MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vani Bhojan : ஜெய் உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பா? முதன்முறையாக உண்மையை போட்டுடைத்த நடிகை வாணி போஜன்

Vani Bhojan : ஜெய் உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பா? முதன்முறையாக உண்மையை போட்டுடைத்த நடிகை வாணி போஜன்

நடிகர் ஜெய்யும், நடிகை வாணி போஜனும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தகவல்களுக்கு அவரே முதன்முறையாக விளக்கம் அளித்துள்ளார்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 31 2023, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வாணி போஜன். இவர் தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் தற்போது செங்களம் என்கிற வெப்தொடர் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வெப் தொடரில் புரமோஷனுக்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்து வருகிறார் வாணி போஜன். அந்த வகையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்று வாணி போஜனுக்கு ஃபேன்ஸ் மீட் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இதில் தன்னைப்பற்றி யூடியூப்பில் பரவும் தவறான தகவல்கள் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் வாணி போஜன்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

ஜெய் உடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பா?

ஜெய்யும் வாணி போஜனும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும் இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வருவதாகவும் பரவிய தகவல் குறித்தும் அந்த நேர்காணலில் வாணி போஜன் பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது : “இந்த மாதிரி எழுதுறப்போ நான் ஜெய்யிடமே என்னது இதெல்லாம் என்று பேசினேன். ஜெய் உடன் ரிலேஷன்ஷிப் என்று எழுதி இருந்தால் கூட கவலைப்பட்டிருக்க மாட்டேன். ஆனால் லிவிங் ரிலேஷன்ஷிப் அப்படின்னு எழுதுனது ரொம்ப சீப் ஆக இருந்தது. கஷ்டப்பட்டு லோன் வாங்கி வீடு கட்டி சொந்த வீட்ல இருக்கேன். இதுல வந்து யாரோ ஒருத்தரோட வீட்ல அவர் கூட லிவிங் ரிலேஷன்ஷிப்ல இருக்கேன்னு சொல்றது ரொம்ப சீப் ஆன விஷயம்” என கூறினார்.

இதையும் படியுங்கள்... ரஜினியை டோட்டலாக மாற்றிய நெல்சன்... ஜெயிலர் படத்துக்காக புதிய தோற்றத்தில் சூப்பர்ஸ்டார் - வைரலாகும் போட்டோ

34

வாணி போஜன் வீட்டில் திருட்டா?

நடிகை வாணி போஜன் வீட்டில் திருடிவிட்டதாகவும், அப்போது அவர் நைட்டியோடு அழுகும்படியான போட்டோவுடன் வெளிவந்த யூடியூப் வீடியோ குறித்து அவர் பேசுகையில், “என் வீட்டுக்குள்ள வர்ற அளவுக்கு எதுவுமே இல்ல. இப்போ என் வீட்ல பாஸ்வேர்டு போட்டிருக்கேன். அதனால யாரும் உள்ள வர முடியாது. திருடுற அளவுக்கு நான் யாரையும் வீட்ல வச்சிக்கல. அதில் நைட்டியோடு இருக்கும் புகைப்படம், தெய்வமகள் சீரியலில் பிரகாஷ் என்னை விட்டுட்டு போறப்போ அழுத சீனின் போது எடுக்கப்பட்டது. அதை எடிட் பண்ணி தான் இப்படி வீடியோ போட்டிருக்கிறார்கள்” என அவர் தெரிவித்தார்.

44

வேதனையை பகிர்ந்த வாணி போஜன்

பட விழாவில் சேலை அணிந்து கலந்துகொண்டபோது அப்போது சேலையை அட்ஜஸ்மெண்ட் செய்வதை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளதை பார்க்கும் போது மிகவும் கடுப்பாக இருப்பதாக வாணி போஜன் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது : “புடவை கட்டிட்டு போகும்போது எப்படி போனாலும் பாக்குறவங்க பாக்க தான் போறாங்க. நான் பசங்களை குறை சொல்வதை விட, இந்த மாதிரி செய்யும் யூடியூபர்கள் பொறுப்பா இருக்கனும். நான் அட்ஜஸ்ட் பண்ணுனா நீ கேமராவை திருப்புறது தான் உன்னோட வேலை. ஆனா நீ நான் எப்போ அட்ஜஸ்ட் பண்ணுவேன்னு காத்திருந்து ஜூம் பண்ணி எடுக்குறது அவர்களோட தவறு தான்” என வேதனையுடன் பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... ஹீரோவாக அவதாரம் எடுத்த மணிகண்டன் ராஜேஷ்! பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கிடைத்த ஜாக்பார்ட் வாய்ப்பு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image2
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Recommended image3
Vijay Movie : சன் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாகும் விஜய் படம்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. எந்த படம்.?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved