டெல்லியில் கொசுவர்த்தி புகையை சுவாசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள சாஸ்திரி பார்க் பகுதியில் குடும்பம் வசித்து வந்தது. மச்சி மார்க்கெட் அருகே மசார் வாலா சாலையில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக சாஸ்திரி பார்க் காவல் நிலையத்துக்கு அழைப்பு வந்தது.
இதனையடுத்து, மூன்று தீயணைப்பு வாகனங்கள் வீட்டிற்கு விரைந்தன.வடகிழக்கு மாவட்ட டிசிபி ஜாய் டிர்கி கூறுகையில்,ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதாக சாஸ்திரி பார்க் காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை அழைப்பு வந்தது. சம்பவ இடத்திற்கு உடனே விரைந்தனர் போலீசார்.

அங்கு காயமடைந்தவர்கள் ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீஸ் வட்டாரம் தெரிவித்ததாவது, “ பாதிக்கப்பட்டவர்கள் கொசுவை விரட்டுவதற்காக கொளுத்தி வைத்திருந்த கொசுவர்த்திச் சுருள் மெத்தையில் விழுந்து தீ பிடித்துள்ளது. அதனால் உண்டான கார்பன் மோனாக்ஸைடு நச்சுப்புகையினை இரவு முழுவதும் சுவாசித்ததால் அதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இருவர் தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர், ஒருவர் முதலுதவிக்குப் பிறகு வெளியேற்றப்பட்டார் என்றும், உயிரிழந்தவர்களில் நான்கு ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு சிறு குழந்தை அடங்குகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..60 பவுன் கிடையாது.. மொத்தம் 200 பவுன் காணோம்..! ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வழக்கில் புது ட்விஸ்ட்
இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ
