MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மார்ச் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! எத்தனை நாட்கள் விடுமுறை ?

மார்ச் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.! எத்தனை நாட்கள் விடுமுறை ?

School Holiday: மழைக்காலங்களில் டிவி முன்னாடி அமர்ந்து கொண்டு நமது மாவட்டத்திற்கு விடுமுறை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் பள்ளி மாணவர்கள் காத்து கிடப்பதை நாம் பார்த்து இருப்போம்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 19 2026, 09:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
பள்ளி மாணவர்கள்
Image Credit : School education pro

பள்ளி மாணவர்கள்

தமிழகத்தில் விடுமுறை என்றாலே பள்ளி மாணவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான். அவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தான். குறிப்பாக மழைக்காலங்களில் டிவி முன்னாடி அமர்ந்து கொண்டு நமது மாவட்டத்திற்கு விடுமுறை கிடைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் பள்ளி மாணவர்கள் காத்து கிடப்பதை நாம் பார்த்து இருப்போம்.

25
ஜனவரியில் கொட்டு கிடந்த விடுமுறை
Image Credit : our own

ஜனவரியில் கொட்டு கிடந்த விடுமுறை

இந்நிலையில் ஜனவரி மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு ஏகப்பட்ட விடுமுறை கொட்டி கிடந்தது. அதாவது அரையாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 4ம் தேதி அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் ஜனவரியில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வந்தது. பின்னர் பொங்கல் பண்டிகைக்கு ஜனவரி 14 போகி பண்டிகை, ஜனவரி 15 தை பொங்கல், ஜனவரி 16 திருவள்ளுவர் தினம், ஜனவரி 17 உழவர் திருநாள், ஜனவரி 18 ஞாயிற்றுக்கிழமை என மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்ததால் பள்ளி மாணவர்கள் குஷியில் துள்ளி குதித்தனர்.

Related Articles

Related image1
சென்னை டூ தூத்துக்குடி இனி 8 மணி நேரம் தான்.! வந்தே பாரத் ரயில் ரெடி! பயணிகள் ஹேப்பி!
Related image2
அடுத்த 24 மணிநேரத்தில்! 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில்! காட்டு காட்டுனு காட்டப் போகும் கனமழை.!
35
ஜனவரியில் 15 நாட்கள் விடுமுறை
Image Credit : ANI

ஜனவரியில் 15 நாட்கள் விடுமுறை

பொங்கல் முடிந்த கையோடு மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்தது. அதாவது ஜனவரி 24, 25 சனி, ஞாயிறு வார விடுமுறை மற்றும் ஜனவரி 26 திங்கள் கிழமை குடியரசு தினம் என மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தது. மொத்தமாக 31 நாட்கள் கொண்ட ஜனவரி மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் அரசு ஊழியர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை கிடைத்தால் கொண்டாடினர்.

45
பிப்ரவரி மாதம் பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்
Image Credit : our own

பிப்ரவரி மாதம் பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்

இதனையடுத்து பிப்ரவரி மாதம் பள்ளி மாணவர்களுக்கு எதிர்பார்த்த அளவுக்கு அரசு விடுமுறை கிடைக்கவில்லை. அதாவது பிப்ரவரி 1ம் தேதி சைப்பூசம் அரசு விடுமுறை கிடைத்தது. அதுவும் ஞாயிற்றுக்கிழமை வந்ததால் பள்ளி மாணவர்கள் கவலை அடைந்தனர். வார விடுமுறை என மொத்தமாக பார்த்தால் 8 நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைப்பதால் பள்ளி மாணவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

55
மார்ச் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?
Image Credit : Asianet News

மார்ச் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை?

இந்நிலையில் ஜனவரி மாதம் போல மார்ச் மாதம் அமையுமா என்ற எதிர்பார்ப்பில் பள்ளி மாணவர்கள் காலண்டரை புரட்டி வருகின்றனர். அதாவது மார்ச் 3 வியாழக்கிழமை தெலுங்கு வருடப் பிறப்பு, மார்ச் 21 சனிக்கிழமை ரம்ஜான், மார்ச் 31 செவ்வாய்கிழமை மகாவீர் ஜெயந்தி என மூன்று நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. சனி, ஞாயிறு வார விடுமுறை என மொத்தம் 9 நாட்கள் விடுமுறை வருகிறது. 31 நாட்கள் கொண்ட மார்ச் மாதத்தில் மட்டும் பள்ளி மாணவர்களுக்கு 12 நாட்கள் லீவு கிடைக்க உள்ளது. பிப்ரவரி மாதம் ஏமாற்றம் அடைந்த பள்ளி மாணவர்கள் மார்ச் மாதத்தில் அதிக ஒரளவுக்கு விடுமுறை கிடைப்பதால் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி
பள்ளிக் கல்வித் துறை
பள்ளி மாணவர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பள்ளி மாணவர்களே எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு.. யாருக்கெல்லாம் மாதம் ரூ.1000 கிடைக்கும்? முடிவுகள் வெளியானது!
Recommended image2
45 நாட்கள் மின்சார ரயில்கள் கட்.. கைகொடுக்க வரும் சிறப்பு பேருந்துகள்.. சென்னைவாசிகள் கவனத்துக்கு..!
Recommended image3
சென்னைனா கசக்குது... கொங்கு மண்டலம் மட்டும் இனிக்குதா..? எடப்பாடிக்கு எதிராக கொதிக்கும் நிர்வாகிகள்..!
Related Stories
Recommended image1
சென்னை டூ தூத்துக்குடி இனி 8 மணி நேரம் தான்.! வந்தே பாரத் ரயில் ரெடி! பயணிகள் ஹேப்பி!
Recommended image2
அடுத்த 24 மணிநேரத்தில்! 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில்! காட்டு காட்டுனு காட்டப் போகும் கனமழை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved