பிக்பாஸ் நிகழ்ச்சி என்ட்ரிக்கு பின்னர், தொடர்ந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்புகளை தேடி வந்த மணிகண்டன் ராஜேஷின் முதல் ஹீரோ சப்ஜெட் வெப் சீரிஸ் குறித்த தகவல் தற்போது அதிகார பூர்வமாக வெளியாகியுள்ளது. 

பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் முதல் இணையத் தொடருக்கு 'மை டியர் டயானா' என பெயரிடப்பட்டு, அதன் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது, இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அறிமுக இயக்குநர்கள் பி. கே. விஜய் மற்றும் கிரிதர் ராமகணேஷ் இயக்கத்தில் தயாராகும் முதல் இணையத் தொடர் 'மை டியர் டயானா'. இதில் நடிகர் மணிகண்ட ராஜேஷ், நடிகை மகாலட்சுமி, ஜனா குமார், மகேஷ் சுப்பிரமணியம், அக்சயா பிரேம்நாத், துரோஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வாட்ஸ் பிரபு ஒளிப்பதிவு செய்யும் இந்த இணையத் தொடருக்கு குஹா கணேஷ் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை இளங்கோவன் மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த இணையத் தொடரை வோர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டை தொடர்ந்து... பாடகர் விஜய் ஜேசுதாசின் வீட்டில் நகை திருட்டு! பரபரப்பு புகார்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சசோகதரரும், பிக் பாஸ் பிரபலமும், நடிகருமான மணிகண்ட ராஜேஷ் கதையின் நாயகனாக நடிக்கும் இணையத் தொடர் என்பதால் 'மை டியர் டயானா' விற்கு டிஜிட்டல் தள ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முதல் நாளே இத்தனை கோடி வசூலா? 'தசரா' படத்தின் தரமான சம்பவம்..! சந்தோஷத்தில் படக்குழு..!

இதுவரை சீரியல்களிலும், ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே தலைகாட்டி வந்த மணிகண்டன் ராஜேஷுக்கு, வலைதள தொடரில் ஹீரோவாக நடித்துள்ள வாய்ப்பு ஜாக்பார்ட் வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.