா 2000 கோடி முதலீட்டில் அறிவித்திருக்கிறார். லட்சக்கணக்கான விருதுநகர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை இந்த ஜவுளி பூங்கா உயர்த்தும்.
புதிய வேலை வாய்ப்புகளை ஆயிரக்கணக்கில் உருவாக்கும். பொருளாதாரம் உயரும், மக்கள் கைகளில் பணம் புரளும் இத்தகைய மகத்தான திட்டத்தை அறிவித்த பிரதமருக்கு நன்றி சொல்லி சாத்தூரில் இருந்து இருக்கன்குடி அம்மன் கோவில் வரை எனது தலைமையில் அம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை நடைபெற உள்ளது. இன்று நடக்க இருக்கும் இந்த பாதயாத்திரைக்கு திமுக அரசு தடை விதித்திருக்கிறது. ஆலயம் சென்று வழிபடுவதற்கு அனுமதி மறுத்த ஒரே அரசு திமுக அரசு மட்டுமே. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் கூட நடக்காத அட்டூழியம் இது. "அம்மனை நீ சென்று வழிபட அனுமதி மறுக்கிறேன்" என்று காவல்துறை கடிதம் மூலம் தெரிவித்த ஒரே அரசாங்கம் திமுக அரசாங்கம்.
இதை நாம் ஏற்றுக் கொண்டால் ஒரு தமிழனாக, ஒரு இந்துவாக வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வாழ்வதில் அர்த்தமே இல்லை. என் மாரியம்மனை நான் சென்று வழிபட தடை விதிக்கிற அரசின் ஆணையை நாங்கள் மதிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதனால் எனது தலைமையில் திட்டமிட்டபடி அம்மனுக்கான நேர்த்திக் கடன் நிறைவேற்றும் பாத யாத்திரை நடந்தே தீரும்.
புனிதமான மாலைகள் அணிந்தும், விரதம் இருந்தும், அக்னி சட்டி எடுத்தும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள். பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை வைத்து அவருக்கு நன்றி கூறி பாதயாத்திரை நடத்துவார்கள். இந்த காவல்துறையால் ஒன்றே ஒன்று மட்டும் தான் செய்ய முடியும். அதிகபட்சமாக கைது செய்து அடைக்க முடியும் அதற்கும் நாங்கள் தயார். வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு அதை வேடிக்கை பார்ப்பதற்கு அல்ல இந்த இயக்கம், எங்கள் அன்னை கருமாரியை வழிபட காவல்துறையின் அனுமதி தேவை இல்லை. தெய்வத்தை வழிபட திராவிட மாடல் அரசு அனுமதி வழங்க வேண்டிய அவசியமில்லை என இராம ஶ்ரீநிவாசன் காட்டமாக கூறியுள்ளார்.