MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சிம்புவின் கெரியரில் இதுதான் பெஸ்ட்... பத்து தல படத்தின் முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

சிம்புவின் கெரியரில் இதுதான் பெஸ்ட்... பத்து தல படத்தின் முதல் நாள் வசூலை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல படம் நேற்று ரிலீஸ் ஆன நிலையில், அதன் முதல் நாள் வசூலை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Mar 31 2023, 05:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

கன்னடத்தில் ஷிவ ராஜ்குமார் நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் முஃப்டி. இப்படத்தை முதலில் அப்படியே தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டு அதில் சிம்பு, ஷிவ ராஜ்குமார் கேரக்டரில் நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க உள்ளதாகவும் கடந்த 2019-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. முஃப்டி படத்தை இயக்கிய நாரதன் தான் அதன் தமிழ் ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தமானார்.

24

இப்படத்தின் ஒரு ஷெட்யூல் மட்டும் முடிவடைந்த நிலையில், தயாரிப்பாளருக்கும், சிம்புவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அப்படத்தை அப்படியே கிடப்பில் போட்டனர். இதையடுத்து கொரோனா பரவல் வந்து அந்த காலகட்டத்தில் சிம்பு உடல் எடையை குறித்து மாநாடு என்கிற பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த பின்னர் முஃப்டி ரீமேக் பக்கம் மீண்டும் தன் கவனத்தை செலுத்த தொடங்கினார் சிம்பு.

இதையும் படியுங்கள்... Vani Bhojan : ஜெய் உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பா? முதன்முறையாக உண்மையை போட்டுடைத்த நடிகை வாணி போஜன்

34

சில காரணங்களால் நாரதன் இப்படத்தில் இருந்து வெளியேறியதை அடுத்து ஒபிலி என் கிருஷ்ணா இயக்க உள்ளதாக அறிவித்ததோடு. முஃப்டி படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல் அதனைத் தழுவி இப்படத்தை எடுக்க முடிவு செய்து பல்வேறு மாற்றங்களுடன் உருவாகி உள்ள படம் தான் பத்து தல, இப்படம் நேற்று உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதோடு சிம்புவின் நடிப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

44

இந்நிலையில், பத்து தல படத்தின் முதல் நாள் வசூலை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.12.3 கோடி வசூலித்து உள்ளதாக குறிப்பிட்டு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். வார நாள் அதுமட்டுமின்றி அதிகாலை காட்சிகள் இன்றி இப்படம் இந்த அளவு வசூல் செய்துள்ளதாகவும், நடிகர் சிம்புவின் கெரியரிலேயே முதல் நாளில் அதிக கலெக்‌ஷன் கிடைத்தது இந்த படத்துக்கு தான் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... ரஜினியை டோட்டலாக மாற்றிய நெல்சன்... ஜெயிலர் படத்துக்காக புதிய தோற்றத்தில் சூப்பர்ஸ்டார் - வைரலாகும் போட்டோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிலம்பரசன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாண்டியன் உடன் ஓடிப்போயிட்டாளோ? வானதியின் பெற்றோருக்கு வந்த டவுட் - அய்யனார் துணை சீரியல் அப்டேட்
Recommended image2
Pandian Stores 2 E705 Today: அன்பால் இணைந்த கதிர்-ராஜி.! கோபத்தால் பிரிந்த செந்தில்-மீனா.! இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஹைலைட்ஸ்!
Recommended image3
விபத்தில் பறிபோன அருண் அம்மாவின் உயிர்... முத்து மீது விழும் பழி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved