- Home
- Cinema
- ஒட்டுமொத்த கோலிவுட்டே ஆஜரான அனிருத் திருமண வரவேற்பில் தனுஷ் மட்டும் ஆப்சென்ட் ஆனது ஏன்?... உடைந்ததா DnA கூட்டணி? வெடிக்கும் சர்ச்சை
ஒட்டுமொத்த கோலிவுட்டே ஆஜரான அனிருத் திருமண வரவேற்பில் தனுஷ் மட்டும் ஆப்சென்ட் ஆனது ஏன்?... உடைந்ததா DnA கூட்டணி? வெடிக்கும் சர்ச்சை
Dhanush Not Attend Anirudh Wedding Reception : அனிருத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் பங்கேற்காதது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

அனிருத் திருமண வரவேற்பில் தனுஷ் கலந்துகொள்ளாதது ஏன்?
தமிழ் திரையுலகில் தற்போது அதிகம் பேசப்பட்டு வரும் நிகழ்வுகளில் ஒன்றாக இசையமைப்பாளர் அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமண வரவேற்பு அமைந்துள்ளது. சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்ற இந்த விழாவில் ரஜினிகாந்த், அஜித்குமார், எம்.எஸ்.தோனி உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஆனால், இத்தனை நட்சத்திரங்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் மட்டும் இல்லாதது தற்போது ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
கடந்த நவம்பர் 11-ம் தேதி கிரீஸில் அனிருத் - காவ்யா மாறன் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்தத் திருமண நிகழ்ச்சியில் நடிகர் தனுஷின் மகன்களும் கலந்துகொண்டனர். இதனால் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சியில் தனுஷ் நிச்சயம் பங்கேற்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் வராதது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அனிருத்தை அறிமுகப்படுத்திய தனுஷ்
நடிகர் தனுஷுக்கும் அனிருத்துக்கும் இடையிலான நட்பு தமிழ் சினிமா ரசிகர்கள் அறிந்த ஒன்றுதான். தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான '3' திரைப்படத்தின் மூலமாகவே அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் படத்தில் தனுஷ் எழுதி, பாடிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
ஒரே பாடலின் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்ற அனிருத்துக்கு, அந்தப் படம் திரையுலகில் மிகப்பெரிய அடையாளமாக அமைந்தது. தொடர்ந்து தனுஷ் நடித்த பல படங்களுக்கும் அனிருத் இசையமைத்தார். இருவரின் கூட்டணியில் வெளியான பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இந்த நிலையில், இசையமைப்பாளராக திரையுலகில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில் அனிருத் இரண்டு நாட்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், அந்தப் பதிவில் தனுஷ் குறித்து எந்தக் குறிப்பும் இடம்பெறாததை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டி விமர்சித்தனர்.
தனுஷுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையா?
அனிருத்தின் திருமணத்திலும் சென்னையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியிலும் தனுஷ் பங்கேற்காதது குறித்து இணையத்தில் பல்வேறு கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அவருக்கு திருமண அழைப்பு கொடுக்கப்பட்டதா? அழைப்பு இருந்தும் அவர் நிகழ்ச்சியைத் தவிர்த்தாரா? அல்லது இருவருக்கும் இடையே ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா? என ரசிகர்கள் தங்களது சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில், நடிகர் தனுஷ் தனது 56-வது திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக மதுரைக்குச் சென்றுள்ளார். மதுரை விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவருக்கு ரசிகர்கள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகியுள்ளன.
அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு ஒருபுறம் பிரபலங்களின் வருகையால் கவனம் பெற்றுள்ள நிலையில், மறுபுறம் தனுஷின் வருகை இல்லாதது புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இருப்பினும், தனுஷ் ஏன் திருமண வரவேற்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறித்தோ, இருவருக்கும் இடையிலான தற்போதைய உறவு குறித்தோ எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. எனவே, சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் தற்போது யூகங்களாகவே உள்ளன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.















