MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!

மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. அட! அடுத்த மாதம் இத்தனை நாட்கள் லீவா? மாணவர்கள் குஷி!

School Holidays: தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதம் பள்ளிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை கிடைக்கும்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

1 Min read
Author : Rayar r
Published : Feb 23 2026, 05:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
Image Credit : Asianet News

மார்ச் 4 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு கொண்டாட்டம் தான். கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை, குடியரசு தினம் என கொத்து கொத்தாக விடுமுறை கிடைத்தது. ஆனால் இந்த பிப்ரவரி மாதம் பெரிய அளவில் விடுமுறை கண்ணில் படவில்லை.

 வரப்போகும் மார்ச் மாதத்திலாவது விடுமுறை கிடைக்குமா? என எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில், தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக மார்ச் 4ம் தேதி (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

24
எதற்காக விடுமுறை?
Image Credit : Getty

எதற்காக விடுமுறை?

அதாவது கன்னியாகுமரி சாமி தோப்பில் அய்யா வைகுண்டசாமியின் 194-ஆவது அவதாரத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களும் கலந்து கொள்வார்கள். 

இதனை கருத்தில் கொண்டே தென்காசி மாவட்டத்துக்கு மார்ச் 4ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய மார்ச் 7ம் தேதி பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
மார்ச் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! எத்தனை நாட்கள் விடுமுறை ?
Related image2
இரண்டு நாட்கள் விடுமுறை! பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன போக்குவரத்துறை!
34
மார்ச் மாதத்தில் இத்தனை நாட்கள் லீவா?
Image Credit : stockPhoto

மார்ச் மாதத்தில் இத்தனை நாட்கள் லீவா?

இது மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்கள் கொண்டாடும் வகையில் மார்ச் மாதத்தில் மட்டும் 3 பொது விடுமுறை நாட்கள் வர உள்ளன.

 அதாவது மார்ச் 19 ம் தேதி (வியாழக்கிழமை) தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் அன்றைய நாள் அரசு விடுமுறையாகும். மார்ச் 21ம் தேதி (சனிக்கிழமை) ரமலான் பண்டிகை கொண்டாப்படுகிறது. இது தவிர மார்ச் மார்ச் 31 (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தி வருவதால் இவை அனைத்தையும் சேர்த்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

44
மாணவர்கள், ஆசிரியர்கள் குஷி
Image Credit : Getty

மாணவர்கள், ஆசிரியர்கள் குஷி

இது மட்டுமின்றி ரமலான் சனிக்கிழமை வருவதால் அதை தவிர்த்து, மீதமுள்ள சனி, ஞாயிற்றுக்கிழமைகளையும் சேர்த்து 8 நாட்கள், பொது விடுமுறை 3 நாட்கள் என மொத்தமாக 11 நாட்கள் மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்கும். பொதுவாக விடுமுறை இல்லாமல் வறட்சியாக இருக்கும் மார்ச் மாதத்தில் லட்டு போல் 3 பொது விடுமுறை வருவது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளிகள் விடுமுறை
பள்ளிகள்
விடுமுறை
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
முழு அரசியல்வாதியாக மாறிய விஜய்.. 'அந்த' வார்த்தையால் கண்கலங்கிய தளபதி.. இதை கவனிச்சீங்களா?
Recommended image2
கோடையை மிஞ்சும் அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில்.. மழை குறித்து குளு குளு அப்டேட் வானிலை மையம்!
Recommended image3
திமுக-காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை.. முடிவுகளுக்காக காத்திருக்கிறோம்: கே.சி. வேணுகோபால்
Related Stories
Recommended image1
மார்ச் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! எத்தனை நாட்கள் விடுமுறை ?
Recommended image2
இரண்டு நாட்கள் விடுமுறை! பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன போக்குவரத்துறை!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved