MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ஆட்டோ வாங்க ரூ.1,00,000 மானியம் முதல் e-Scooter! ஓய்வூதியம் வரை! குஷியில் தொழிலாளர்கள்!

ஆட்டோ வாங்க ரூ.1,00,000 மானியம் முதல் e-Scooter! ஓய்வூதியம் வரை! குஷியில் தொழிலாளர்கள்!

பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா ரூ.1,00,000 மானியமாக வழங்கப்படுகிறது. மானிய விலையில் புதிய ஆட்டோ ரிக்சாக்கள் ரூ.23.33 கோடியில் வழங்கப்பட்டுள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 18 2026, 11:27 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம்
Image Credit : Asianet News

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியம்

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம் உள்ளிட்ட 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு, 2025-2026ம் நிதியாண்டில் ரூ.229 கோடி அரசு மானியத்தில் இருந்து கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, இயற்கை மரணம், விபத்து மரணம், ஈமச்சடங்கு, விபத்து ஊனம், முடக்க ஓய்வூதியம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளாக வழங்கப்பட்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
தமிழ்நாடு அரசு
Image Credit : our own

தமிழ்நாடு அரசு

மொத்தமாக கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் பதிவு பெற்ற உறுப்பினர்களையும் சேர்த்து 2025-26ம் நிதி ஆண்டில் ரூ. 936.65 கோடி மதிப்பிலான மேற்கண்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வரசு பொறுப்பேற்ற நாள் முதல் (07.05.2021 முதல் 31.01.2026 வரை) 37.75 இலட்சம் பதிவு பெற்ற அமைப்புசாரா மற்றும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் ரூ.3317.16 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டு, தொழிலாளர் நலனுக்காக தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

36
புதிய ஆட்டோ ரிக்சா வாகனம்
Image Credit : Social Media

புதிய ஆட்டோ ரிக்சா வாகனம்

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற அமைப்புசாரா பெண் / திருநங்கை ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா ரூ.1,00,000 மானியமாக வழங்கப்படுகிறது. 31.12.2025 வரை 2333 பயனாளிகளுக்கு தலா ரூ.1 இலட்சம் மானிய விலையில் புதிய ஆட்டோ ரிக்சாக்கள் ரூ.23.33 கோடியில் வழங்கப்பட்டுள்ளது.

46
E-Scooter வாங்க ரூ.20,000 மானியம்
Image Credit : Google

E-Scooter வாங்க ரூ.20,000 மானியம்

தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் ஓய்வூதியம் ரூ.1,000லிருந்து ரூ.1,200ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிக் தொழிலாளர்களுக்கென பெருநகரங்களான சென்னையில் அண்ணா நகர் மற்றும் தி.நகரிலும், கோயம்புத்தூரில் காந்திபுரம் மற்றும் R.S. புரம் ஆகிய இடங்களில் மாநகராட்சிகள் மூலமாக ஓய்வுக்கூடங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 31.12.2025 வரை 23,704 கிக் தொழிலாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இத்தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் 2,000 தொழிலாளர்களுக்கு புதிய e-Scooter வாங்கும் செலவினத்தில் ரூ.20,000 மானியமாக வழங்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

56
விபத்து மரண உதவித்தொகை
Image Credit : Asianet News

விபத்து மரண உதவித்தொகை

தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு விபத்து மரணம் மற்றும் விபத்து ஊனத்திற்கான குழு காப்பீட்டுத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பணியிடத்து விபத்து மரண உதவித்தொகை 5 இலட்சம் ரூபாயிலிருந்து 8 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படுகிறது. கட்டுமானத் தொழிலாளர்கள் திறனை மேம்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளும் வகையில் 50,000 பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்கி வழங்கப்பட்டுள்ளது.

66
Labour Welfare
Image Credit : Asianet News

Labour Welfare

கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக இருந்து 60 வயது பூர்த்தி அடைந்து, குடும்பத்தினரின் கவனிப்பும் பராமரிப்பும் இல்லாத, கட்டுமானத் தொழிலாளர்கள் தலா 50 நபர்கள் தங்கும் வகையில் உணவு மற்றும் உறைவிட வசதிகளுடன் சென்னையில் இரண்டு முதியோர் இல்லங்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் அவர்களது அன்றாடப் பணி தொடர்பாக அதிக அளவில் காலையில் கூடி காத்திருக்கும் இடங்களில், கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 தொழிலாளர் நலக் கூடங்கள் ரூ.20.25 கோடி செலவில் அமைக்கவும் மேலும், 10,000 உயர்கல்வி பயிலும் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இணையவழி திறன் பயிற்சி தமிழ்நாடு முதலமைச்சர் விரைவில் தொடங்கி வைக்கப்பட உள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு அரசு
உருளி வண்டிகள்
ஆட்டோ
ஆட்டோ செய்திகள்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match Drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Indigenous Cattle Farming : நாட்டு மாடு வளர்க்கும் பெண்களுக்கு நிதியுதவி..யாருக்குக் கிடைக்கும்? முழு விவரம்
Recommended image2
Keezhadi : 2,000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் செய்த அந்த செயல்! உலகமே வியந்து பார்க்கும் சாதனை!
Recommended image3
10 Lane Expressway:சென்னையிலிருந்து கோவை, தூத்துக்குடிக்கு புதிய 10 வழிச்சாலை? நிலத்தின் விலை உயரப்போகும் மாவட்டங்கள் எவை?
Related Stories
Recommended image1
வெயிலுக்கும், பனிக்கும் கொஞ்சம் பிரேக்! முதல் முறையாக பிப்ரவரியில் பிச்சு ஊதரப்போகும் கனமழை!
Recommended image2
குவிந்து கிடக்கும் வெங்காயம், தக்காளி! பை நிறைய அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! உச்சத்தை தொட்டதா காய்கறிகளின் விலை?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved