ஆங்கிலேயரின் நிழலில் இருந்து வெளியே வாங்க.. ட்விட்டரில் காங்கிரஸ் Vs பாஜக மோதல் - பின்னணி என்ன?
ஒவ்வொரு சர்வாதிகாரியும் தனது காலத்திற்குப் பின்னர் ஒரு தொழில்நுட்பக் கலையை விட்டுச் செல்ல வேண்டும் என்று விரும்புவார்கள். புதிய நாடாளுமன்ற கட்டிடம் முழுக்க முழுக்க பண விரயம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
டெல்லியில் புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகளை நேற்று பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்தார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பார்வையிட்டார். என்னென்ன வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது, இன்னும் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.
இதற்கு தனது டுவிட்டரில் பதில் அளித்து இருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், ''தற்பெருமைக்கான முதல் திட்டம் இது. ஒவ்வொரு சர்வாதிகாரியும் ஒரு கட்டிடக் கலையை விட்டுச் செல்ல வேண்டும் நினைப்பார்கள். இது முழுக்க முழுக்க பண விரயம்'' என்று குறிப்பிட்டு இருந்தார். இதற்கு பாஜக எம்பிக்கள், தலைவர்கள் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்
''எங்களுக்கு புதிய பாராளுமன்ற கட்டிடம் தேவை. தற்போதைய கட்டிடம் செயல்படாதது மற்றும் காலாவதியானது என்று மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சராக ஜெயராம் ரமேஷ் இருந்தபோது கூறியதாக பலரும் மேற்கோள்காட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.
மக்களவை கமிட்டியின் காங்கிரஸ் மூத்த தலைவர் மீரா குமாரி தலைமையில் நடைபெற்றபோது புதிய நாடாளுமன்ற கட்டிடம் வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. முன்பு காங்கிரஸ் கட்சியினருக்கு ஓபிசியுடன் பிரச்சனை இருந்தது. தற்போது, தங்களுடைய தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தலைவருக்கு மரியாதை அளிக்கக் கூடாது என்று முடிவு செய்துவிட்டார்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
பாஜக தேசிய செயலாளர் சிடி ரவி தனது டுவிட்டரில், "போலி காந்திகளின்" அடிமைகளின் கூற்றுப்படி, உலகின் மிகவும் பிரபலமான தலைவர் ஒரு சர்வாதிகாரி. இந்த அடிமைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சர்வாதிகாரிகளை வணங்கப் பழகிவிட்டனர். கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றிய "கர்மயோகி"யை அவர்கள் மதிப்பார்கள் என்று பாஜகவினர் எதிர்பார்க்க முடியாது'' என்று பதிவிட்டுள்ளார்.
ஆந்திரப்பிரதேச பாஜக பொதுச்செயலாளர் விஷ்ணு வர்தன் ரெட்டி தனது டுவிட்டரில், ''ஆங்கிலேயரின் நிழலில் இருந்து வெளியே வர விரும்பாத வழக்கமான அடிமை மனநிலை. ஷாஜகான்-தாஜ்மஹாலைப் பற்றி நீங்கள் அப்படித்தான் நினைக்கிறீர்களா? அதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள உங்களுக்கு தைரியம் உண்டா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க..கர்நாடகாவில் ஆட்சியை தக்க வைக்கிறதா பாஜக.? காங்கிரஸ் கதி.. கருத்துக்கணிப்பு முடிவுகள் சொல்வது என்ன?