MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • இன்று மாலை 6 மணி வரை டாஸ்டாக் கடைகளை மூட திடீர் உத்தரவு.! இதுதான் காரணமா?

இன்று மாலை 6 மணி வரை டாஸ்டாக் கடைகளை மூட திடீர் உத்தரவு.! இதுதான் காரணமா?

TVK Vijay: வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தவெக நிர்வாகிகளை இன்று விஜய் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

1 Min read
Author : vinoth kumar
Published : Feb 23 2026, 11:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
தமிழகத்தில் 4 முனை போட்டி
Image Credit : Asianet News

தமிழகத்தில் 4 முனை போட்டி

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளது. தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை விஜய் வருகையால் திமுக, அதிமுக, நாதக, தவெக கட்சிகளுக்கு இடையே நான்கு முனைப்போட்டி நிலவுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
தவெக தலைவர் விஜய்
Image Credit : X

தவெக தலைவர் விஜய்

இந்நிலைகள் கரூர் சம்பவத்திற்கு பிறகு பரப்புரையில் ஈடுபடமால் தவெகவினர் அமைதி காத்து வந்த நிலையில் மீண்டும் மாவட்டம் வாரியாக நிர்வாகிகள் தவெக தலைவர் விஜய் சந்தித்து வருகிறார். அதன்படி, காஞ்சிபுரம், புதுச்சேரி, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக இன்று வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் தவெக நிர்வாகிகளை இன்று விஜய் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

Related Articles

Related image1
சட்டுபுட்டுன்னு செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Related image2
லாரி லாரியாக வந்து இறங்கும் தக்காளி! வெங்காயம்! அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! ஒரு கிலோ இவ்வளவு தானா?
35
வேலூரில் விஜய் பரப்புரை
Image Credit : X

வேலூரில் விஜய் பரப்புரை

இந்த நிகழ்ச்சியில் 4,900 பேர் மட்டுமே பங்கேற்க போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இந்த 4,900 பேருக்கும் கியூ ஆர் கோடுடன் கூடிய நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி மதியம் 12 முதல் 3 மணி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கடும் வெயிலால் வட மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற இளைஞர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

45
மேற்கூரைகள் அமைப்பு
Image Credit : Asianet News

மேற்கூரைகள் அமைப்பு

இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக முதல் முறையாக மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் கர்ப்பிணி பெண்கள், சிறுவர், சிறுமியர், மூத்த குடிமக்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விஜய்யின் பிரச்சார வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

55
டாஸ்மாக் கடைகள் மூடல்
Image Credit : our own

டாஸ்மாக் கடைகள் மூடல்

இதனிடையே வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் இன்று நடைபெறும் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்வை அடுத்து அப்பகுதியை சுற்றியுள்ள டாஸ்மாக் கடையை இன்று மாலை 6 மணி வரை மூட மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
டாஸ்மாக்
டாஸ்மாக் கடை
டிவி.கே. விஜய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay: இம்மாத இறுதியில் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்..! பிரதமருடன் முக்கிய சந்திப்பு..
Recommended image2
Now Playing
“திசை திருப்பும் அரசியல் செய்யாதீங்க” ஆதவ் அர்ஜூனாவுக்கு சிவசங்கர் கடும் எச்சரிக்கை!
Recommended image3
AIADMK: விஜய்யை எப்படி வீழ்த்த போகிறீர்கள்? அரசியல் களம் திமுக VS தவெக! அதிமுகவை மீட்க 3 மேஜிக் ஐடியா
Related Stories
Recommended image1
சட்டுபுட்டுன்னு செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
Recommended image2
லாரி லாரியாக வந்து இறங்கும் தக்காளி! வெங்காயம்! அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! ஒரு கிலோ இவ்வளவு தானா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved