மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..! பேராசிரியர்கள் மீது நடவடிக்கை.? நள்ளிரவிலும் கலாஷேத்ராவில் தொடர்ந்த போராட்டம்
சென்னை கலாஷேத்ரா வளாகத்தில் மாணவ, மாணவிகள் நடத்திய உள்ளிருப்பு போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மீண்டும் காலையில் போராட்டத்தை தொடங்க உள்ளதாக மாணவிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மாணவிகளுக்கு பாலியல் புகார்
சென்னை, திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா அறக்கட்டளை கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் நடனம் பயில்கின்றனர். இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு, ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு அளிப்பதாக அக்கல்லூரியின் முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன் சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனையடுத்து கலாஷேத்ரா கல்லூரியில் ஆசிரியர் மீது எழுந்துள்ள பாலியல் புகார் குறித்து தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா ஷர்மா மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அடையாறு மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கத்தியை காட்டி மிரட்டி ரூ.43.5 லட்சம் பணம் அபேஷ்… கொள்ளை கும்பலுக்கு போலீஸார் வலைவீச்சு!!
கல்லூரிக்கு விடுமுறை
இந்தநிலையில் கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மாணவ-மாணவிகள் நேற்று மாலை முதல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வந்தனர். பேராசிரியர் உட்பட 4 பேர் மீது நடவடிக்கை, எழுத்துப்பூர்வ பதிலளிப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவிகளின் இந்தப் போராட்டம் நேற்று நள்ளிரவைக் கடந்தும் தொடர்ந்தது. இதனிடையே மாணவிகளின் போராட்டம் தொடர்வதையடுத்து கல்லூரியை வரும் ஏப்ரல் 6-ம் தேதி வரை மூட கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கல்லூரி விடுதியில் உள்ள அனைத்து மாணவர்களும் 2 நாட்களுக்கு காலி செய்யவும் உத்தரவிட்டது. இதனை ஏற்றுக்கொள்ளாத மாணவிகள் இரவு நேரத்திலும் தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர்.
தொடரும் போராட்டம்
இதனையடுத்து மாணவிகள் உடன் நேற்று இரவு சென்னை தெற்கு மண்டல காவல் இணை ஆணையர் சக்கரவர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் அருள், வேளச்சேரி தாசில்தார் ரபீக் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைப்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இருந்த போதும் மாணவ, மாணவிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதோடு மீண்டும் இன்று காலை 7 மணியளவில் போராட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படியுங்கள்