MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • அடுத்த 24 மணிநேரத்தில்! 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில்! காட்டு காட்டுனு காட்டப் போகும் கனமழை.!

அடுத்த 24 மணிநேரத்தில்! 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்தில்! காட்டு காட்டுனு காட்டப் போகும் கனமழை.!

Tamilnadu Rain: பிப்ரவரி 20ம் தேதி தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 18 2026, 03:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்
Image Credit : Google

வானிலை மையம் சொன்ன முக்கிய அப்டேட்

தமிழகத்தில் அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை ஜனவரி மாதம் அதாவது பொங்கலுக்கு முன்பாக முடிவு அடைந்தது. வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதன் பிறகு கடும் பொழிவு நிலவி வந்தது. மற்றொரு புறம் வெயிலும் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் வெயில் பனிபொழிவுகளுக்கு இடையே மழை குறித்து வானிலை மையம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.

25
காற்றழுத்த தாழ்வு பகுதி
Image Credit : PTI

காற்றழுத்த தாழ்வு பகுதி

பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
ஆட்டோ வாங்க ரூ.1,00,000 மானியம் முதல் e-Scooter! ஓய்வூதியம் வரை! குஷியில் தொழிலாளர்கள்!
Related image2
குவிந்து கிடக்கும் வெங்காயம், தக்காளி! பை நிறைய அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! உச்சத்தை தொட்டதா காய்கறிகளின் விலை?
35
லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு
Image Credit : Google

லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு

இதன் காரணமாக இன்று மற்றும் நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் பிப்ரவரி 20ம் தேதி தென் தமிழகம் மற்றும் கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.

அதேபோல் பிப்ரவரி 21 மற்றும் 22 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.

45
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்
Image Credit : Asianet News

சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்

பனிமூட்டம் எச்சரிக்கை

நாளை மற்றும் நாளை மறுநாள் வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

55
மீனவர்களுக்கான எச்சரிக்கை
Image Credit : our own

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகள்

இன்று முதல் பிப்ரவரி 20 வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேலும் பிப்ரவரி 21ம் தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால் இந்த நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்வ வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை

Latest Videos
Recommended Stories
Recommended image1
இதெல்லாம் ரொம்ப தப்புங்க.. டாஸ்மாக் கடையை மூட சொன்னா பெண்களை இப்படி துன்புறுத்துவீங்களா! கொதிக்கும் அன்புமணி
Recommended image2
சென்னை ரயில் பயணிகளுக்கு.. 45 நாட்கள் மின்சார ரயில் சேவையில் அதிரடி மாற்றம்!
Recommended image3
தமிழகத்தில் இந்த 3 தொகுதியில் ஜெயிச்சா கோட்டை கன்ஃபார்ம்..! 60 வருட செண்டிமெண்ட்..!
Related Stories
Recommended image1
ஆட்டோ வாங்க ரூ.1,00,000 மானியம் முதல் e-Scooter! ஓய்வூதியம் வரை! குஷியில் தொழிலாளர்கள்!
Recommended image2
குவிந்து கிடக்கும் வெங்காயம், தக்காளி! பை நிறைய அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! உச்சத்தை தொட்டதா காய்கறிகளின் விலை?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved