- Home
- Tamil Nadu News
- சட்டுபுட்டுன்னு செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
சட்டுபுட்டுன்னு செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! நாளை காலை 9 மணி முதல் மின்தடை! எந்தெந்த பகுதிகளில்?
பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மின்தடை செய்யப்படும்.

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
தமிழகத்தில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது, சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
இதுகுறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் (24-02-2026) தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மின்தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தருமபுரி
பென்னாகரம், ஒகேனக்கல், ஏரியூர், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பாப்பாரப்பட்டி, நகரை, நெருப்பூர், பி.அகரஹாரம், தாசம்பட்டி மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
திண்டுக்கல்
காந்திகிராமம், சின்னாளபட்டி, சிறுமலை, சாமியார்பட்டி, அம்பாத்துரை, பச்சமலையான்கோட்டை, திண்டுக்கல் டவுன், சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம், பழனி நகரம், மானூர், நெய்க்காரப்பட்டி, அடிவாரம், ஆயக்குடி, பூலாம்பட்டி, வடமதுரை நகரம், வெள்ளகொம்மன்பட்டி, ஊராளிபட்டி, சீதாப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பிலாத்து, சீகாளிப்பட்டி, ரெடியாபட்டி, மோர்பட்டி, சேர்ப்பன்பட்டி, நாகங்கலம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை செய்யப்படும்.
கரூர்
பள்ளபட்டி, அரவக்குறிச்சி, அண்ணாநகர், தமிழ்நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிபட்டி, பேரி சீதாப்பட்டி, ரெங்கராஜ் நகர், சௌந்தரபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, பஞ்சாபட்டி, தத்தம்பட்டி, குமடேரி, கண்ணமுத்தம்பட்டி, பாப்பையம்பாடி, வீரியம்பாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இரும்புகுளி, அய்யம்பாளையம், காக்காயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், ஆனைக்கரைப்பட்டி, புதுவாடி, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, அம்மா பட்டி, முத்து கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சாந்தைப்பேட்டை, பண்ணைப்பட்டி, அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.
மேலும் பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர், சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர், ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம், பாலம்பாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்து ரோடு, கருப்பாயி கோயில் தெரு, கச்சேறு பிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில், புதுத்தெரு, வெள்ளியனை, செல்லாண்டிபட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கனகுருச்சி, விஜயநகரம், கந்தசரப்பட்டி, முஸ்தகிணத்துப்பட்டி, ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துப்பட்டி, கணியாலம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிப்பட்டி, முத்துரெங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையப்பட்டி, வரவாணி வடக்கு, மேலப்பாகுத்தி, சி.புதூர், வெரளிப்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
தஞ்சாவூர்
தஞ்சாவூர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம், சிந்தாமணி, திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, ஒரத்தநாடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
உடுமலைப்பேட்டை
ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.உரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து, அமண்டகடவு, லிங்கனை பகுதிகளில் மின்தடை விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

