Gold Rate Today : வரலாற்றில் காணாத விலையை தொட்ட தங்கம்.. எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை மீண்டும் உச்சத்தை தொட்டுள்ளது. இது நகை வாங்குவோரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
2023ம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்றைய நிலவரத்தின்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து 5,565 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.160 வரை உயர்ந்து ரூ.44,520 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோல ஒரு கிராம் வெள்ளி விலையும் 20 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.76,200 எனவும் விற்பனையானது.
இதையும் படிங்க..Google Pay, PhonePe or Paytm யூசருக்கு குட் நியூஸ்.. UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் கிடையாது
இன்றைய (மார்ச் 31) நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 35 உயர்ந்து 5,590க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சவரனுக்கு 200 உயர்ந்து 44,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது வரலாற்றில் இல்லாத விலை உயர்வாகும்.
வெள்ளியை பொறுத்தவரை கிராமுக்கு 1.30 உயர்ந்து 77.50க்கும், ஒரு கிலோ வெள்ளி 77,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை உயர்வு பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க..ஏப்ரல் மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ