MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு.. அரசு தேர்வுத் துறைக்கு ஆசிரியர்கள் வைத்த முக்கிய கோரிக்கை!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளில் பறக்கும் படை உறுப்பினர்களாக நியமிக்க உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை. தேர்வுத்துறை கருதினால் தேர்வு பணிகளிலும் நியமிக்க வேண்டாம்.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 23 2026, 05:06 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 10ம் வகுப்பு பொதுத்தேர்வு
Image Credit : our own

10ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதாவது தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள் மார்ச் 11, ஆங்கில மொழிப்பாடம் மார்ச் 16, கணிதம் மார்ச் 25, அறிவியல் மார்ச் 30, ஏப்ரல் 2 தேதி சமூக அறிவியல், விருப்ப மொழிப்பாட தேர்வு ஏப்ரல் 6 தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை பறக்கும் படை (Flying Squad) உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் சங்கம்
Image Credit : our own

தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் சங்கம்

இதுதொடர்பாக தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் சார்பில் அரசுத் தேர்வுத் துறைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்: மார்ச் மாதம் தொடங்க உள்ள மேல்நிலைபள்ளி பொதுத்தேர்வு பணிகளில், அறை கண்காணிப்பாளர் மற்றும் பறக்கும் படை உறுப்பினர்களாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள், அறை கண்காணிப்பாளர் பணிகளில் மட்டுமே நியமிக்கப்படுகின்றனர். அவர்களைப் பறக்கும் படை பணிகளில் நியமிக்கத் தேர்வுத் துறை முன்வருவதில்லை.

Related Articles

Related image1
இன்று மாலை 6 மணி வரை டாஸ்டாக் கடைகளை மூட திடீர் உத்தரவு.! இதுதான் காரணமா?
Related image2
கோடையை மிஞ்சும் அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில்.. மழை குறித்து குளு குளு அப்டேட் வானிலை மையம்!
34
 பறக்கும் படை
Image Credit : our own

பறக்கும் படை

பொதுத்தேர்வுப் பணிகளில் பறக்கும் படை உறுப்பினர்களாக நியமிக்க உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தகுதி இல்லை என்று தேர்வுத் துறை கருதினால், அவர்களை அறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட எந்தவொரு தேர்வு பணிகளிலும் நியமிக்க வேண்டாம் என சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
அறை கண்காணிப்பாளர்
Image Credit : our own

அறை கண்காணிப்பாளர்

உடற்கல்வி ஆசிரியர்கள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பயிற்றுவிப்பதால், அவர்களை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுப் பணிகளில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டும். குறிப்பாக, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பறக்கும் படை மற்றும் அறை கண்காணிப்பாளர் ஆகிய இரு பணிகளிலும் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளைத் தேர்வுத் துறை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பள்ளி மாணவர்
பள்ளிக் கல்வித் துறை
தேர்வு
ஆசிரியர்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Holiday Special Bus: இரண்டு நாட்கள் விடுமுறை.. சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு! எந்தெந்த ஊர்களுக்கு எவ்வளவு பேருந்துகள்?
Recommended image2
ஜூன் 25 கடைசி நாள்! 10 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 ரொக்கப்பரிசு! தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
Recommended image3
Now Playing
Magalir urimai thogai: ஜூன் மாத மகளிர் உரிமைத் தொகை.! உங்களுக்கு கிடைக்குமா? உடனே செக் பண்ணுங்க!
Related Stories
Recommended image1
இன்று மாலை 6 மணி வரை டாஸ்டாக் கடைகளை மூட திடீர் உத்தரவு.! இதுதான் காரணமா?
Recommended image2
கோடையை மிஞ்சும் அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில்.. மழை குறித்து குளு குளு அப்டேட் வானிலை மையம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved