MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • லாரி லாரியாக வந்து இறங்கும் தக்காளி! வெங்காயம்! அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! ஒரு கிலோ இவ்வளவு தானா?

லாரி லாரியாக வந்து இறங்கும் தக்காளி! வெங்காயம்! அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்! ஒரு கிலோ இவ்வளவு தானா?

கடந்த சில நாட்களாக தக்காளி பெட்டி பெட்டியாக தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி சந்தையில் குவிந்து வருகிறது. அதேபோல் வெங்காயத்தின் வரத்தும் லாரி லாரியாக மூட்டையில் வந்த வண்ணம் உள்ளது.

2 Min read
Author : vinoth kumar
Published : Feb 23 2026, 07:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சமையலுக்கு முக்கியம் வெங்காயம் தக்காளி
Image Credit : stockPhoto

சமையலுக்கு முக்கியம் வெங்காயம் தக்காளி

காய்கறிகள் தமிழக உணவு முறையில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. காய்கறிகள் உணவே மருந்து என்ற பழமொழிக்கு ஏற்ப, கால்சியம், இரும்பு, வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களை வழங்கி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்கிறது. குறிப்பாக சாம்பார், குழம்பு, சட்னி, பொரியல், கூட்டு மற்றும் பல உணவு வகைகளில் தக்காளி முக்கிய பங்கு உள்ளது.

27
 வெங்காயம் தக்காளி நிலவரம்
Image Credit : Google

வெங்காயம் தக்காளி நிலவரம்

இது உணவுக்கு சுவையையும், வைட்டமின் சி, லைக்கோபீன் போன்ற சத்துக்களை வழங்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. குழம்பு, கறி, பொரியல், பிரியாணி போன்றவற்றில் வெங்காயம் இல்லாமல் சமையலை நினைத்துப் பார்க்க முடியாது. இது உணவுக்கு இனிப்பு மற்றும் மணத்தை சேர்ப்பதுடன், ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியல் பண்புகளை வழங்குகிறது.

Related Articles

Related image1
பிப்ரவரி 23ம் தேதி திங்கள் கிழமை 5 முதல் 8 மணிநேரம் மின்தடை.! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Related image2
கை நிறைய சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.. தமிழ்நாடு அரசு வழங்கும் 3 நாள் வீடியோ எடிட்டிங் பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
37
கை நிறைய அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்
Image Credit : stockPhoto

கை நிறைய அள்ளி செல்லும் இல்லத்தரசிகள்

அதேபோல் கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, முருங்கைக்காய் போன்றவை உணவுக்கு சத்து மற்றும் பல்வேறு மருத்துவ குணங்களை வழங்குகின்றன. அதுமட்டுமல்லாமல் சுவையை அள்ளிக்கொடுக்கிறது. இதனால் காய்கறிகளை கம்மியாக வாங்கி சென்றாலும் தக்காளி மற்றும் வெங்காயத்தை பை நிறைய வாங்கி செல்கின்றனர்.

47
பெட்டி பெட்டியாக வந்து இறங்கிய தக்காளி
Image Credit : our own

பெட்டி பெட்டியாக வந்து இறங்கிய தக்காளி

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தக்காளி பெட்டி பெட்டியாக தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி சந்தையில் குவிந்து வருகிறது. அதேபோல் வெங்காயத்தின் வரத்தும் லாரி லாரியாக மூட்டையில் வந்த வண்ணம் உள்ளது. இதனால் தக்காளி மற்றும் வெங்காயத்திற்கும் இடையே போட்டி போட்டு குறைந்து வருகிறது. தற்போது 4 முதல் 5 கிலோ வெங்காயம் ரூ.100க்கும், தக்காளியும் 5 கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் பச்சை காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள் சந்தோஷத்தில் உள்ளனர்.

57
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை
Image Credit : Google

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று பிப்ரவரி 18ம் தேதி காய்கறிகள் மற்றும் வெங்காயம் தக்காளி விலை என்ன என்பதை பார்ப்போம். பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 முதல் 24 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 63 முதல் 70 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 20 முதல் 22 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 40 முதல் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ30 முதல் 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 56 முதல் 62 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

67
உச்சத்தில் முருங்கைக்காய் விலை
Image Credit : Google

உச்சத்தில் முருங்கைக்காய் விலை

பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 68 முதல் 90 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 முதல் 130 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 முதல் 40 ரூபாய்க்கும், காலிபிளவர் ரூ.25 முதல் 30 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 120 முதல் 140 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 41 முதல் 46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

77
மாங்காய் விலை நிலவரம்?
Image Credit : google

மாங்காய் விலை நிலவரம்?

பீன்ஸ் ஒரு கிலோ 40 முதல் 45 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 65 முதல் 70 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 46 முதல் 51 ரூபாய்க்கும், மாங்காய் ரூ.55 முதல் 60 ரூபாய்க்கும், பூசணி ஒரு 15 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 முதல் 66 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 முதல் 27 ரூபாய்க்கும், கோவைக்காய் 25 முதல் 50 ரூபாய்க்கும், நூக்கல் 30 முதல் 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தக்காளி
தக்காளி மற்றும் வெங்காயத்தின் இன்றைய விலை
வெங்காயம்
சென்னை
காய்கறி விலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
தென் தமிழகத்தை ரவுண்டு கட்டப்போகும் மழை.. 'இந்த' 2 மாவட்ட மக்கள் உஷாரா இருங்க.. வானிலை அப்டேட்!
Recommended image2
4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்.. தமிழகத்தில் இன்று கனமழை கொட்டப்போகுது.. எங்கெல்லாம் தெரியுமா?
Recommended image3
திமுகவை சீண்டினால் தமிழ்நாடே பதிலடி கொடுக்கும்..! மதுரையில் கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்
Related Stories
Recommended image1
பிப்ரவரி 23ம் தேதி திங்கள் கிழமை 5 முதல் 8 மணிநேரம் மின்தடை.! லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!
Recommended image2
கை நிறைய சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.. தமிழ்நாடு அரசு வழங்கும் 3 நாள் வீடியோ எடிட்டிங் பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved